மகா லட்சுமி எப்படி தோன்றினார், விஷ்ணு பகவானை அடைந்த கதை இதோ

214

மகிசாசூரனை வதம் செய்ய மூன்று தேவியர்களும் இணைந்து துர்க்கையாக மாறி ஒன்பது நாட்கள் கடும் தவம் செய்த காலத்தை தான் நவராத்திரி என கூறப்படுகின்றது.
மலைமகள் எனப்படும் பார்வதி தேவி, அலைமகள் எனும் மகாலட்சுமி, கலை மகள் எனும் சரஸ்வதி தேவி ஆகிய மூவரும் சேர்ந்த உருவம் தான் துர்க்கை அம்மன்.
நவராத்திரியின் 4,5,6 ஆகிய நாட்கள் மகாலட்சுமியை வழிபடப்படுகிறது. இந்த மகாலட்சுமி தோன்றிய புராணக் கதையை இங்கு காண்போம்.
🙏 இறவா வரத்தின் மீதான ஆவல்:..
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவை இருக்கின்றன.
இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள்.
தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி பிரம்மனிடம் முறையிட்டனர். ஆனால் அவரோ நானும் திரை எனும் இரண்டாவது கட்டத்திற்கு வந்துவிட்டேன் என நினைக்கின்றேன். அதனால் மகா விஷ்ணுவிடம் முறையிட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.
🙏பாற்கடல் கடைதல்:…
மகா விஷ்ணுவிடம் முறையிட்ட போது, கவலைப்பட வேண்டாம். இந்த பாற்கடலில் அமிர்தம் இருக்கின்றது. நாம் இந்த பாற்கடைலை கடைந்தால் அதைப் பெற முடியும் என்றார். அந்த அமிர்தத்தை அருந்தினால் நாம் நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும்.
இதையடுத்து ஆலோசனை நடந்தது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைவது இயலாதது. அதனால் அசுரர்களின் உதவியை நாட வேண்டும் என விஷ்ணு தெரிவித்தார்.
இந்த பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுக்க மேருகிரி மலையை மத்தாகவும், வாசுகி பாம்பு கயிறாகவும் வைத்து கடைந்தனர்.
🙏மகா லட்சுமி தோன்றுதல்:…
ஆயிரம் ஆண்டுகள் பாற்கடலை கடைந்தனர். அப்போது கயிறாக இருந்த வாசுகி நாகம் வலி தாங்க முடியாமல் விஷத்தைக் கக்கியது. அப்படி கடலில் திரண்டு வந்த ஆலஹால விஷத்தை சிவ பெருமான் அருந்தி, அதை தன் கழுத்தில் நிறுத்தினார், விஷத்தால் நீலகண்டரானார்.
கடைசியாக அந்த கடலிலிருந்து அமிர்தம் வெளிவருவதற்கு முன், பல்வேறு பொருட்கள் வெளி வந்தன.
சிந்தாமணி, சூடாமணி, கௌத்துவ மணி, மூதேவி, ஸ்ரீதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம், துளசி ஆகியவை தோன்றியது.
பாற்கடலைக் கடைந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பொருளை எடுத்துக் கொள்கின்றனர். அப்படி அதிலிருந்து வெளியே வந்த ஸ்ரீதேவியான மகா லட்சுமியை ஆட்கொண்டு அவரை மணம் புரிந்து, மகா லட்சுமி சமேத மகா விஷ்ணுவாக அருள்பாலிக்கின்றார்.
கௌத்துவ மணியை தான் திருமாள் தனது மார்பில் அணிந்திருக்கின்றார்.
இப்படி அலை கடலிலிருந்து தோன்றியதால், மகா லட்சுமிக்கு அலை மகள் என பெயர் வந்தது.
ஓம் நமோ லட்சுமிநாராயணா