குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர்
குருர் தேவோ மஹேஸ்வர:
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
( குருவே பிரம்மன் குருவே விஷ்ணு
குருவே மகேசன் குருவே பரம்பொருள்
பிரம்மா ; விஷ்ணு ; சிவன் ஆகிய
மும்மூர்த்திகளின் உருவமாக விளங்கும்
பரம்பொருளான குருவிற்கு வணக்கம் )
குரவே ஸர்வ லோகாநாம்
பிஷஜே பவ ரோஹிநாம்
நிதயே ஸர்வ வித்யாநாம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:
( உலகம் அனைத்திற்கும் குருவானவரும்
தோன்றுவதும் மறைவதுமான பல நோயுற்ற
மனிதர்களுக்கு வைத்தியரும்
வித்தைகள் அனைத்திற்கும் இருப்பிடமாகத் திகழும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் உருவமாக விளங்கும் குருவிற்கு வணக்கம் )
அஜ்ஞான திமிராந்தஸ்ய
ஜ்ஞாநாந்ஜ நசலாகயா
சக்ஷூருந்மீலிதம் யே ந
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
( அறியாமை என்னும் பார்வை மறைப்பு நோயால்
விளங்கும் குருடனுக்கு ஞானம் என்கிற
அஞ்ஜனம் ( மை ) இடுகிற சலாகையால்
கண்களை ( ஞானக்கண் ) திறந்து விட்ட
ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் )
ஸ்ரீ குரோ தக்ஷிணாமூர்தே
பக்தாநுக்ரஹ தாயக
அநுஜ்ஞாம் தேஹி பகவந்
குரு ஸஹஸ்ரநாம சயாய மே.
( தட்சிணாமூர்த்தியான குருவே
பக்தர்களுக்கு அருள் புரிபவரே பகவானே
குருவின் ஆயிரம் நாமங்களை திரட்ட
எமக்கு அனுமதி தருவீராக )
வந்தே குருபதத் வந்தவம்
அவாஸ்மநஸ கோசரம்
ரக்த ஸுக்ல ப்ரபாமிஸ்ரம
தர்க்யம் த்ரைபுரம் மஹ:
( வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாததும்
சிகப்பு வெண்மை நிறைந்த ஒளிக்கலவையை கொண்டதும்
இன்னதென யூகிக்கமுடியாத முப்புரையின்
ஒளியான அந்த இரு குரு சரணங்களையும்
நமஸ்காரம் செய்கிறேன் )
ஸதாஸிவ ஸமாரம்பாம்
ஸங்கராசார்ய மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்.
( சதாசிவனில் தொடங்கி
சங்கராசார்யாரை நடுவில் கொண்டு நம்
ஆச்சார்யாள் வரை வந்த குரு பரம்பரையை
நமஸ்காரம் செய்கிறேன் )
ஸ்ருதி ஸ்ம்ருதி புராணாநாமாலயம்
கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம்
லோக சங்கரம்.
( வேதம் ; இதிகாசம் ; புராணம் இவைகளின்
இருப்பிடமாக விளங்குபவரும் உலகத்திற்கு
நன்மை புரிபவரும் ஆன ஆதிகுரு ஸ்ரீ
ஆதிசங்கர பகவத்பாதரை நமஸ்கரிக்கிறேன் )
அபார கருணாமூர்த்திம்
ஜ்ஞாநதம் ஸாந்த ரூபிணம்
ஸ்ரீ ஸந்த்ரஸேகர குரும்
ப்ரணமாமி முதா$ந்வஹம்.
( எல்லையற்ற கருணையின் வடிவானவரும்
அறிவை வழங்கும் சாந்த வடிவமானவரும்
ஆன ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி குருவை
தினமும் மகிழ்ச்சியுடன் நமஸ்கரிக்கிறேன் )
பரித்யஜ்ய மௌநம் ஜடாத:
ஸ்திதிம்ச வ்ரஜந் பாரதஸ்ய
ப்ரதேசாத் ப்ரதேசம் மதுஸ்யந்தி வாசா
ஜநாந் தர்மமார்கே நயந்
ஸ்ரீ ஜயேந்த்ரோ குருர் பாதி ஸித்தே.
( தட்சிணாமூர்த்தியாக ஏற்ற மௌனத்தையும்
ஆலிசை இருப்பையும் கைவிட்டு பாரதத்தின்
ஒரு பிரதேசத்தில் இருந்து மற்றொரு பிரதேசத்திற்கு சென்று சுற்றி திக்விஜயம் செய்து வருபவரும்
தேன் ஒழுகும் வாக்கினால் மக்களை தர்மத்தின் பாதையில் அழைத்துச் செல்பவரும் ஆன ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
குருவை நமஸ்கரிக்கிறேன் )
நமாம: சங்கராந் வாக்ய
ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதீம்
ஸ்ரீ குரும் சிஷ்டமார்காநு
நேதாரம் ஸந்மதி ப்ரதம்.
( நல்லோர்கள் சென்ற வழியில் கூட இருந்து
நம்மை அழைத்துச் செல்பவரும் நல்லறிவு
ஊட்டுபவரும் ஆன ஸ்ரீ சங்கர விஜயேந்திர
சரஸ்வதி குருவை நமஸ்கரிக்கிறேன் )
ஸ்ரீ குருப்யோ நம:
குருவுண்டு பயமில்லை
குறையொன்றும் இனியில்லை.
தென்னாடுடைய பெரியவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
