ஒருவன் மரிக்கும் காலத்தில் அவன் ஜீவனைக் கவர்வதற்காகவே காலன் (அ) இயமன் நியமிக்கப்பட்டிருக்கிறான். உலகில் வாழ்கின்ற ஜீவர்கள் அவரவர் செய்யும் தோஷங்களால் ஆயுள் குறைந்து மரிக்கின்றனர். பாவ காரியங்களைச் செய்பவர்கள் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள். அறநெறிகளிலிருந்து நழுவி வாழ்பவர்கள் யமலோகத்தில் வேதனைப்படுகிறார்கள். தேவாராதனை செய்யாத தினம் மஹான்களையும், நல்லவை ஆற்றுவாரையும், வழிபடாமை, சாஸ்திரம் உணராத நாள் வீணேயாம். எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதில்லை. அது கர்ம வினையினால் உண்டானது என்றறிந்து மீண்டும் பிறவாமலிருக்க நற்கருமங்கள் ஆற்றவேண்டும். அழியும் உடல் மீது ஆசை வைக்காமல் பகவத், பாகவத, ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். பிறப்பினால் ஏற்படும் துன்பம், மற்றும் கர்மாதிகளை எண்ணி ஜீவனானவன் நல்லொழுக்கத்துடனும், நற்பண்பு களுடனும் வாழவேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் நிரதிசய இன்ப வீடாகிய பரமபதத்தை அடைகிறான். பூர்வ ஜன்மத்தில் நன்னெறியில் வாழ்ந்து, தான தர்மங்களைச் செய்து வந்த சேனன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகை அடைகிறான். கருவுற்ற ஆறு மாதத்தில் கரு கரைந்து ஒரு திங்களில் விழுந்தால் ஒரு நாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றானால் மூன்று நாட்களும், நான்கானால் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆறானால் ஆறு நாட்களும் கருவுற்ற தாய்க்கு மட்டும் சூதகத் தீட்டு உண்டு. தந்தைக்குத் தீட்டு இல்லை. செய்ய வேண்டிய கர்மாவும் ஒன்றும் இல்லை.
கரு அழியாமல் குழந்தை பிறந்து; மூன்று வயதுக்குள் இறந்துவிட்டால் அதை உத்தேசித்து ஊர் குழந்தைகளுக்குப் பால் சோறும், தயிர் சோறும் கொடுக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து வயதுக்குள் மரித்தாலும் அவ்வாறே பாலர்களுக்கு அன்னம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தை இறந்தாலும் தீர்த்தம், பால், பாயாசம் கொடுக்கலாம். புனரபி மரணம் என்பதை உணர்ந்து மறுபிறவி இல்லாமல் மீள தான தர்மங்களைச் செய்யாமல் வாழ்நாளை வீண் நாளாக்கினால் ஒருநாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியில்லா வறியோனுக்கு மகனாகப் பிறந்து வருத்தமுற்று மடிந்து மீண்டும் பிறப்பான். அடுத்த பிறவியில் அரசனாக வேண்டும், சகலகலா நிபுணன் ஆக வேண்டும் என்றெண்ணாமல் பிறவியே இல்லாமல் இருப்பதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும். புனித நீராடி தூய்மை அடையலாம். உண்மை பேசுதல், கீழ்ப்படிதல், இன்சொல் போன்றவை கொண்டு சகல சாஸ்திர சம்பன்னனாக வேண்டும். தனக்குள்ள வருவாய்க்கேற்ப தானதருமங்கள் செய்து வாழ வேண்டும்.
ரெளரவ நரகம்!
பிறருடைய குடும்பத்திற்கு கேடு
விளைவித்தல் அளிப்பது. அவர்களது
பொருற்களை பறித்தல்.
தண்டனை!
சூலாயுதம் கொண்டு குத்தி துன்புறுத்தல்.,கருடன்
தொடரும்…
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸
கருட மஹிமை
நாம் அனைவரும் ஆகாயத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை பார்க்கின்றோம்,
ஆனால் அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒளி வீசினாலும் ஒரு சூரியனின் தேஜஸ்ஸின் முன் அவைகளின் ப்ரகாசம் குறைந்து போகும்,
அது போன்று, இவ்வுலகினில் காளிதாஸன் முதல் எண்ணிறந்த கவிகள் தோன்றினாலும் நம் ஸ்வாமியான ஸ்ரீவேதாந்த தேசிக கவியின் முன்பு அவர்களின் சொற்கள், ப்ரகாசம் சிறிது குறைவாகத்தான் இருக்கும்,
நம் ஸ்வாமி ஸ்ரீவேதாந்த தேசிக கவி, அவர்தம் ஆசார்யரான ஸ்ரீ கருட பகவானைப் பற்றி அருளிச் செய்த
கருட பஞ்சாசத் என்ற அற்புதமான கருடவைபவ ஸ்தோத்திரத்தின் ஐந்தாவதாக அமைந்த ஸ்லோகத்தில் ஒன்று முதல் பத்து வரையிலும் உள்ளனவும்,
நூறு,ஆயிரம்,லக்ஷம்,கோடி ஆகியனவுமான எண்களைக் கூறி,கடைசியில் கருட பகவானின் எண்ணற்ற தன்மைகளை அருளிச் செய்து தமது கவிதா விலாசத்தை வெளிப்படுத்தும் விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளது, அச்சுவையில் நாமும் சிறிது திளைத்து மகிழ்வோம் வாரீர்,,,
கருட பஞ்சாசத்தின் 5,ம் ச்லோகம்
ஏகோ விஷ்ணோ : த்விதீய : த்ரிசதுர விதிதம்
பஞ்ச வர்ணீ ரஹஸ்யம்
ஷாட்குண்ய ஸ்மேர ஸப்த ஸ்வத கதி : அணிமாத்
யஷ்ட ஸம்பந் நவாத்மா
தேவோ தர்கீராரி : தசசத நயநாராதி
ஸாஹஸ்ர லக்ஷே
விக்ரீடத் பக்ஷகோடி : விகடயது பயம்
வீத ஸங்க்யோதயோ ந :
இந்த ச்லோகத்தின் நமது ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிக கவி
கருட பகவான் ஒப்பற்ற வைபத்தை உடையவராவார், ஸ்ரீமந் நாராயணனின் இரண்டாவது வ்யூஹமான
ஸ்ரீஸங்கர்ஷண பகவானின் அம்சமாவார், இவரின் ஐந்து அக்ஷரங்களைக் கொண்ட கருட மந்த்ரத்தின் ரஹஸ்யத்தை இவ்வுலகின் கண் மூவர் அல்லது நால்வர் தான் நன்கு அறிந்தவர்களாவார்,
கருட மந்த்ரத்தின் உட்பொருளாய் விளங்குகிறார் ஸ்ரீகருடன், இவர் ஞானம்,சக்தி,பலம்
ஐச்வர்யம்,வீர்யம்,தேஜஸ்,என்ற ஆறு குணங்களால் நிரம்பப் பெற்றவர்,
ஏழு ஸ்வரங்களான 1) நிஷாதம்,2) ருஷபம்,3) காந்தாரம்,
4) ஷட்ஜம், ) மத்யமம்,6) தைவதம் ,7) பஞ்சமம் ஆகியவைகளை தன்னுடையதான அங்கங்களாகக் கொண்ட ஸாம வேத ரூபமானவர்,
1) அணிமா/சரீரத்தைச் சுருக்குதல்
2) மஹிமா/சரீரத்தை பெரிதாக்குதல்
3) லகிமா/சரீரத்தை லேசாக்குதல்
4) கரிமா/சரீரத்தை கனமாக்குதல்
5) வசித்வம்/அனைத்தையும் தன் வசமாக்குதல்
6) ஈசத்வம்/அனைவருக்கும் தலைவனாய் இருத்தல்
7) ப்ராப்தி/ நினைத்ததை அடைதல்
8)ப்ராகாம்யம்/நினைத்விடத்திற்கு செல்லுதல் ஆகிய எட்டு சித்திகளையும் பெற்றவர்,
அவ்வப்போது புதிதாகக் காணப்படுகின்றதான அழகிய வடிவங்களை உடையவர் (நவ ஆத்மா/புதியதான திருமேனிகளை உடையவர்),
இந்திராதி தேவர்களுக்குப் பகைவர்களான ஆயிரக்கணக்கான அசுரர்களை தனது சிறகுகளின் முனைகளால் விளையாட்டாக ஒழித்தவர்,
தம் அடியார்களைக் காத்து ரக்ஷிப்பதற்காக அவ்வப்போது ஏற்றதான வடிவுகளைக் கொண்டு அவதாரம் செய்வதால் எண்ணற்ற(லக்ஷம், கோடி) அவதாரங்களை உடையவராவார்,
நாகங்களுக்கு இயற்கையிலேயே பகைவராக அமைந்த ஸ்ரீகருட பகவான் நமக்கு ஸம்ஸார பந்தத்தால் வரும் அச்சங்களை ஒழித்தருள வேண்டும்,என்று கவி பாடுகிறார்
இவ்வாறு ஒன்று முதல் நூறு ஆயிரம் லக்ஷம் கோடி என்ற எண்ணிக்கைகளைக் கூறி அவற்றால் ஸ்ரீகருட பகவானின் சிறப்புத் தன்மைகளை வர்ணிக்கும் திறன் நமது ஸ்ரீவேதாந்த தேசிக கவியாலன்றி எத்தனை காளிதாச கவிகள் தோன்றினாலும் அவர்களுக்கு கை கூடி வராது,
ஸ்ரீகருட பகவானின் கழலடி போற்றி
