Monday, October 16, 2023
HomeMahansயார் இந்த எரும்பு சித்தர்?

யார் இந்த எரும்பு சித்தர்?

யார் இந்த எரும்பு சித்தர்?

சென்னை – திருச்சி தேசிய நெடுசாலையில் உள்ள ஒலக்கூர் என்ற ஊரில் ரோட்டிலேயே அமர்ந்து இருப்பர் இந்த .பகவான் ஸ்ரீ வீர நாராயண பெருமாள் சித்தர் ஸ்வாமிகள். இவருக்கு எரும்பு சித்தர் மற்றும் ஒலக்கூர் ஸ்வாமிகள் என்ற பெயரும் உண்டு.

எரும்பு சித்தர்:

ஸ்வாமிகளுக்கு ஒரு சமயம் காலில் காயம் ஏற்பட்டது அப்போது. அதனை அவர் பொருட்படுத்தாமல் இருந்தார். அந்த காயத்தை எறும்பூகளுக்கு உணவாக அளித்தார். இதனால இவர் எறும்பு சித்தர் என்று அழைக்க பட்டார்.

சாலை விபத்துக்களை குறைத்த சுவாமிகள்:

அந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டன. ஸ்வாமிகள் அங்கு இருந்த பிறகு, சாலை விபத்துகள் வெகுவாக குறைந்தன. அவரது பக்தர்கள் அவர் இருப்பதற்கு ஒரு ஓலை குடிசை அமைந்து கொடுத்தனர். அந்த ஓலை குடிசை இன்றும் உள்ளது. ஒரு நாள் ஸ்வாமியின் பக்தர் ஒருவர் ஸ்வாமிகளின் கால் காயத்தில் இருந்த எறும்பூகளை அகற்றி விட்டார். இதனால் ஸ்வாமிகள் அவர் மீது கோபம் கொண்டு அவரிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தார்.

கபால மோட்சம் அடைந்த சுவாமிகள்:

கபாலம் எனில் தலை. மோட்சம் எனில் வாழ்கை எனும் தொடர் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று, மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வு எனும் வீடுபேறு அடைதல். இந்துத் தொன்ம வியலில் இவ்வுலக வாழ்விலிருந்து வெளியேற முடிவு செய்த துறவிகள், யோகிகள், ஞானிகள் மற்றும் தவசிகள் தங்களின் சட உடலை இவ்வுலகிலே விட்டுவிட்டு, தங்களின் உயிர் சக்தி என்ற பிராணனை (ஆத்மா) உச்சந்தலையில் உள்ள பிரம்மரந்திரம் என்ற துவாரம் வழியாக வெளியேற்றுவதே கபால மோட்சம் எனப்படும்.

ஒலக்கூர், நல்லாத்தூர் கிராமத்தில் பல அற்புதங்கள் நிகழ்த்திய ஸ்வாமிகள் 2010 ஆண்டு சித்ரா பௌர்ணமி முதல் நாள் பிரதோஷ திரயோதசி திதியன்று கபால மோட்சம் அடைந்தார். கபாலம் மோட்சம் இதை அடைந்தவருக்கு மறுபிறவி இல்லை.
மேலும் இந்த கபால மோட்சம் என்பது அபுர்வமாக ஒரு சில சித்தர்களுக்கு தான் கிடைக்கும். வடலூர் ராமலிங்க ஸ்வாமிகள் கூட கபால மோட்சம் அடைந்த சித்தர்.

எறும்பு சித்தர் சமாதி எங்குள்ளது:

எறும்பு சித்தர் சமாதி அமைவிடம் சென்னை – திண்டிவனம் சாலை, திருச்சி
NH – 45 மெயின் ரோடில் நல்லாத்தூர் ஏரிக்கரை, பள்ளிபாக்கம் கூட்டு பாதை இடது புறம் அற்புதமான ஜீவசமாதி அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + seven =

Most Popular