பூமித்தாய் வராகத்திடம் நாராயணனும், பிரம்மனும் ஒன்றே என்பது பற்றி விளக்கம் கேட்க எல்லா வகையிலும் ஒத்தவையே. ஆனால், நாராயணனை நேராகப் பார்ப்பது கடினமாகும். அவருடைய அவதாரத்தின் மூலமே காணமுடியும். பிரம்மன் நாராயணனின் ஒரு வடிவமே. அதேபோல் தான் சிவனும். நிலம், நீர் போன்ற ஐம்பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். விசுவரூபம், விசுவாத்மா நாராயணன் அன்றி வேறில்லை. அஷ்வஷிரன் என்ற தருமநெறி தவறாத மன்னன் கபிலரிடம், “நாராயணனைப் பூசிப்பது எவ்வாறு?” என்று கேட்டான். இங்கு இரண்டு நாராயணர்கள் உள்ளனர். யாராவது ஒருவரை நீ பூசிக்கலாம் என்றார் (கபிலரும் நாராயணரின் அம்சமே). அப்போது அஷ்வஷிரன் “நீ எப்படி நாராயணனாக முடியும்? நான்கு கைகளோ கருடனோ இல்லை. இரண்டு கைகள் மட்டுமே உள்ளன.” “திரும்பவும் என்னைப் பார்” என்று கபிலர் கூறிட அஷ்வஷிரன் கபிலரில் நான்கு கைகளும், கூடிய நாராயணனைக் கண்டான்.
“ஆனால், நாராயணன் கமலமலர் மேல் உட்கார்ந்திருப்பார்; சிவனும், பிரம்மாவும் அவரது பாகங்கள். அவர்கள் எங்கே?” “இப்போது பார்” என்று கபிலர் கூற, அங்கு நாராயணர் தாமரைமீது அமர்ந்திருந்தார். பிரம்மா, சிவன் இருவரும் கமலாசனராய் காணப்பட்டனர். “ஏன் எல்லா நேரத்திலும் நாராயணனைக் காணமுடியவில்லை” என்று கேட்டான். அதற்குக் கபிலர், “நாராயணரை எப்போதுமே காண நினைக்காதே. அவர் தன்னைத் தான் தெளிவாக்குவார். அவதாரம் எடுப்பவர், அவரைப் பறவை, விலங்குகளிலும் காணலாம். உன்னில் அவரைக் காணலாம். எதிலும், எங்கும் காணலாம். உணரலாம், உண்மையான ஞானம் பெற்றால் எதிலும் நாராயணனைக் காணலாம்.” “அறிவா? செயலா? எது சிறந்தது? உயர்ந்தது?” என்று மன்னன் அஷ்வஷிரன் கேட்டான். அதனை உணர்த்த கபிலர் ரைவ்யன், வாசு கதையைக் கூறினார்.
தொடரும்…
ஓம் நமோ வராஹாய!
