பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?

333

பாண்டு உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.

பாண்டவர்களும் அவர்களது தந்நதை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார்.

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?

யாராவது பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.

ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.

அதுமற்ற‌வர்கள்கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும்அது தெரிகிறது.
கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும் விறகைசுமந்துவந்தார்கள். அவர்கள் க‌ளைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.

சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க ,சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம்சத்தியத்தை கிருஷ்ணர்வாங்கிக் கொள்கிறார்

தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகிவிட்டது.

துரியோதனன்,பாண்டவர்களை அழிப்பதற்கு ,போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நாளைக்குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான்.

போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான்,கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.

இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்இந்த உண்மையை தெரிந்து கொள்ளமுடியவில்லையேஎன்று ஜோதிடத்தில் நம்பிக்கைஇழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று கேட்கிறான்.

அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயேஇப்படி கூறலாமா?என்று சொல்கிறார்.. ஜோதிடத்தில் அனைவருடையபிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.

ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன்என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.
அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாருபாருங்க பதில்.

அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு???

இந்த பதிலைகேட்டவுடன் சகாதேவனுக்குதூக்கிவாரிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம்.

எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமேதங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.

மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!

இந்த ரகசியமானது காஞ்சிமகா பெரியவரிடம் இருந்து உதிர்ந்தது.