வீடு துடைக்கும் தண்ணீரில் இதை பயன்படுத்தினால் போதும், எந்த தொல்லையும் வராது!

94

வீடு துடைக்கும் தண்ணீரில் இதை பயன்படுத்தினால் போதும், எந்த தொல்லையும் வராது!

வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு தான் கஷ்டம் தெரியும். எவ்வளவு சுத்தம் செய்தாலும் வீட்டில் பூச்சிகள், கண்ணுக்கு தெரியாத கிருமிகள், தீய சக்திகள் என்று அடிக்கடி தொல்லைகள் இருக்கும். அதற்கு வீடு துடைக்கும் தண்ணீரில் சக்தி வாய்ந்த இந்த 1 பொருளை மட்டும் சேர்த்துக்கொண்டால் எந்த தொல்லையும் வராது.

வீடு துடைக்கும் தண்ணீரில் ஸ்பெஷலாக நாம் இந்த 1 பொருளை சேர்ப்பதன் மூலம் நமக்கு ஆரோக்கிய ரீதியாகவும் சில பிரச்சனைகள் வராது. ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகள் கிடைக்கும். அதே சமயம் வீட்டில் பூச்சி பொட்டுகள் தொல்லையிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். நமக்கு இத்தனை நன்மைகளையும் கொடுக்கக்கூடிய அந்த ஒரு பொருள் எந்த பொருள். வீடு துடைக்கும் போது அந்த பொருளை நாம் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் வாங்க.

அந்த ஒரு பொருள் வசம்பு தாங்க. இந்த வசம்பு வாசத்திற்கு வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியாலும் வீட்டுக்குள் நுழைய முடியாது. சின்ன சின்ன பூச்சி பொட்டுகள் தொந்தரவு இந்த வசம்பு வாசத்திற்கு இருக்காது. அதே சமயம் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும் இந்த வசம்பு அழித்துவிடும். ஒரு சின்ன டம்ளர் தண்ணீரில் வசம்பை போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வசம்பில் இருக்கும் வாசனை அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி விடும். பிறகு அந்த தண்ணீரை வீடு துடைக்கும் தண்ணீரில் ஊற்றிக் கொள்ளலாம். (ஒருமுறை தண்ணீரில் போட்ட வசம்பை மறுமுறையும், மறுவாரமும் பயன்படுத்தலாம். காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்).

அப்படி இல்லை என்றால் வசம்பு பொடி ஆகவே நமக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி வீடு துடைக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் அளவு போட்டு கலந்து வீடு துடைக்க வேண்டும். வெறும் வசம்பு மட்டும் பயன்படுத்தி வீடு துடைக்க முடியாது. வீடு துடைக்க தேவையான அளவு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூள் 2 சிட்டிகை, கல்லுப்பு 1 கைப்பிடி அளவு, வீடு துடைக்க பயன்படுத்தும் லிக்விட் தேவையான அளவு, கம்ஃபோர்ட் அல்லது ஷாம்பூ ஏதாவது ஒன்று சேர்த்துக்கோங்க.

நல்ல வாசத்தை கொடுக்கும். இதோடு கூடவே வசம்பு ஊறவைத்த தண்ணீர் அல்லது வசம்பு பொடி இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து இந்த தண்ணீரை நன்றாக கரைத்து வீடு துடைத்தால் வீடு தூய்மையாகவும் இருக்கும். மங்களகரமாகவும் இருக்கும். இந்த தண்ணீரை வைத்து வீட்டின் மூளை முடுக்குகளை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். அந்த இடத்தில் தங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றலும் இதன் மூலம் நமக்கு அழிந்து போகும். ஆன்மீகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்ந்த ஒரு குறிப்பு தான் இது. நீங்கள் இந்த குறிப்பை எப்படி பயன்படுத்தினாலும் சரி உங்களுடைய குடும்பத்திற்கு நன்மை மட்டும்தான் நடக்கும்.

சில வீடுகளில் வாசலில் நிறைய சின்ன சின்ன பூச்சிகள் வரும். அதாவது ஏதாவது விஷப்பூச்சிகள் உங்கள் வீட்டிற்குள் அடிக்கடி வருகிறது என்றால், பூச்சிகள் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் காவி தீட்டி வைப்பார்கள். காவி தீட்டி வைத்தால் வீட்டுக்குள் பூச்சிப் போட்டிகள் இருக்காது என்பது ஒரு நம்பிக்கை. உங்களுடைய வீட்டில் இப்படி விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருந்தாலும் வாசலில் காவி தீட்டி வையுங்கள். சிறிய கிண்ணத்தில் காவி போட்டு தண்ணீர் ஊற்றி அதை சுவர் ஓரங்களில் அப்படியே தீட்டி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் கோலம் போடும்போது காவியை பயன்படுத்தி கோலம் போடுவதும் நன்மை தரும்.