சிவபுராணம் பாகம் 39

1019

அமைதி காக்கும் சிவபெருமான்

கைலாயத்தில் சிவனுடன் இருந்த அன்னை பார்வதி தேவி தேவர்களின் இடர் பாடுகளை நீக்கி அவர்களை காத்தருள வேண்டும் என்று கூறினார். ஆனால், எம்பெருமானோ எவ்வித மான பதிலும் கூறாமல் அமைதி காத்தார்.

இவை யாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கணபதியும், கந்தனும் தன் தந்தையிடம் பணி ந்து ஏன்? இவ்விதம் அமைதி கொண்டுள்ளீர் கள் என கேட்டனர்.

எம்பெருமானோ அனைத்திற்கும் காலம் உள் ளது. ஏனென்றால் தேவர்களுக்கு இன்னல்க ளை உண்டாக்கி மானிடர்களை காரணமின்றி அழித்து வரும் அந்த திரிபுரத்தை ஆளும் வேந்தர்கள் சிறந்த பக்தர்கள் ஆவார்கள்.

நான் அமைதி கொள்ள காரணமும் இதுவே. ஒருவர் செய்யும் பாவங்களை கொண்டு மட்டு ம் அவர்களை அழித்தல் என்பது சரியானதொ ரு தீர்வாக அமையாது. அவர்கள் செய்த நற்ப லன்கள் மற்றும் தீய பலன்கள் ஆகியவற்றை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் நாம் வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.

திருமாலால் தோற்றுவிக்கப்பட்ட மாய புருஷ ர்களின் வலைகளில் விழுந்த அவர்கள் மீண்டு தன் பழைய பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும், அவர்கள் என் மீது கொண்ட பக்தியால் அவர்கள் செய்த புண்ணியங்களே அவர்களை இதுவரையும் காத்துக்கொண்டு வருகின்றது.

அவர்கள் செய்யும் பாவங்கள் அவர்களால் செய்யப்பட்ட புண்ணியத்தை விட அதிகரிக்கு ம்போது அவர்களின் அழிவானது ஆரம்பமா கும் என்று கூறினார். அப்படியானால் அசுரர் களின் அழிவு காலம் இன்னும் உருவாகவில் லையா தந்தையே? என்று கணபதி எம்பெரு மானிடம் வினவினார்.

கணபதியின் வினாவிற்கு எம்பெருமான் காலம் அனைத்திற்கும் பதில் உரைக்கும். அதுவரை நாம் அமைதி கொள்ள வேண்டும் என்று கூறினார். மாய வித்தகர்கள் விதைத்து விதையான அதர்மம் அசுரர்களை தர்மத்தின் வழி நடக்கவிடாமல், அவர்கள் செய்து வந்த புண்ணியத்தின் பலன்கள் யாவற்றையும் அழித்தது.

மென்மேலும், அவர்கள் புரிந்து வந்த பாவச் செயல்கள் அவர்களை முழுமையாக அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றது.

விதையான அதர்மம் காலத்தின் ஓட்டத்தால் விருட்சகமாக வளர்ந்தது. மேலும், திரிபுர வேந்தர்களின் அரசாட்சியில் தர்மம் என்பது அழிந்து அதர்ம செயல்கள் வெளிப்பட்டன. இவர்கள் பெற்ற வரமானது அறமற்ற செயல் களால் அழிவுக்கு இட்டுச் சென்றது.

மறுபக்கமோ இவர்களால் பல இன்னல்களு க்கு ஆளான தேவர்கள் எம்பெருமானை நோக்கி செய்த தவமானது பூர்த்தியடையும் காலமும் உதயமானது. திருமாலும், தேவர்களு ம் எம்பெருமானை எண்ணி செய்த தவத்தால் அகம் மகிழ்ந்த சர்வேஸ்வரன் திருமாலுக்கும், தேவர்களுக்கும் காட்சி அளித்தார்.

சிவபெருமானை காண பல கோடி ஆண்டுகள் தவமிருந்து தவத்தின் பயனாக காட்சியளித்த எம்பெருமானின் திருவுருவத்தை கண்ட தேவர் கள் பணிந்து வணங்கினார்கள். பின்பு, அவர்களை நோக்கி என்னை எண்ணி தவம் மேற்கொள்ள என்ன காரணம் என்று அனைத் தும் அறிந்த எம்பெருமான் வினவினார்.

தங்களை எண்ணியவரின் சங்கடங்களை அறிந்து, அதை களையக்கூடியவரான சர்வே ஸ்வரா அனைவரிடத்திலும் குடி கொண்டுள்ள பரம்பொருளான தங்களை, வழிபடுபவர்கள் அடைந்த இன்னல்களை போக்கும் கருணைக் கடலே! இந்த பிரபஞ்சத்தின் ஆதியும், அந்தமு மாக இருக்கும் ஜகத்குருவே தாரகாசுரனின் புதல்வர்களான அசுரர்கள் மூவரும் அவர்களி ன் தவத்தின் பயனாக எங்கும் தன் விருப்பப் படி பறந்து செல்லும் திரிபுரங்களை கொண்டு தேவர்களுக்கும், பூமியில் வாழும் உயிரினங்க ளுக்கும் செய்யும் இன்னல்கள் என்பது மிகவு ம் அதிகமாக உள்ளது பிரபுவே.

அவர்கள் இழைத்த இச்செயலினால் உயிர் மீது கொண்ட அச்சத்தினால் பூமியில் வாழும் உயிர்கள் யாவும் தங்களின் கர்மாக்களை சரிவர செய்ய இயலாமல் இருக்கின்றனர்.

அதனால் எங்களின் பலமானது வலிமை இழந்து கொண்டே வருகிறது. ஆனால், திரிபுர அசுரர்களை எளிதில் அழிக்க இயலாதவாறு வரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர். அதனால் அவர்களை அழிப்பது எங்களால் செய்ய இயல வில்லை என்று கூறி திரிபுர அசுரர்களை அழித்து எங்களை காக்க வேண்டும் என்று கூறினார்கள்.

பிரம்மாண்டமாக தயாராகும் ரதம்

எம்பெருமான் தேவர்களை நோக்கி திருமாலா ல் உருவாக்கப்பட்ட மாய ரூபிகளின் செயல்பா டுகளால் தர்மத்தை விடுத்து அதர்ம வழியில் செல்லும் அசுரர்களை சம்ஹhரம் செய்வேன் என்றும், திரிபுரத்தின் அழிவானது நெருங்கி விட்டது என்றும் கூறினார்.

மேலும், இதுவரை அவர்களை அரணாக இரு ந்து பாதுகாத்து வந்த பு+ஜைகளின் பலனான து அகன்றுவிட்டது என்றும் கூறினார். இதைக் கேட்ட தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பின் தலைமேல் தங்கள் கரங்களை குவித்துக் கொண்டு சிவபெருமானை வணங்கினார்கள்.

அசுரர்களை அழிப்பதற்கு தகுந்த ரதத்தினை உருவாக்குங்கள் என்று கூறி அவ்விடத்தை விட்டு மறைந்தார். எம்பெருமானின் கூற்றுக ளை கேட்ட அனைத்து வானுலக தேவர்களும் மகிழ்ச்சியில் இறைவனை பலவாராக துதித்து போற்றினார்கள்.

பின்பு, தேவர்களின் வேந்தனான இந்திரதே வன் தேவ லோகத்தின் தச்சகராக விளங்கும் விஷ்வகர்மாவை அழைத்து அசுரர்களுடன் போர் புரிய ரதத்தினையும், தேவையான ஆயுதங்களான தனுசு மற்றும் பாணங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பினையும் ஒப்படைத்தார். விஷ்வகர்மாவும் இப்பணியை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

திரிபுரர்களை அழிப்பதற்காக எம்பெருமான் அமர்ந்து போர் புரிவதற்கு தேவையான ரதத்தை உருவாக்கும் பொருட்டு தேவர்களின் சிற்பிகளாக விளங்கக்கூடிய விஷ்வகர்மா தன்னுடைய முழு படைப்புத் திறனையும் புகுத்தி அனைத்துலகத்திற்கும் மகா தேவராக இருக்கும், தேவர்களுக்கு எல்லாம் தேவராக வும், அசுரர்களுக்கு எல்லாம் அசுரர்களாகவும், பிரபஞ்சத்தினை தன்னுள் உள்ளடக்கிய சிவபெருமானுக்காக காலத்தை சிந்தையில் கொள்ளாமல் நுட்பமான செயல்பாடுகளால் உருவாக்கினார்.

மிகவும் அழகிய வடிவமும், பிரமிக்கத்தக்க வகையில் வேலைப்பாடுகளும் கொண்ட ரத மானது விஷ்வகர்மாவின் பங்களிப்பு மட்டு மில்லாமல், தேவர்களின் பங்களிப்புடனும் சேர்ந்து உருவாகியது.

எம்பெருமான் போர் புரிய தனித்துவமாக உரு வாக்கப்பட்ட ரதமானது பதினான்கு உலகத்தி ல் இருந்து கிடைக்கப்பெற்ற பொன்னை கொண்டும், ரதத்தின் சக்கரங்கள் என்பது வெப்பமும், குளுமையும் கொண்டதுமாகவும், அதாவது ஆதவன் வலது புறமாகவும் சந்திரன் இடதுபுற சக்கரங்களாகவும் விளங்கின.

இச்சக்கரங்களை எழில்படுத்த நட்சத்திரங்கள் எல்லாம் அலங்கார பொருட்களாவும், திரைச் சீலைகளாகவும் பயன்படுத்தப்பட்டன. மந்திர கிரியே (மலை) ரதமாகவும், அந்த ரதத்தின் சக்கரங்களின் இருசுகளாக (வண்டியச்சு) அஸ்தகிரியும், உதயகிரியும் விளங்கின.

ஆகாயத்தை தொடும் விந்திய மலையானது ரதத்தின் நிழற்குடையாகவும், அந்த குடையை அழகுடன் காட்ட, மந்திர மலையானது குடையி ல் உள்ள கொம்பாகவும், திசைகள் யாவும் ரதமானது பயணிக்கும் தடமாகவும், பிரம்ம தேவர் ரதத்தின் சாரதியாகவும் அமர்ந்து அயத்தினை (குதிரையினை) கட்டுப்படுத்தும் கடிவாளத்தைக் கையில் ஏந்தினார்.

பிரணவம் என்பது அயத்தினை வேகப்படுத்த பயன்படும் சாட்டையாகவும், வேதங்களான (ரிக், யஜர், சாம மற்றும் அதர்வன) நான்கும் ரதத்தினை இழுத்து செல்லும் அயங்களாயின.

மேருமலையானது எம்பெருமான் பயன்படுத்து ம் வில்லாகவும், எம்பெருமான் கழுத்தில் வீற்றிருந்த வாசுகி வில்லில் உள்ள நாணாக இருபுறங்களிலும், மங்கல ஒளியை எழுப்பும் சிறு மணிகளாக சரஸ்வதி தேவியும், அந்த வில்லில் உள்ள பாணமாக திருமாலும், இந்த பிரபஞ்சத்தில் பிரமாண்டமாக காட்சியளித்த யாவும் அமைக்கப்பெற்ற அரிதான எழில்மிகு அந்த ரதத்தினை உருவாக்கினார்.

பின்பு, தன்னுடைய வாழ்க்கையின் பயனை அடைந்ததாக இந்த ரதத்தினை உருவாக்கிய விஷ்வகர்மா எண்ணினார். மேலும், இந்த அரிய பொன்னான வாய்ப்பினை அளித்த தேவர்களின் வேந்தரான தேவேந்திரனுக்கு தனது நன்றியை மனதார கூறினார்.

போருக்கு செல்லும் சிவபெருமான்

ரதத்தின் பணிகள் யாவும் நிறைவுற்றவுடன் தேவர்கள் அனைவரும் ரதத்தினை கண்டு மெய் மறந்தனர். பின்னர் தன் இயல்பு நிலை க்கு திரும்பிய தேவர்கள் எம்பெருமானை எண்ணி தியானித்தனர். எம்பெருமானும் போருக்கு செல்வதற்கு தேவையான ஆடை, அலங்காரத்தோடு தேவர்கள் முன்னிலையில் தோன்றினார்.

அவ்வகை சிகையலங்காரத்துடன் ரதத்தில் அமர்ந்தார். அவ்வேளையில் ரதத்தின் அருகி லிருந்த முனிவர்கள் அனைவரும் ‘வெற்றி வெற்றி” என்று முழக்கமிட்டனர். அகிலத்திற்கு ம் அன்னையான பார்வதி தேவி எம்பெருமா னின் அருகில் அமர்ந்து திரிபுர சம்ஹhரத்தை காண வேண்டினார்.

பின்பு இந்திரன் முதலிய தேவர்கள் அனைவ ரும் அவர்களது விமானங்களில் அமர்ந்து யுத்தத்திற்கு தயாராக இருந்தனர். ரதத்தில் தேவி அமர்ந்த பின்பு எம்பெருமான் பிரம்ம தேவரை கண்டு புறப்படலாம் என்று கூறினார்.

சிவனின் ஆரோகணத்தை கேட்ட பிரம்ம தேவர் கடிவாளத்தை இயக்கி அயத்தினை இயக்கினார். ரதமானது புறப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரம் செல்வதற்குள் ரதத்தின் இருசுகள்(வண்டியச்சு) முறிந்து ரதம் நின்றது. இருந்தும் சர்வ வல்லமை கொண்ட சிவபெரு மான் அருகில் இருக்கும்போது வேறு எவரின் நினைவுகளும் இன்றி முழு முதற்கடவுளான விக்னங்களை களைபவரான விக்னேஸ்வர னை வணங்காமல் போருக்கு புறப்பட்டனர். இவர்களின் செய்கையால் கோபம் கொண்ட விநாயகர் தேரின் அச்சை முறித்து தேர் புறப்ப டுவதில் தடையை ஏற்படுத்தினார்.

இப்போது எம்பெருமான் தனது திருவிளையா டலை தொடங்கினார். அதாவது, கணபதியை வணங்காது எச்செயலை தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டாது என்று வரமளித்த சிவபெருமானே, கணபதியை வணங்காது ரதத்தில் அமர்ந்து ரதத்தை புறப்படச் சொன்னார்.

தன் தந்தையான எம்பெருமான் தன்னை வண ங்காது புறப்பட்டதாலும், தேவர்கள் அனைவரு ம் தன்னை மறந்தமையாலும், ரதத்தின் இருசு களை முறித்து திரிபுர பயணத்தில் தடையை உண்டாக்கினார் விநாயகர்.

தேவர்கள் அனைவரும் ரதத்தின் வண்டியச்சு முறிந்ததை கண்டு அச்சத்தோடு திகைத்து நின்றனர். இதன் காரணத்தை அறிந்த சிவபெருமான் தன் மைந்தனான கணபதியை நினைத்து செய்யும் செயலானது எவ்விதமான தடையுமின்றி வெற்றி பெற வேண்டும் என திருவுள்ளம் கொண்டார்.

அதனால், சிவபெருமான் பிரம்ம தேவரிடம் கணபதியை வணங்காது தொடங்கிய எந்தவொரு செயலும் வெற்றிக் கொள்ளாது. ஆகவே, அனைத்து தேவர்களும் கணபதியை வணங்கி அவருடைய ஆசியை பெறுமாறு கூறினார்.

பின்பு தேவர்கள் தன் தவறினை அறிந்து கணபதியிடம் இழைத்த பிழையை மன்னித்து, இங்கு நடைபெறும் எந்த செயலும் தோல்வி கொள்ளாமல் வெற்றி அடைய அனுக்கிரகம் வேண்டி துதித்தனர். தன் தந்தைக்கு இன்னல் களை ஏற்படுத்துவதுஎன்பது முறையானதல்ல என்பதனை உணர்ந்த விநாயகர், தேவர்கள் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு காட்சியளித்தார்.

பின்பு முறிந்த வண்டியச்சை சீர் செய்து திரிபுரர்களை அழித்து தேவர்களை காக்கும் பொருட்டு அவரும் திரிபுர யுத்தத்தில் பங்கு கொண்டார். எம்பெருமான், பிரம்ம தேவரிடம் இப்பொழுது ரதத்தை புறப்படச் சொன்னார்.

பிரம்பிக்கத்தக்க இந்த ரதமானது திரிபுரத்தை நோக்கி தனது பயணத்தை இனிதே தொடங்கி யது. தேவ படைகளுடன் கணங்களின் அதிபதி யான கணபதியும், தேவர்களின் படைத்தலை வரான முருகப்பெருமானும் சென்றனர்.

மதியிழந்த அசுரர்கள் தங்களின் நகரத்தை தாக்கி அழிப்பதற்காக தேவர்களும், அவர்களு டன் எம்பெருமானான சிவபெருமானும் வந்து கொண்டு இருப்பதாக அசுரர்களின் ஒற்றர்கள் வேந்தர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால், வேந்தர்களான அசுரர்கள் தங்களின் நகரத்தை யாராலும் அழிக்க இயலாது என்ற ஆணவத்துடன் நம்மிடம் போருக்கு வரும் அனைத்து தேவர்களையும் அவருடன் வருகின்ற சிவபெருமானையும் நாம் தோற்கடிக்க வேண்டும் என்று கூறி போருக்கு மூன்று பட்ட ண வேந்தர்களும் தயாராக இருந்தனர்..

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி..