Wednesday, October 25, 2023
HomePurana Kathaigalசிவபுராணம் பாகம் 36 - ஆனந்த தாண்டவம் புரிந்த சிவபெருமானும், பார்வதி தேவியும்

சிவபுராணம் பாகம் 36 – ஆனந்த தாண்டவம் புரிந்த சிவபெருமானும், பார்வதி தேவியும்

மேனை தேவியின் கண்களில் கண்ணீரை கண்ட முனிவர்கள் கவலை கொள்ள வேண்டா ம் தேவி என ஆறுதல் கூறினார்கள். பின்பு பிரம்மதேவர் திருமால் தேவர்கள், முனிவர்கள் மற்றும் எம்பெருமானும் பார்வதியுடன் இசை வாத்தியங்கள் முழங்க அழகிய நடனங்களு டன் சிவபெருமானின் இருப்பிடமான கைலா யத்தை நோக்கி தங்களது பயணத்தை தொட ங்கினார்கள்.

இமவான் மன்னனும், மேனை தேவியும் தன் மகளை விட்டு பிரிய மனமில்லாமல் அவர்க ளுடைய எல்லை வரை சென்று மகளையும் எம்பெருமானையும் கைலாயம் செல்வதற்கு வழியனுப்பி விட்டு திரும்பினர்.

கைலாயத்தில் எம்பெருமானையும், பார்வதி தேவியையும் வரவேற்பதற்காக லட்சுமி தேவி யும், சரஸ்வதி தேவியும் அதற்கான ஏற்பாடுக ளை கவனித்தனர். மங்கள வாத்தியங்களுடன் திருமண கோலத்தோடு கைலாயத்தில் நுழை ய முற்பட்ட பார்வதி தேவியையும், கைலாயநா தரையும் அவர்களின் இருப்பிடத்திற்கு வரவேற்றனர்.

பின்பு தேவர்கள் அனைவரும் எம்பெருமானே பார்வதி தேவியை ஏற்றுக்கொண்டு எங்களை தாரகாசுரனின் இன்னல்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என அவரிடம் தங்களது கோரிக்கைகளை விடுத்தனர். பின்பு எம்பெரு மானிடம் ஆசிப்பெற்று அவர்களின் பணியை மேற்கொள்ள ஆயத்தமானார்கள்.

காலங்கள் கழிந்து கொண்டே இருந்தன. தாரகாசுரனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்னல்கள் எல்லைகளை கடந்து சென்றன. தேவர்கள் எம்பெருமானுடைய குமாரனின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தனர்.

தாரகாசுரனால் ஏற்படும் இன்னல்கள் யாவும் எம்பெருமானிடம் முறையிட தேவர்கள் அனை வரும் சிவபெருமானை காணச் சென்றனர். ஆனால், சிவபெருமான் வீற்றிருக்கும் கைலா ய மலையில் உள்ள நுழைவாயிலில் நின்ற பூதகணங்கள், அங்கு வந்த அனைத்து தேவர்க ளையும் தடுத்து நிறுத்தினர்.

தேவர்களிடம் தங்களால் இப்போது எம்பெரு மானை காண முடியாது என்றும், அவர் எங்கள் அன்னையான பார்வதி தேவியுடன் இருப்பதா க கூறி அவர்களை உள்ளே விடமால் திருப்பி அனுப்பினர்.

ரதி தேவியின் சாபத்தால் பார்வதி தேவி குமர னை ஈன்றெடுக்க இயலாது என்னும் காரண த்தால் தாரகாசுரன் மென்மேலும் தவறுகளை தீங்குகளையும் செய்து கொண்டே இருந்தான். மேலும், பார்வதி தேவி பதியானவரின் வாரிசு களை ஈன்றெடுக்க முடியாததை எண்ணி மனம் கவலைக் கொண்டார்.

அவ்வேளையில் எம்பெருமான் வருகைத் தர பார்வதி தேவி முகத்தில் காணப்பட்ட வருத்த த்தை உணர்ந்து என்னவாயிற்று தேவி என்று வினவினார். இருப்பினும் தேவி எதையும் உரைக்காமல் முகமலர்ச்சியுடன் காணப்படுவ து போல் காட்சி அளித்தார். ஆனால், அனைத் தையும் அறிந்த எம்பெருமான் தேவியின் மனவருத்தத்திற்கான காரணங்கள் யாவும் அறிந்தார்.

முன்னொரு சமயத்தில் கைலாய மலையில் தேவர்கள் வந்ததும் அவர்கள் திரும்பி சென்ற நிகழ்வுகளை யாவும் உணர்ந்த சிவபெருமான் தேவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் யாவற் றையும் களையவும், அறவழி தவறி நடக்கும் தாரகாசுரனை அழிக்கவும் சிவகுமரனின் தே வை வேண்டும் என்பதை அறிந்த சிவபெருமா ன் கைலாயத்தில் உள்ள குகைக்கு பார்வதி தேவியுடன் சென்றார்.

இனியும் தாரகாசுரனால் ஏற்படும் இன்னல்க ளை பொறுக்க இயலாது என்றும், நாம் அனை வரும் எம்பெருமானை காண வேண்டும் என்றும் அனைவரும் அக்னி தேவன் இருக்கும் இடத்தில் சங்கமித்தனர். அவர்கள் அனைவரு ம் அக்னி தேவரிடம் எம்பெருமான் திருமணம் இனிதே நிறைவுற்றது.

ஆனால், ரதி தேவியின் சாபத்தால் சிவபுத்தி ரன் இன்னும் உருவாகவில்லை. எங்களில் சிறந்தவர்களான தாங்கள் சிவபெருமானிடம் சென்று எங்களின் வேண்டுக்கோளை எடுத்து க்கூறி தாங்கள் சிவகுமரனின் வருகையின் அவசியத்தை அவருக்கு கூறி தாரகாசுரனை சம்காரம் செய்ய வேண்டும் என பணிந்து எடுத்துரைக்க வேண்டும் என கூறினார்கள்.

குகைக்கு சென்ற பார்வதி தேவியும் எம்பெரு மானும் ஆனந்த தாண்டவத்தில் இருந்தனர். பின்பு தாண்டவத்தின் மகிழ்ச்சி நிலையில் எம்பெருமானின் சக்தியின் ஒரு பகுதியும், பார்வதி தேவியின் சக்தியின் ஒரு பகுதியும் இணைந்து கொண்டு ஒரு புதிய சக்தியின் தோற்றத்திற்கு அடிப்படையாக இருந்தன.

அக்னி தேவர், தேவர்களிடம் இது சாத்தியமற் றது. ஏனெனில், பூத கணங்களை தாண்டி என்னால் எவ்விதம் செல்ல இயலும் தேவர்க ளே என்று கூறினார். இருப்பினும் தேவேந்தி ரனின் உத்தரவை மீற முடியாத காரணத்தால் அக்னி தேவர் புறா வடிவம் எடுத்து கைலாய மலைக்கு சென்றார்.

தனது ஒற்றர்கள் மூலம் தேவர்கள் மற்றும் அவர்களின் வேந்தனான இந்திர தேவன் உட்பட அனைவரும் அக்னி தேவனை காண சென்றதை தாரகாசுரன் அறிந்தான். தேவர்க ள் தனக்கு எதிராக ஏதோ சதி திட்டம் செய்யப் போவதை உணர்ந்த தாரகாசுரன் அவர்கள் சங்கமித்திருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.

பல தடைகளுக்கு பின்னால் அக்னி தேவன் எம்பெருமான் வீற்றிருக்கும் இடத்தை அடை ந்தார். இருப்பினும் சிவபெருமான் இருக்கும் இடத்தில் அவர் இல்லாததை கண்டு மனம் கலங்கி நின்றார். அவ்வேளையில் கைலாயத் தில் இருந்த குகையில் வந்த வெளிச்சம் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருந்தது.

தேவர்கள் சங்கமித்த இடத்தில் இருந்து பற ந்து சென்ற புறாவை பின் தொடர்ந்தே தாரகா சுரனின் ஒற்றர்கள் சென்றனர். அவர்கள் பின் தொடர்ந்த புறாவானது, அதாவது அக்னி தேவன் கைலாயத்தில் இறங்குவதை கண்ட அசுரர்களின் ஒற்றர்கள் தங்களின் வேந்தனா ன தாரகாசுரனிடம் இச்செய்தியை சொல்ல சென்றனர்.

தேவர்களை சிறைபிடிக்க வந்துக்கொண்டு இருந்த தாரகாசுரன் இச்செய்தியை அறிந்தவு டன் கைலாயத்தை நோக்கி தனது படையுடன் சென்றான். கைலாயத்தை அடைந்ததும் அங்கி ருந்த பூத கணங்களுக்கும், தாரகாசுரனின் படைக்கும் இடையே போர் உண்டாயிற்று.

அவ்வேளையில் தேவர்களும் அக்னி தேவன் சென்று வெகு நேரம் ஆயிற்றே என எண்ணி கைலாயத்திற்கு வந்தார்கள். அந்த வேளையி ல் நந்தி தேவரும் அவருடன் இருந்த மற்ற பூத கணங்களும் அசுரர்களுடன் சண்டையிட்டு கொண்டிருப்பதை கண்டவர்கள் அவர்களும் போரில் ஈடுபட்டனர்.

அந்த வெளிச்சத்தின் பிரகாசத்துடன் சிறிது வெப்பமும் உண்டாயிற்று. அக்னி தேவர் அந்த குகையின் உள்ளே சென்று பார்த்தார். அவ்வே ளையில் எம்பெருமானும், பார்வதி தேவியும் தியான நிலையில் ஆனந்த தாண்டவம் புரிய அங்கு ஒரு மகத்தான சக்தி உருவானதை கண்டார்.

எம்பெருமானும், பார்வதி தேவியும் தியான நிலையில் தாண்டவம் புரிந்து கொண்டே அமர்ந்திருக்க, அவர்கள் இருவரிடமிருந்து உருவான புதிய சக்திக்கு மேலும் ஆற்றலை அளித்து கொண்டு இருந்தார்கள்.

அந்த சக்தியானது அதிகரிக்க அதிகரிக்க அதனுடன் வெளிச்சமும், வெப்பமும் அதிகரி த்துக் கொண்டே இருந்தது. அக்னி தேவர் அந்த குகையில் நுழைந்த போது சிவபெருமா னுக்கும், பார்வதி தேவிக்கும் மற்றும் அங்கு உருவான சக்திக்கும் உள்ள தொடர்பு குறை ந்து கொண்டே இருந்தது.

கைலாயத்தில் அசுரர்களுக்கும், தேவர்களுக் கும் யுத்தம் நடைபெற்ற பொழுது அசுரர்களின் வேந்தன் தன்னந்தனியாக கைலாய மலையி ன் மேற்பகுதிக்கு செல்வதை தேவேந்திரன் கண்டார். இருப்பினும் தன்னால் தாரகாசுர னை தடுக்க இயலாது என்பதை உணர்ந்த தே வேந்திரன் அக்னி தேவர் இருக்கும் இடத்தை அடைந்தார்.

பின்பு அக்னி தேவரிடம் தாரகாசுரன் இவ்விட ம் நோக்கி வந்து கொண்டு இருக்கின்றான். அவனிடம் இந்த சக்தியானது கிடைத்தால் அவன் அதை அழித்து விடுவான். ஆகவே நீர் இச்சக்தியை எடுத்துக்கொண்டு பாதுகாப்பா ன இடத்தை நோக்கி செல் என்று கூறினார்.

பின்னர் தேவேந்திரனின் கூற்றுக்கு இணங்கி அக்னி தேவர் அந்த சக்தியை கைலாய மலை யில் இருந்து எடுத்துக்கொண்டு புறா வடிவில் பறந்து சென்றார்.

அவ்வேளையில் தாரகாசுரன் வரவே தேவேந் திரனும் அவ்விடத்தை விட்டு மறைந்து சென் றார். பின் தாரகாசுரன் தியான நிலையில் இருந்த எம்பெருமானையும் பார்வதி தேவியை யும் கண்டான். அங்கு எவ்விதமான சக்தி தோற்றமும் புலப்படவில்லை.

பின்பு இது தேவர்களின் ஒரு வகையான சதிச் செயலாக இருக்கலாம் என எண்ணி போர் நடக்கும் இடத்திற்கு தாரகாசுரன் சென்றான். போர் புரியும் இடத்தில் இருந்த தேவர்கள் இல்லாமல், அனைவரும் பூத கணங்களாக இருந்தனர்.

பின்பு அசுரர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு அசுரலோகம் சென்றனர். இருப்பினும் தாரகாசுரன் இதில் ஏதோ சுழ்ச்சி உள்ளது போல் உணர்ந்தான்.

புறா வடிவத்தில் இருந்த அக்னி தேவர் அந்த புதிய சக்தியை தன் வாயில் ஏந்தியப்படி பற ந்து சென்றார். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த சக்தியிடமிருந்து வெளிப்பட்ட வெப்பத்தி ன் அளவை அக்னி தேவரால் தாங்க முடியாத தால் அந்த சக்தியை கங்கை நதியில் போட்டு விட்டார்.

கங்கை நதியானது அக்னி தேவர் நதிக்கரை யில் விட்ட அந்த சக்தியினை யாவரும் அறியா வண்ணம் எடுத்து சென்றது. ஆனால் கங்கை நதியாலும் அந்த சக்தியின் வெப்பத்தை தாங்க முடியவில்லை.

பின் இமயமலையில் உள்ள சரவண பொய் கையில் தர்ப்பை புற்கள் நிறைந்த இடத்தில் அந்த சக்தியினை விட்டுவிட்டது. பின் அந்த சக்தியில் இருந்து அனைவரின் இன்னல்க ளை போக்கும் வல்லமை கொண்ட அழகிய குழந்தை தோன்றியது.

அப்பொழுது அங்கு நீராட வந்த ஆறு கன்னிய ர்கள் இந்த அழகிய குழந்தை வனத்தில் தன்ன ந்தனியாக இருப்பதை கண்டு வியந்தனர். பின்பு அதில் இருந்த ஒரு கன்னியர் இவன் என்னவன் எனக் கூற, ஆறு கன்னியர்களும் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டனர். இதைக் கண்டு அழகிய சிரிப்பை உதிர்த்த சிவகுமரன் ஆறு குழந்தைகளாக அவர்களுக்கு தோற்றம் அளித்தார்.

பின்னர் கன்னியர்கள் தங்களுக்குள் இருந்த மோதல்களை விடுத்து ஒவ்வொரு கன்னியர்க ளும் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டனர். அவ்வேளையில் சிவகுமரன் அழுகவே அங்கு இருந்த கன்னியர்களே அவருக்கு தேவையா ன பாலை அளித்தனர்.

ஆறு கன்னியர்களிடம் இருந்து பாலை பருகி யதால் குமரனை ஆறுமுகன் என்றும் அழைக் கின்றோம். தியான நிலையில் இருந்து தன் பழைய நிலைக்கு பார்வதியும், சிவபெருமானு ம் வந்ததும் நம் மைந்தன் எங்கே என பார்வதி தேவி வினவினார்.

எம்பெருமானோ இங்கு நிகழ்ந்த யாவற்றை யும் உணர்ந்து பின் பார்வதி தேவியிடம் அமை தி கொள்வாய் தேவி என்று கூறினார். பின் தேவியின் மனமோ மிகவும் சங்கடத்திற்கு உள்ளானது.

சிவபெருமான் பார்வதி தேவியிடம் நம் மைந்த ன் நலமுடன் இருக்கிறான் கவலை கொள்ள வேண்டாம் தேவி. காலம் கணியும்போது நாம் குமரனை காணச் செல்வோம் என கூறினார். பதியின் கூற்றுகளில் உண்மை இருக்கும் என உணர்ந்த பார்வதி தேவி குமரனை பற்றிய கவலைகள் இருந்த போதும் அதை வெளிக் கொள்ளாமல் இருந்தார்.

காலங்கள் விரைந்து ஓடியது. அசுரர்களின் அறமற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. தாரகாசுரன் எதிர்ப்புகள் அனைத் தையும் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் களைத்தெரிந்தான். அசுரர்களின் படைபல மோ அதிகரிக்கத் தொடங்கின. அசுர குல குருவான சுக்கிராச்சாரியாரின் வழிகாட்டுதல் மூலம் படைபலத்தை பெருக்கி கொண்டான் தாரகாசுரன்.

குழந்தையாக இருந்த குமரனோ கன்னியர்கள் அறுவரின் அரவணைப்பில் அன்போடு வளர்ந் து வந்தார். குமரனை தன் மகனாக பாவித்து அவர் மீது அதிக அன்பு கொண்டு வளர்த்து வந்தனர். சிவசக்தியின் அம்சமான குமரன் கன்னியர்கள் அறுவரிடம் வளர்ந்து வருவதை நாரதர் மூலம் தேவர்கள் அறிந்தார்கள்.

இச்செய்தியை கேட்ட தேவர்கள் மிகுந்த மகிழ் ச்சி கொண்டனர். பின்பு தேவர்கள் அனைவரு ம் ஒன்றிணைந்து கைலாய மலையில் இருக் கும் சிவபெருமானை காணச் சென்றனர். இவர்களின் வருகை எதற்கென்று நந்தி தேவ ருக்கு புரிவதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானையும், சக்தியான பார்வதி தேவியையும் பலவாறு போற்றி பாடினார்கள்.

உமையவள் பார்வதி தேவிக்கு என்னவென்று புரியாமல் இருந்தார். ஆனால், அனைத்தும் அறிந்த சிவபெருமான் அமைதிகாத்தார். தேவ ர்களின் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியை கண்ட தேவிக்கு எம்பெருமானால் ஏதோ மார்க்கம் பிறந்துள்ளது எனவும், தாரகாசுரனி ன் அழிவு நெருங்கிவிட்டது என்பதையும் உணர்ந்தார்.

பார்வதி தேவி தாரகாசுரனின் அழிவு என்பது சிவனின் அம்சத்தினால் மட்டுமே ஏற்படும் என எண்ணிய கணத்தில் நாரத முனிவர் மூலம் அறிந்த தகவலை தேவர்கள் தேவியிடம் கூறி னர். அப்போது தேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு என்பது இல்லை.

பின் எம்பெருமான் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வரவே எம்பெருமானுடன் சரவண பொய்கையில் கன்னியர் வளர்ப்பில் வளர்ந்து வரும் தன் மகனை காண விரைந்தா ர்கள். சரவண பொய்கையில் வளர்ந்து வந்த குமரனை கண்ட பார்வதி தேவி, மகனே! என்று அழைத்து குமரனிடம் சென்றார். குமரனோ தேவி தாங்கள் யார்? என கேட்டார். என் தாயா னவர்கள் இவர்களே என்று ஆறு கன்னியர்க ளை காட்டினார்.

கன்னியர்களோ வந்திருப்பவர்கள் யார் என்ப தை அறிந்து பணிந்து வணங்கினர். பின் கும ரனிடம் தாங்கள் அறுவரும் உன்னை வளர்த்த வர்கள் மட்டுமே என்று கூறினர். உன்னை ஈன்றவர் அனைத்திற்கும் தாயான பார்வதி தேவி என்று உரைத்தனர். இதை சற்றும் எதிர்பாராத குமரன் மிகுந்த குழப்பத்திற்கு ஆளானார்.

பின்பு எம்பெருமான் குமரனின் பிறப்பில் உள்ள அவசியம் பற்றி எடுத்துரைத்தார். ஒரு புறம் தன்னை ஈன்றவர்கள், மறுபுறம் தன்னை வளர்த்தவர்கள் என மனதில் குழப்பத்துடன் இருந்தார் குமரன். பின் ஆறு கன்னியர்களும் முருகனிடம் சென்று அனைத்தையும் அவர் புரியும் பொருட்டு எடுத்துரைத்தனர்.

தாங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு வந்த போது இருந்த நிலையையும் எடுத்துக்கூறி பார்வதி தேவியின் மகத்துவத்தை எடுத்துரைத்தனர். பின் தன்னை ஈன்ற தாயிடம் சென்று தங்களிட ம் அவ்விதம் கூறியமைக்கு மன்னிக்க வேண் டினார் குமரன் பின் குமரன் பார்வதி தேவியை தாயாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்.

குமரனுக்கு குழந்தை முதலே கார்த்திகை பெண்களான அறுவர் பாலு}ட்டி சீராட்டி வளர்த் து வந்தார்கள் அதன் பொருட்டு சிவபெருமான் குமரனுக்கு கார்த்திகை பெண்கள் பாலு}ட்டி வளர்த்து வந்தமையால் இனிமேல் குமரன் ‘கார்த்திகேயன்” என்று அழைக்கப்படுவான் என்றும், கார்த்திகை பெண்களான கிருத்தி கை நட்சத்திரத்தன்று கார்த்திகேயனை எண்ணி விரதமிருக்கும் அனைவரின் வாழ்வி லும் இருந்த இன்னல்கள் யாவும் நீங்கி சகல வசதிகளையும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என கூறி அருள் பாவித்தார்.

பின் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் கார்த்திகேயனுடன் கைலாய மலைக்கு வந்த னர். பின்பு தேவர்களின் அரசனான தேவேந்தி ரன் இனியும் காலம் தாமதிக்காமல் தாரகாசு ரன் மீது படையெடுத்து அவனை சம்காரம் செய்ய வேண்டும் என எம்பெருமானிடம் உரைத்தார்.

தேவேந்திரன் கார்த்திகேயனை படைக்கு தலைவனாக்கி பின் தாரகாசுரனோடு போர் புரிய தயாராக வேண்டும் என்று கூறினார்.

தேவேந்திரன் தேவர்கள் அடங்கிய படையை யுத்தத்திற்கு தயாராக இருக்கும் பொருட்டு அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். ஆனால், கார்த்திகேயனோ மனதில் ஏதோ குழப்பத்தில் இருப்பதாக இருந்தார். இதை உணர்ந்த எம்பெருமான் தன் அம்சமான பதினொரு ருத்திரர்களின் அவதாரங்களில் இருந்து பதினொரு ஆயுதங்களை கார்த்திகே யனுக்கு வழங்கினார்.

அனைத்து வித ஆயுதங்களையும் கொடுத்து அவற்றை பயன்படுத்தும் விதத்தையும் எடுத்து ரைத்தார். தேவர்கள் கார்த்திகேயனை தங்கள து சேனாதிபதியாக ஏற்றுக்கொண்டு தாரகா சுரன் மீது போர் புரிய தயாராக இருந்தனர். மேலும், எட்டுதிக்கும் கேட்கும் வண்ணம் போர் முரசுகள் முழங்கின.

தாரகாசுரனிடம், அசுர ஒற்றர்கள் சிவபுத்திரன் வருகையைப் பற்றியும், தேவர்கள் போருக்கு தயாராக இருப்பது பற்றியும் கூறினர். தாரகா சுரனும், அசுரர்களின் படைகளும் அவர்களின் தலைநகரை அடுத்துள்ள சோணிதபுரத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

பின், பார்வதி தேவியை பார்த்த எம்பெருமான் நம் மைந்தனுக்கு போரில் வெற்றி கொள்ள ஆயுதமொன்றை வழங்கச் சொன்னார். உமா தேவி தனது சக்தியை ஒரு பகுதியாக தனது மைந்தனுக்கு அளித்தார். அதாவது, பஞ்ச பு+தங்களை ஒரு சேர அழிக்கக் கூடியதும், எவர் மீது விடுத்தாலும் அவர்களின் வலிமைகளை யும் தாண்டி அவரின் உயிரை எடுக்கக்கூடிய வல்லமை கொண்ட வேலாயுதத்தை பார்வதி தேவி கார்த்திகேயனுக்கு அளித்தார்.

பார்வதி தேவி கார்த்திகேயனிடம் என்னுடைய அம்சமான இந்த வேலானது உன் மனதில் எதை நினைத்து விடுக்கிறாயோ, அதை நீ எவ்விதம் நினைத்தாயோ அவ்விதம் முடித்து மீண்டும் உனது கரங்களுக்கே வந்து சேரும் என கூறினார்.

பின் தனது தாய், தந்தையிடம் ஆசிப்பெற்ற முருகன் படைகளுக்கு தலைமை தாங்கி அசுர ர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார். அவ்வே ளையில் முருகனின் உருவத்தை பார்த்து தாரகாசுரன் ஏளனம் செய்தான்.

அதாவது, ஒரு சிறுவனை நம்பி அனைத்து தேவர்களும் இன்று தாரகாசுரனின் மாபெரும் படைகளால் உயிர் இழக்கப் போகிறார்கள் என்று கூறி எள்ளி நகையாடினான்.

தாரகாசுரன் முருகனை பார்த்து எள்ளி நகை யாடினான். ஆனால், சிவனின் மைந்தனான குமரனோ எவ்விதமான கலக்கமுமின்றி உருவத்தை எண்ணி யாரையும் நம்பிவிடக் கூடாது என்று கூறியவுடன் போர் முரசுகள் முழங்கின. அப்போது தேவர்களுக்கும், அசுரர் களுக்கும் யுத்தமானது தொடங்கியது.

மாய வித்தைகளின் உதவியால் தாரகாசுரன் முருகனின் முன்னால் போர் தொடுத்தும், அவரின் ஒவ்வொரு மாய தோற்றத்தையும், சிவபெருமான் அருளிய ஆயுதங்களையும், பராசக்தியின் அம்சமான வேலினை கொண் டும், தாரகாசுரனின் முயற்சிகள் யாவும் முறியடிக்கப்பட்டன.

தேவர்களின் வலிமையும் அதிகரித்து கொண் டேபோனது. இழப்பானது தேவர்களிடம் குறை வாகவும் அசுரர்களிடம் அதிகமாகவும் ஏற்பட்ட து. ஒரு சிறிய பாலகனிடம் தாம் பயின்ற அனைத்து மாயசக்திகளையும் பிரயோகம் செய்து நமக்கு தோல்வியே ஏற்படுகின்றது என்று எண்ணிய தாரகாசுரன் தனது முயற்சி யை விடாது ஒவ்வொரு முறையும் புதுவிதமா ன அஸ்திரங்களை கொண்டு போரிட்டான்.

யுத்தமானது இரண்டு, மூன்று நாட்கள் என பத்து நாட்கள் வரை நீடித்தது. முருகனோ தாரகாசுரனின் முயற்சியை கண்டு இனியும் பொறுமை காத்தல் என்பது உசிதமானதாக இருக்காது என எண்ணி இறுதியில் தனது தாயின் அம்சமான வேலினை கரங்களில் ஏந்தி தனது மனதில் தன்னை ஈன்றவர்களை எண்ணி வேலினை தாரகாசுரனை நோக்கி விடுத்தார்.

முருகன் தனது பெற்றோர்களை மனதில் எண்ணியவுடன் எம்பெருமானும், பார்வதி தேவியும் அருள் பாவித்தனர். கரங்களில் இருந்து புறப்பட்ட வேலானது தாரகாசுரனின் அனைத்து வித மாய தோற்றத்தையும் அழித்து அவனை நோக்கி முன்னேறி சென்று அவனை தாக்கி அவனது உயிரை பறித்தது.

தாரகாசுரன் மரணமடைந்த செய்தியை தேவர் கள் அறிந்ததும் அவர்களின் வீரமும், வேகமும் அதிகரித்தது. அசுரர்களின் படைகள் எல்லாம் பலம் குறைந்ததால் போரில் ஈடுபடாமல் தப்பி த்து ஓடினார்கள். பின் தேவர்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி முருகப்பெருமானின் வெற்றிக் கு அடிபணிந்து அவரை பலவாறு துதித்து போற்றி பாடினார்கள்.

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி…
சிவபுராணம் நாளை தொடரும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =

Most Popular