பிரம்மாவின் வழிவந்தவன் மன்னன் வாசு. வாசு ஒருமுறை தேவகுரு பிரகஸ்பதியைக் காணச் சென்றான். வழியில் சித்திரரதன் என்னும் வித்யாதரன் எதிர்ப்பட்டான். சித்திரரதன் வாசுவிடம் பிரம்மா தேவர்களுக்கான ஒரு சபையை (கூட்டம்) ஏற்பாடு செய்திருப்பதாகவும், முனிவர்களும், பிருகஸ்பதியும் கூட அதில் பங்கு பெறச் சென்றிருப்பதாகவும் கூறினான். வாசுவும் அங்குச் சென்றான். கூட்டம் முடிந்து பிருகஸ்பதி வருவதற்காகக் காத்திருந்தான். ரைவ்ய முனிவரும் பிருகஸ்பதியைக் காண வந்திருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த பிரகஸ்பதி இருவரையும் கண்டார். “என்ன வேண்டும்! நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பிருகஸ்பதி கேட்டார். அப்போது வாசுவும், ரைவ்ய முனிவரும் “ஞானமா? செயலா? எது உயர்ந்தது? சிறந்தது?” என்று கேட்க, அப்போது பிருகஸ்பதி அதை உணர்த்த ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.
தொடரும்…
ஓம் நமோ வராஹாய!
