மார்க்கண்டேய புராணம் – பகுதி 2 ஜைமினியும், பறவைகளும்

627

கருட வம்சத்தில் பிறந்த ஒரு பறவைக்கு கங்கன், கந்தரன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர். ஒரு சமயம் கங்கன் கைலாயத்துக்கு அருகில் உள்ள ஒரு நந்தவனத்துள் சென்றது. அவ்வமயம் அங்கு வித்யுத்ரூபன் என்னும் அசுரன் தன் மனைவியுடன் மகிழ்ந்து இருக்கையில் இப்பறவை மீது கோபம் கொண்டு கங்கன் கழுத்தை வெட்டிக் கொன்றான். அதனால் வருத்தமும், கோபமும் கொண்ட கந்தரன் வித்யுத்ரூபனைக் கொல்லும் உறுதியுடன் சென்று அவனுடன் போர் புரிந்து அவன் மார்பைப் பிளந்து கொன்றது. அசுரன் மனைவி பயந்து கந்தரன் காலில் விழுந்து தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டி, பறவை ரூபமுடன் இருவரும் இன்பம் துய்த்திட அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு தார்ஷி என்று பெயரிட்டு வளர்த்தனர். அதுவே வபுஸ் என்ற அப்ஸரஸ் ஆவாள். அவள் மந்தபாலன் மகன் துரோணனை மணந்தாள்.

ஒருநாள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது அருச்சனன் பகதத்தினை நோக்கி எய்த அம்பினால் அடிபட்டு விழ துர்வாசர் சாபம் நீங்கி வபுஸ் தன் சுயரூபம் பெற்றுத் தேவலோகம் சென்றாள். தார்ஷியின் வயிற்றில் இருந்த நான்கு முட்டைகள் போர்க்களத்தில் வீழ்ந்தன. அப்போது அங்கே தற்செயலாய் ஒரு யானையின் கழுத்திலிருந்த மணி அறுந்து முட்டைகள் மேல் விழுந்து அவற்றை மூடிக்கொண்டது. போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் இருந்து பீஷ்மரைக் காண பலர் வர, அவர்களில் சமீகர் என்ற ரிஷியும் ஒருவர். அவர் முட்டைகளிலிருந்து வெளிவந்திருந்த பறவைகளைக் கண்டு கருணை உள்ளத்துடன் அவற்றை எடுத்துச் சென்று தன் ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். ஒருநாள் அவை பூவுலகைச் சுற்றித் திரும்பி வந்து மகிழ்ச்சியுடன் இருந்தன.

தொடரும்…

ஓம் ம்ருத்யுன்ஜெய லிங்கமே போற்றி!

🌼#திருநாவுக்கரசர்_தேவாரம்.🌼
#நான்காம்_திருமுறை~#076_பொது.
தனித் திருநேரிசை.
பாடல் எண் : 4.

#காயமே கோயி லாகக்
கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக
மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப்
போற்றவிக் காட்டி னோமே.

திருச்சிற்றம்பலம்.

https://swasthiktv.com/madhura-gaanam-registration/