ராமர் ராவணனனுக்கு சீடனான கதை

357

ராம ராவண யுத்தத்தில் தனது கடைசி அம்பை எய்த பிறகு ராமபிரான் தனது தம்பி லக்குவனிடம் பின்வருமாறு கூறினார்:

“சீக்கிரமாக ராவணனிடம் சென்று அவர் இறக்குமுன் அறிவுரைகளை பெற்றுக்கொள். அவர் அரக்கனாக இருந்தாலும் ஒரு மிக பெரிய அறிஞர்”

லக்குவனும் தமையனின் கூற்றை ஏற்று போர்க்களத்தில் இராவணன் இருக்குமிடம் வந்து “ஓ அசுரர்களின் அரசனே உனது ஞானத்தை உன்னுடன் இறந்து விடாமல் எனக்கு அளி அதன் மூலம் நீ செய்த பாவத்திலிருந்து விடுபடுவாயாக” என்று கூறினான்.

ராவணன் மடியும் நிலையில் இருந்தாலும் தனது தலையை மட்டும் அசைத்து முடியாது என்பது போல் சைகை செய்தான்.

கோபம்கொண்ட லக்குவன் ராமபிரானிடம் வந்து “அவன் எப்பொழுதும்போல் திமிர் பிடித்தவனாக இருக்கிறான் எதையும் கூற மறுக்கிறான்” என்று முறையிட்டான்

ராமர் மிகவும் அமைதியாக “நீ ராவணனுக்கு எந்த பக்கத்தில் அமர்ந்து கேட்டாய்?” அதற்கு லக்குவன் “நான் ராவணனின் தலை பக்கம் போய் அமர்ந்து கேட்டேன்” என கூறினான்

ராமபிரான் சிரித்த வண்ணம் தனது வில்லை தரையில் வைத்துவிட்டு ராவணனை நோக்கி சென்றார்

லக்குவன் ராமர் குனிந்து ராவணனின் கால்களை தொட்டு வணங்குவதை ஆச்சர்யத்தோடு கண்டான்

பிறகு இரு கைகளையும் கூப்பி மிகவும் பணிவுடன் ராவணனிடம் இலங்கை அரசே நீ எனது மனைவியை கவர்ந்ததனால் நான் உன்னை தண்டிக்க வேண்டியதாயிற்று. இப்போது நீ எனது எதிரி அல்ல ஆகையால் சிரம் தாழ்த்தி வணங்கி உனது ஞானத்தை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நீ தயை கூர்ந்து அதை அளிப்பாயாக இல்லையேல் அந்த ஞானம் இவ்வுலகுக்கு தெரியாமல் உன்னுடனே அழிந்து விடும் என்று வேண்டினார்.

லக்குவன் ஆச்சர்யப்படும்படி ராவணன் தனது கண்களை திறந்து கைகளை உயர்த்தி ராமபிரானை நோக்கி வந்தனம் செய்தான். “நீ ஒரு மாணவன் எப்படி ஆசிரியரிடம் மரியாதையுடன் கேட்பாரோ அதை போல் என்னிடம் கேட்டாய் அனால் உனது தம்பியோ மிகவும் அதிகாரத்துடனும் கோபத்துடனும் கேட்டதனால் மறுக்க வேண்டியதாயிற்று. எனக்கு மிகவும் குறைவான நேரம் இருப்பதால் நான் இரண்டு முக்கிய நிகழ்வுகளை கூறுகிறேன்”

  • கெட்ட எண்ணங்கள் உன்னை மிகவும் சுலபமாக கவர்ந்துவிடும். பிறகு பொறுமையின்மையால் அவதி படுவாய் ஆகையால் கெட்ட எண்ணங்களை விட்டொழிய வேண்டும்
  • எது ஒருவருக்கு மிகவும் சிறந்ததோ அது ஈர்க்க படமாட்டாது. நீ அதை அல்ப காரணங்களை கூறி கலைத்து விட முற்படுவாய் மேலும் அதை தள்ளி போடுவதை ஞாயப்படுத்துவாய். ஆகையால் நல்லதை காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்

அதனால்தான் நான் பொறுமையின்றி உனக்கு தெரியா வண்ணம் சீதையை அபகரித்தேன். இதுவே எனது கடைசி வார்த்தைகள். இதுவே நான் உனக்கு அளிக்கும் ஞானம் என்று கூறி மடிந்தான்.

இதிலிருந்து இரண்டு பாடங்கள் நமக்கு கிடைக்கிறது:

ஒன்று எதையும் கற்கும்போது மிகவும் பணிவுடனும் அமைதியாகவும் இருக்க வேண்டும்

இரண்டு தீய எண்ணங்களை விட்டு விட்டு நல்ல செயல்களை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும்