சுவாமி ஐயப்பன் வரலாறு 13

1049

நேற்றைய தொடர்ச்சி…
ம்ணிகண்டன் பானங்களை எய்த வேகத்திற்கு ம், பானங்கள் மகிஷியை அடைந்த வேகத்தி ற்கும் அடுத்து என்ன செய்வது? என்று சிந்திப் பதற்கு கூட நேரமில்லாமல் இருந்தாள் மகிஷி. இருப்பினும் அவள் தன்னிடம் கொண்ட சக்தி களை கொண்டு தனக்கான ஆயுதங்களுடன் மணிகண்டனை தாக்கத் தொடங்கினாள்.
மகிஷியின் அனைத்துவிதமான அஸ்திர தாக் குதல்கள் மற்றும் தந்திரங்கள் என அனைத் தையும் மணிகண்டன் வென்று, அவள் தந்திர ங்கள், மாய சக்திகள் எதையும் எவரையும் பாதிக்காத வண்ணம் தடுத்து நிறுத்தினார்.
அதேவேளையில் மணிகண்டன் விடுத்த பானங்கள் யாவும், மகிஷியின் பூத உடலில் பாய்ந்து அவளது உடலில் இருந்து உதிரத்தை வெளியேற வைத்தது. உதிரமானது வெளியே ற வெளியேற அவளது பலமும் குறையத் தொ டங்கியது. எங்கே பலம் குறையத் தொடங்குகி ன்றதோ, அங்கே பயமும் உருவாக ஆரம்பிக்கி ன்றது என்பதை புரிந்துக்கொண்டாள் மகிஷி.
பலம் கொண்ட பல தேவர்களின் பலத்தை அழித்து அவர்களுக்கு பயத்தை காட்டி வந்த மகிஷிக்கு முதன் முறையாக தனது மனதில் பயம் உட்கொள்ள தொடங்கியது. மணிகண்ட ன் எய்த பானங்கள் அவளை அடையவும், அவள் மனதில் கொண்டுள்ள பயமும் ஒருசேர அதிகரிக்கத் தொடங்கினர். அவளின் கரங்கள் மற்றும் கால்கள் அவளின் எண்ணங்களுக்கு இயங்க இயலாத நிலையில் தனது வாழ்க்கை யின் முடிவானது வந்துவிட்டது. நாம் இன்னும் சிறிது நேரத்தில் அழியப்போகின்றோம் என்ப தை உணர்ந்து கொண்டாள்.
விதியை அறிதல் :
மகிஷியின் பலம் குறைந்து மடியும் வேளை யில் இந்த பாலகன் யார்? என்றும், இவனே தன்னை அழிக்க வல்ல சிவ மற்றும் திருமாலி ன் மைந்தன் ஆவானோ. அதனால்தான் என்னவோ? பிரம்மதேவர் அளித்த வரமும், இந்த பாலகனின் முன்னிலையில் செயல் படாமல் தன்னை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது என்ற யோசனை எட்டியது. மேலும், அனைத்தும் அந்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்ப தை அறிந்ததும் அச்சிறுவனை ஏளனமாக பேசிய பூத உடலானது அக்கணப்பொழுதில் அச்சிறு பாலகனை கண்டு மிகுந்த அச்சமும், பயமும் அவளை ஆட்கொள்ள தொடங்கியது.
புதிய அத்தியாயம் ஆரம்பித்தல் :
மணிகண்டனும் மகிஷியின் பூதவுடலுக்கு அருகில் சென்று அவளது தலை கொம்பினை பிடித்து அவ்விடத்திலிருந்து தூக்கி சுழற்றி எறிந்தார். அவளது உடல் விழுந்து, அவளும் சிதைய தொடங்கி மரணிக்க தொடங்கினாள். அந்த பூத உடலானது விழுந்த இடமானது இன்றும் ‘அழுதாநதி” என்று போற்றப்படுகி ன்றது.
அந்த பூத உடலின் மீது மணிகண்டன் நடன மாட, அந்த பூத உடலானது மிகவும் நலிவுற்று அதிலிருந்த அசுர அரக்கியின் உயிரானது பிரிந்து… அவளும் அவள் உருவாக்கிய அசுர சேனையும் இறந்து போனார்கள்.
அரக்கியானவள் இறந்ததை அறிந்த தேவர் கள் அனைவரும் பூமழை பொழிந்து மணிக ண்டனை பரவசப்படுத்தினார்கள். தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் அவ்விடத்தில் மணிகண்டனிடம் விழுந்து ஆசிப்பெற்று மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தனர்.
லீலாவதி தோன்றுதல்:
சிறிது நேரத்தில் அந்த பூத உடலில் இருந்து ஒரு அழகிய பெண் உருவமானது வெளிவர தொடங்கியது. அவள்தான் லீலாவதி. தனக்கு ஏற்பட்டுள்ள சாபத்திலிருந்து விமோச்சனம் பெற்று வெளியே வந்தவள், தனக்கு சாப விமோச்சனம் அழித்தவரான மணிகண்டனை கண்டு மனம் மகிழ்ந்தாள். பின்பு அவரிடம் தனக்கு ஏன் இந்நிலை உருவானது? என்பதை பற்றி எடுத்துரைக்க தொடங்கினாள்.
அரக்கியாக பிறந்து மடிய சாபமிட்ட முனிவர்:
லீலாவதி ஆகிய நான் காலவ மகரிஷியின் அன்பு மகள். அத்திரி மகரிஷியின் மைந்தனா ன தத்தாத்ரேயன் என்பவருக்கும், எனக்கும் திருமணம் அற்புதமாக நடைபெற்றது. நாங்க ள் இருவரும் ஒருமித்த கருத்தோடு இனிதாக இல்லறம் நடத்தி வந்து கொண்டிருந்தோம்.
சாபம் பெறுதல் :
திருமணம் நடந்து சில காலங்கள் ஆயின. இந்நிலையில் எனது பதியானவருக்கு தவத்தின் மீது ஆர்வம் அதிகரித்து இல்லற வாழ்க்கையை விடுத்து… துறவறம் போக அவர் மனம் ஆவல் கொண்டது.
தத்தாத்ரேயர் தனது மனதில் இருந்த எண்ண ங்களை தனது மனைவியான லீலாவதியிடம் பகிர்ந்து கொண்டார். அவர் தவம் புரிய விருப் பம் கொள்வதை அறிந்த லீலாவதி மிகுந்த கோபமும், ஆவேசமும் கொண்ட வார்த்தைக ளால் தனது கணவரை பேச தொடங்கினாள்.
அதாவது தாங்கள் தவம் செய்ய நினைக்கி றார்கள் என்றால் என்னை ஏன்? திருமணம் செய்தீர்கள் என்றும், இல்லறத்தில் ஒருவரின் தேவையை இன்னொருவர் நிறைவேற்றி வைப்பது தலையாய கடமையாகும். நான் உங்களின் தேவையை நிறைவேற்றி வைப்பதும், நீங்கள் எனது தேவைகளை நிறைவேற்றி வைப்பதும் நல்ல அறமாகும். அதுவே சிறந்த இல்லறமும் கூட என்றும், இந்த உலகத்தை எவர் வேண்டுமானாலும் ஆளலாம். அரசனாக கூட இருந்தாலும் என் வாழ்நாளில் தாங்கள் மட்டுமே எனக்கு முடிச்சூடிய அரசன் ஆவீர்கள். நீங்களே எனது கணவரும் ஆவீர்கள். யார் வேண்டுமாயினும் மகாராணியாக இருக்கும் பட்சத்திலும், நானே உங்களுக்கு மகாராணியாவேன். நானே உங்க ளின் மகிஷியும் ஆவேன். என்றும் எந்நிலையி லும் உங்களை விட்டுப் பிரிய மாட்டேன். உங்க ளையும் என்னிடம் இருந்து பிரிந்து செல்ல விடமாட்டேன் என்றும் மிகுந்த ஆவேசத்துட னும், அதேசமயம் தனது கணவரின் மீது கொ ண்ட அன்புடனும் பேசிக்கொண்டே இருந்தாள்.
தத்தாத்ரேயன் தனது மனைவிக்கு எடுத்துரை க்க தொடங்கியும், அவள் கொண்ட பிடிவாத த்தை அவள் விடவில்லை. இதனால் சினம் கொண்ட தத்தாத்ரேயன் தனது மனைவியான லீலாவதியை கண்டு நான் என்ன தவறு செய் யவா? செல்கின்றேன். தவம் தானே செய்ய நினைக்கின்றேன் என்றார்.
மகாராணி மகாராணி என்று கூறிக்கொண்டு இருக்கிறாய். உனக்கு நிதானம் இருக்கின்ற தா? அரசாலும் ஒருவருக்கு நிதானம் வேண்டும், நிதானமாக எவ்வித தகுதியும் இல்லாதவர்கள் எவ்விதம் அரசாள இயலும் என்றும், மகிஷி… மகிஷியாவேன்… என்று உரைத்துக்கொண்டு இருக்கின்றாயே, நீ செய்த இப்பிழைக்கு மகிஷாவான எருது உரு வம் கொண்டு அசுர குலத்தில் பிறந்து அரக்கி யாக வாழ்ந்து துன்பப்பட்டால் தான் உனக்கு ஞானம் பிறக்கும் என்று கூறி என்னை அரக்கி யாக பிறந்து மடிய சாபம் இட்டார் என்று கூறினாள்.
நாளை தொடரும்….
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா….