சிவபுராணம் பாகம் 27 -ரதிதேவியின் கோபம்

164

பார்வதி தேவி சிவபெருமான் அமர்ந்து தவம் மேற்கொண்ட இடத்தில் தன் தலையினை சாய்த்து ஏன் நான் உங்கள் மீது கொண்ட மை யலை புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள். நான் இழைத்த பிழைக்கு என்னை மன்னித்து தங்களின் இல்லத்தரசியாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என தனக்கு தானே பேசிய நிலை யில் இருந்தார் பார்வதி தேவி.

பார்வதி தேவியின் வருத்தத்தால் சிவபெருமா ன் தியானம் மேற்கொண்ட ஒளிப் பொருந்திய அந்த குகை சூரியனின் மறைவால் தன் மகிழ்ச்சியை இழந்தது போன்று காட்சியளித் தது. தன் பதியான மன்மதனை தேடி குகைக் குள் வந்த ரதி தேவி இறுதியாக தனிமையில் எம்பெருமானை எண்ணி புலம்பிக் கொண்டு இருந்த தேவியை கண்டார்.

தேவியின் அருகில் சென்று என் பதியானவ ரை கண்டீர்களா என கேட்டார் ரதி தேவி. அங்கு ரதி தேவியை கண்டதும் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றார் பார்வதி தேவி. இருப்பினும் மனதில் தைரியத்துடன் நிகழ்ந்தன யாவற்றையும் கூறினார். அதாவது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த நெருப்பு சுவாலையால் எரிந்து சாம்பலா னார் என்பதை கூறினார்.

இதை கேட்டதும் ரதி தேவி என் பதியானவர் மாய்ந்து விட்டாரா என புலம்பி ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கினார். ரதி தேவிக்கு ஏற்பட்ட இந்நிலையில் தென்றலாக வீசிய காற்று கூட இல்லாமல் முழு அமைதியானது அந்த இடம்.

காடுகளில் இருந்த பறவைகள் கூட ரதி தேவி அடைந்த வேதனையால் எவ்வித சத்தமும் எழுப்பாமல் அமைதியாக இருந்தன. வாசம் வீசும் மலர்கள் கூட தனது நறுமணத்தை கட்டு ப்படுத்திக் கொண்டன. இவ்விதம் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் காமதேவன் மறைந்ததால் ரதி தேவி அடைந்த வேதனை க்கு தங்களால் ஆன செயல்களை செய்தன.

ரதி தேவியோ தனது எழில் மிகு தோற்றத்தை விடுத்து தன் கணவனான மன்மதன் எரிந்து சாம்பலான இடத்தை நோக்கி சென்றாள். தன் கணவரின் சாம்பலின் அருகில் சென்றதும் என்ன செய்வது என்று புரியாமல் அவ்விடத்தி லேயே அமர்ந்து தன்னுடைய பழைய நினைவு களை எண்ணிக் கொண்டு இருந்தார்.

ரதி தேவியின் நிலையைக் கண்ட பார்வதி தேவி, அந்த இடத்தில் நிகழ்ந்த மாற்றங்களை யும், அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள அமைதியை கலைக்கும் விதமாக ரதி தேவியின் அருகில் சென்றார். இருப்பினும் ரதி தேவி பார்வதி தேவியை கண்டும் காணாமலும் இருந்தார்.

பின் தன் மனதில் ஏற்பட்ட இந்நிலைக்கு பார் வதி தேவியே காரணம் என எண்ணிணார். மேலும் பார்வதி தேவியையும் எம்பெருமானா ன சிவபெருமானையும் இணைக்க தன் கணவர் இங்கு வந்ததால் இந்நிலை ஏற்பட்டு ள்ளது என எண்ணினார். பார்வதி தேவி, ரதி தேவியிடம் பேச முற்படுகையில் தேவி தாங்கள் என்னிடம் எதுவும் பேச வேண்டாம் என தன் கணவரின் சாம்பலை பார்த்த வண்ணம் கூறினார்.

ஆனால், பார்வதி தேவி அதை கேட்காமல் மீண்டும் பேச முற்படுகையில் தேவி தாங்கள் எதுவும் என்னிடம் உரைக்க வேண்டாம் என்னு டைய இந்நிலைக்கு முழு காரணம் நீங்களே தேவி என ரதி தேவி உரைக்க, நான் எவ்விதம் காரணம் ஆவேன் என பார்வதி தேவி கேட்டார்.

அதுவரை பொறுமை காத்து தனக்கு ஏற்பட்ட துன்பத்தினை அடக்கி வைத்திருந்த ரதி தேவி திடீரென பார்வதி தேவியின் பக்கம் திரும்பி என்னுடைய இந்த நிலைக்கு நீயே காரணம் பார்வதி நினைவிற் கொள்க என உரக்க கூறினார்.

நான் எவ்விதம் உந்தன் இந்நிலைக்கு காரண மாவேன் என பார்வதி தேவி ரதி தேவியிடம் கேட்டார். ரதி தேவியோ தன் பதியான வரை இழந்த சோகம் மற்றும் மனதில் தோன்றிய எண்ணங்களால் ஏற்பட்ட கோபத்தால் அனை வரையும் அன்பால் கவரக்கூடிய எழில் மிகுந்த கண் ஆனது, ஆதவனை எரிக்கும் அளவிற்கு சிவந்து கண்டங்களை அழிக்கும் பிரளயம் போல எழுந்து வந்து, நீர் சிவபெருமான் மீது கொண்ட மையல் எண்ணங்களே எந்தன் இந்நிலைக்கு காரணம்.

என் பதியானவரிடம் நான் கேட்ட வரத்தினை தருவதாக அருளிய கணத்தில் தேவேந்திரன் அழைப்பால் உந்தன் மையலை சிவபெருமா னுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு சிவனின் கோபத்தால் எரிந்தார் என் கணவர். இக்கணம் முதல் என்னை அன்பாக கவனித்து கொள்ள எவரும் இல்லை. என்னுடன் பேசி மகிழ எவரும் இல்லாத பட்சத்தில் நான் தனிமரமாக உள்ளேன்.

மன்மதன் காதல்கணை தொடுக்க காரணம்:
************************************************
ரதிதேவி, பார்வதிதேவியிடம் நான் வேண்டிய வரத்தினை தருவதாக கூறிய எந்தன் சுவாமி யும் இங்கு இல்லை. அதனால் நான் எப்படி இவ்வாறு தனித்து என் பதியானவர் இன்றியு ம், நான் வேண்டி பெற்ற பிள்ளை வரம் இல்லாமல் உள்ளேனோ அதே போல நீயும் இருப்பாயாக!

செவி கொடுத்து கேட்டுக்கொள் தேவி நான் எவ்விதம் விரும்பிய என் பதியானவர் இல்லா மல் பல இன்னல்களுக்கு ஆளாகி துன்பத்தில் உள்ளேனோ அதே போல, நீரும் உன் மனம் கவர்ந்த நாயகரை மணந்து புத்திர பாக்கியம் இன்றி துன்பப்படுவாயாக என்று காமதேவனி ன் இல்லத்தாளான ரதிதேவி சாபமிட்டார்.

அக்கணத்தில் அங்கு தேவேந்திரன் உதயமா னார். என்ன செய்தாய் ரதிதேவி நீர் இட்ட சாபத்தால் நிகழ வேண்டிய சுபச்செயலானது இன்னும் கால விரயத்தை ஏற்படுத்தும் தேவி. தன்னிலை மறந்து நீ இட்ட சாபத்தால் இன்னு ம் என்னென்ன நிகழுமோ என தேவேந்திரன் கூறினார்.

தேவேந்திரன் கூறிய கூற்றுகளில் இருந்த மெய்பொருள்களை அறிந்து தன்னிலைக்குத் திரும்பிய ரதிதேவி தன் பதியான வரை இழந்ததும் தன் இயல்புகள் யாவற்றையும் இழந்ததால் தன்னையும் அறியாமல் தான் பார்வதிதேவிக்கு சாபம் இட்டதை எண்ணி மனம் வருந்தினார் ரதிதேவி.

தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பிய ரதி தேவி, பார்வதிதேவியிடம் சென்று என்னை மன்னித்து அருளுமாறு வேண்டி நின்றார். ரதி தேவி அடைந்த இன்னல்கள் மற்றும் இழப்பின் வலி உணர்ந்த பார்வதிதேவி ரதிதேவியை ஏதும் உரைக்காமல் அவரை அரவணைத்து அமைதி கொள்வாய் ரதிதேவி எனக் கூறி ரதிதேவியை சாந்தம் செய்தார்.

தேவலோகத்தில் இருந்த தேவர்கள், நாரத ரிஷி மற்றும் காப்பவரும், படைப்பவருமான விஷ்ணு, பிரம்மா ஆகியோர் சிவபெருமானை காண கைலாயமலைக்கு சென்றனர் கைலாய மலையில் வீற்றிருந்த சிவபெருமானை கண்ட தேவர்கள், நாரத ரிஷிகள் மற்றும் விஷ்ணுவு ம், பிரம்மாவும் சிவபெருமானை கண்டு வணங்கினார்கள். பின்பு பல காலங்களாக தங்களின் தரிசனத்தை காணாத நாங்கள் இன்று உங்களின் தரிசனத்தால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிறோம் என்று பிரம்ம தேவர் கூறினார்.

” காமதேவனால் தாங்கள் வீற்றிருந்த யோக நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் யாவையும் மன்னித்தருள வேண்டுகிறோம். தங்களை யோக நிலையில் இருந்து எழுப்பவே காமதே வனை அனுப்பி இச்செயலானது அரங்கேற்ற ப்பட்டது… ” என திருமால் கூறினார்.

” என்னுடைய யோக நிலையை விடுத்து தாட்சாயிணி தேவியை மணந்து அதனால் ஏற்பட்ட விளைவுகள் அனைத்தையும் அறிந்த நாராயணா! என்னை யோக நிலையில் இருந்து எழுப்ப செய்த செயலால் காமதேவன் எரிந்து சாம்பலாகி போனான். என்னை யோக நிலையில் இருந்து எழுப்ப என்ன அவசியமா யிற்று இந்திரதேவா.” என சிவபெருமான் தன் ரௌத்திர குரலால் உரைக்க இந்த கைலாய மலையே அதிர்ந்து போனது.

“நாங்கள் செய்த செயல் உசிதமானது இல்லை என்றாலும் அதன் உட்பொருளை கொண்டே தங்களை நாங்கள் யோக நிலையில் இருந்து எழுப்ப வேண்டியதாயிற்று..” என்று கூறிய இந்திரதேவன், “உலகங்களை படைத்து அதில் ஜவராசிகள் இன்பத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திய சர்வங்களை தன்னகத்தே கொண்ட சர்வேஸ்வரரான எம்பெருமானே எங்கள் கோரிக்கைகளை தயவு கூர்ந்து கேட்க வேண்டுகிறோம்..” என கூறினார்.

” பிரபஞ்சத்தில் உதித்த உயிர்களுக்கிடையே காதல் மற்றும் காமம் போன்ற உணர்வுகளை உருவாக்கி அவைகளின் இனத்தினை விரிவ டையச் செய்ய வழிவகை செய்யும் மன்மதன் தங்களின் மீது காதற் கணைகளை அனுப்பிய து அவனின் நன்மைக்காக செய்யப்பட்ட கர்மம ன்று, தேவர்களின் இன்னல்களை போக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திற்காக செய்யப்பட்ட செயலாகும்…”

” அதாவது தங்களால் வரம் அளிக்கப்பட்டு தங்களின் புதல்வர்களால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கிய தாரகா சுரனால் எண்ணிலடங்கா இன்னல்களை தேவர்கள் அனுபவித்து வருகின்றனர்..”

“தேவலோகத்திலுள்ள தேவர்கள் மட்டுமின்றி பூலோகத்தில் உள்ள ஜீவராசிகள் மற்றும் முனிவர்கள், ரிஷிகளும் தங்கள் தியானம் மற்றும் வேள்வி முதலானவற்றை நடத்த முடியாமல் துன்பத்திற்கு ஆளாயினர். இவை யாவையும் நினைவில் கொண்டு தேவேந்திர னின் உத்தரவின்படி காமதேவன் தங்கள் மீது காதல் கணையைத் தொடுத்தார்…” என்று கூறினார்.

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி…
சிவபுராணம் நாளை தொடரும்…