வராஹ புராணம் – பகுதி 1

217

யஜ்ஞ வராகம்
============

யஜ்ஞம் = உலகைச் சிருஷ்டிக்கும் சிறந்த சக்தி உடைய எண்ணம். வராகம் = கலவரம். குழப்பங்களிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி. யஜ்ஞம் என்பது யாகம். அதாவது யஜ்ஞத்தின் மூல சிருஷ்டி சக்தியை வெளிப்படுத்த உதவும் ஒரு சமயச்சடங்கு. யஜ்ஞ வராகத்தை விவரிக்க முப்பத்தைந்து வெவ்வேறு வகை பெயர்கள் விளங்குகின்றன. அவையாவன:

1. வேத பாதம் : வராகத்தின் நான்கு பாதங்களும் நான்கு வேதங்கள்.

2. யுபதம்ஷ்ட்ரம் : வராகத்தின் இரண்டு தந்தங்கள். விலங்குகளைப் பலியிட உபயோகப்படுத்தும் மேடை போன்றது.

3. கிரது தந்தம் : ஒரு யஜ்ஞத்தில் செய்யப்பட வேண்டிய அறுபத்து நான்கு பலிகளைக் குறிப்பது கிரது. இவை போன்று வராகத்தின் பற்கள் உள்ளவை.

4. சிதி மூலம் : சிதி என்றால் அக்கினிமேடை (அ) பலிபீடம். வராகம் வாய் பிளத்தல் இதை போன்றதாகும்.

5. அக்கினி ஜிஹ்வ : வராகத்தின் நாக்கு அக்கினி போலுள்ளது.

6. தர்ப்பலோமம் : வராகத்தின் உடல் மீதுள்ள உரோமம் மேடை மீது பரப்பப்படும் தர்ப்பைப் புல் போன்றது.

7. பிரம்ம சீர்ஷம் : வராகத்தின் தலை பிரம்மாவைப் போல் உள்ளது.

8. அஹோர திரிக்ஷானாதாரம் : இரவும், பகலும் வராகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.

9. வேதாங்க ச்ருதி பூஷனம் : அறிவின் பிரிவுகளாகிய ஆறு வேதாங்கங்கள் வராகத்தின் காதணிகள் ஆகும்.

10. ஆஜ்யனசா : நாசித்துவாரங்கள் யாகத்தில் தெளிக்கப்படும் நெய் போன்றுள்ளன.

11. சிருவண் துண்டம் : நீண்டுள்ள மூக்கு யாகத்தில் நெய் ஊற்றப் பயன்படும் கரண்டி போன்றது.

12. சாம கோஷ வன : சாமவேதத்துதிகள் போல் வராகத்தின் குரல்.

13. சத்திய தர்மமாயா : வராகம் முழுவதும் தருமநெறியும், உண்மையும் கொண்டது.

14. கர்மவிகரம் சத்கிருத : புரோகிதர்கள் செய்யும் சடங்குகள் வராகத்தின் சக்தி வாய்ந்த அசைவுகளைப் பெற்றுள்ளன.

15. பிராயச்சித்த நகோகோர : தவத்தின் போது செய்ய வேண்டிய கடினமான சடங்குகளே வராகத்தின் பயங்கர நகங்கள் ஆகும்.

16. பாஷுஜனுரு : பலிகொடுத்த மிருகங்களின் உடைந்த உடல்கள், எலும்புகள் வராகத்தின் முழங்கால் மூட்டுகளுக்கு ஒப்பாகும்.

17. மகாகிரித் : வராகத்தின் தோற்றம் யாகம் அனையது.

18. உத்கத்ரந்தா : நீண்ட சாமச்ருதிகள் வராகத்தின் குடல் போன்றவை.

19. ஹோமாலிங்கா : வராகத்தின் இரகசிய உருப்புக்கு நெய் ஆஹுதி உவமானம்.

20. பிஜோஷதி மாஹாபலா : மூலிகைகள், வேர்கள் வராகத்தின் உற்பத்தி உறுப்பு போன்றவை.

21. வாய்வந்தரத்மா : வராகத்தின் ஆன்மாவுக்கு ஒப்புமை வாயு பகவான்.

22. யஜ்ஞ ஸ்விக்ருதி : யாகத்தில் கூறப்படும் மந்திரங்கள் வராகத்தின் எலும்புகளுக்கு உவமையாகும்.

23. சோம ÷ ஷானிதா : வராகத்தின் ரத்தம் சோமபானம் போன்றது.

24. வேதிஸ்கந்தம் : வராகத்தின் அகன்ற புஜங்கள் பலிபீடம் ஒத்துள்ளன.

25. ஹவிர் கந்தம் : வராகத்தின் உடல் மணம், யாக நைவேத்தியத்தின் நறுமணம் ஆகும்.

26. ஹவ்யகவ்யதிவேகவனம் : வராகத்தின் அசைவுகளின் ஆர்வம், வேகம் அனையது யாகச் சடங்குகள்.

27. பிரக்வம்சகயம் : வராகத்தின் உடல், யாகசாலை அமைப்பில் குறுக்கு தூலம் போல் உள்ளது.

28. நாநாதிக்ஷ பிரன் விதம் : யாகத்தின் பூர்வாங்கப் பணிகள் வராகத்தின் ஆபரணங்கள் ஆகும்.

29. தக்ஷிணாஹ்ருதயம் : வராகத்தின் இதயம் யாக தக்ஷிணையாம்.

30. மகாசத்திரமாயம் : பெரிய யாகம் போன்றது வராகத்தின் உருவம்.

31. உபாகர்மாமாச்தருசகம் : யாகத்தின் போது படிக்கப்படும் வேதம் வராகத்தின் உதடுகள் ஆம்.

32. பிரவர்க்ய வர்த்த பூஷனம் : பிரவர்க என்பது பெரிய பால் பானை. அதனுள் சூடான வெண்ணெய் ஊற்ற அதிலிருந்து மேலே தீப்பிழம்புகள் எழும். வராகத்தின் மார்பில் உள்ள வளைவுகள் தீப்பிழம்புகள் போல் உள்ளன.

33. நானாசந்தோகதிபதம் : வராகத்தின் பலவித அசைவுகள் மந்திரத்தின் வெவ்வேறு சீர்ப்பிரமாணங்களை ஒக்கும்.

34. குஹ்யோபணிஷடசனம் : உபநிஷத்துகளைக் கற்றறிந்தார் மட்டுமே பங்கு கொள்ளும் விவாதம் போன்றது வராகத்தின் சரீரநிலை.

35. சாயாபத்னிஸஹாயோ : சூரியனை ஒத்துள்ளது வராகம். ஓரியன் (அ) கால புருஷ நட்சத்திரக் கூட்டத்தில் அமைப்பு தேவலோக வராகம் போல் காட்சி அளிக்கின்றது.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!