தசரதன் ஒரு நொடிகூட இவரை பார்க்காமல் இருக்க மாட்டாராம்.

540

ராமபிரான் கம்பீரமான தோற்றம்உடையவர். கைகள் முழங்கால் வரை இருக்கும். பேரழகு. பார்ப்பவர் அவருடைய ஒரு பகுதியையே முழுமையாக காணமுடியாது. அப்பேர்பட்ட அழகு. தசரதன் ஒரு நொடிகூட இவரை பார்க்காமல் இருக்க மாட்டாராம். இவரின் மேனியில் மல்லிகைபூ விழுந்தால் கூட ஏதாவது ஆகிவிடுமோ என அஞ்சுவாராம். அப்படி வளர்த்த ராமபிரானை கைகேயின் வரத்தால் காட்டுக்கு போ என கூற முடியாமல் மூர்ச்சித்து விழுந்தாராம். இதை அறிந்த ராமர் எப்படி துன்பப் பட்டிருப்பார்.

இப்படி வரிசையாக சொல்கிறார் இதிலே ஒரு சுவாரஸ்யமாக ஒன்று கூறுகிறார் அதை பார்ப்போம்

இந்த குரங்குகளை எல்லாம் கூட்டிக் கொன்டு சேது பந்தனம் கட்டி நடந்து இலங்கைக்கு சென்று இரவு நேரம் அனுமன் என்ன செய்தாராம் பெரிய பாறையை நல்லா வழவழப்பாக இருக்கும் பாறையை பகவான் ஓய்வு எடுக்கவும் நிம்மதியாக தூங்கட்டும் என தூக்கிகொன்டு வந்து போட்டு விட்டு ராமபிரானை தூங்கசொல்லி விட்டு அங்கிருந்த அனைத்து குரங்குகளுக்கும் பகவானை தொந்தரவு செய்ய கூடாது என கூறிவிட்டு எதிரியின் நாட்டுக்கு வந்திருக்கிறோம் அந்த ராவனனால் பகவானுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என காவல் காக்க சற்று தூரமாக பார்க்க அனுமன் சென்றதும் இந்த குரங்குகள் எல்லாம் ஒன்றுகூடி ராமபிரான் எப்பேர்பட்ட அழகாக இருக்கிறார் நாளை போரெல்லாம் முடிந்து சீதா தேவியை மீட்டு மீன்டும் அயோத்தி சென்று விடுவார் இது தான் சமயம் அனுமனும் சற்று தூரமாக காவல் செய்கிறார் எனவே நாம் ஒவ்ஒருவராக ராமபிரானை தொட்டுபார்த்து பேரானந்தம் அடைவோம் என்று முடிவுசெய்து
ஒரு குரங்கு அவர் அருகில் வந்ததாம் ஆஹா என்னே அழகு அதனுடைய கையை பார்க்கின்றதாம் சொறசொற என முள்ளுமாதிரியாகி இருக்கின்றதே ஐயோ தொட்டால் ராமபிரானுக்கு வலிக்குமே என்னசெய்வது யோசித்ததாம் நம்மிடம் மிருதுவாக நம் வால் இருக்கிறதே இதைகொன்டு தொட்டுபார்த்து ஆனந்தமடைவோம் என தொட்டு தொட்டு பார்த்து தன் வால் எத்தனை பாக்கியம் செய்தது என வாலை எடுத்து கண்களில் ஒற்றிக்கொன்டு முத்தமிட்டதாம் .

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !