வராஹ புராணம் – பகுதி 2

305

சிருஷ்டி

1. ஆதி (அ) மூலசிருஷ்டி சர்க்கம் எனப்படும்.

2. அடுத்து பிரளயத்தால் ஏற்படும் அழிவும், அதன் பின் படைக்கப்படும் படைப்பு. இது பிரதி சர்க்கம் எனப்படும்.

பிருதிவி பெரிய மனக்குழப்பத்துடன் விஷ்ணுவை அடைந்து, “ஒவ்வொரு கல்ப முடிவிலும் எனக்கு நீர் ரக்ஷகன் ஆகிறீர். நீர் என்னைக் காத்து, அளித்து, புனர்நிர்மாணம் செய்கிறீர். எனினும் உங்களுடைய முழு சக்தியை நான் அறியேன். உமது அடையாளமும் நான் அறியேன். உமது அடையாளமும் நான் அறியேன். உங்களது அதிசயங்களைத் தெரியச் செய்வீர். உம்மை அடைவது எப்படி? சிருஷ்டியின் தோற்றமும், முடிவும் எவ்வாறு நிகழ்கிறது? நான்கு யுகங்களின் குணநலன்கள் எத்தன்மையதாகும்?” என்று பிருதிவியாகிய பூமாதேவி கேட்க, வராக அவதார விஷ்ணு ஐயப்பாடுகளை நீக்கும் விதத்தில் விடைகள் தந்தார். வராகம் ஒரு மாயச் சிரிப்பு சிரித்தது. பிருதிவி, பிரம்மாண்டம் (முட்டை), தேவர்கள், உலக மன்னர்கள் ஆகியவற்றை அந்த வராகத்தின் வயிற்றில் கண்டாள். அவள் விஷ்ணுவை மனமாரத் துதிக்க அந்த வராகப்பெருமான் பூதேவி வினாக்களுக்கு விடை அளிக்கலானார்.

பரமாத்மனிலிருந்து எல்லாம் தோன்றியது பற்றியும், மூன்று குணங்கள், ஐந்து இயற்கை சக்திகளாகிய நிலம், நீர், தீ, காற்று, விண் பற்றியும், பூச்சியத்திலிருந்து தோன்றிய உலகைப் பற்றியும் விவரித்தார். பிரம்மாவின் நாள் ஒரு கல்பம். அப்படி பல கல்பங்கள் முடிய தற்போது வராக கல்பம் நடைபெறுகிறது. இந்தக் கல்பத்தில்தான் விஷ்ணு வராக அவதாரம் எடுத்தார். இதுவரையில் சிருஷ்டியின் மூலப்பகுதி சர்க்கம். அடுத்து, பிரம்ம சிருஷ்டி தொடங்கி நடைபெறுகிறது. அது பிரதி சர்க்கம் எனப்படும். விஷ்ணு தன் யோகுதுயில் நீங்கி கண்விழித்து ஒன்பது நிலைகளில் உலகைப் படைத்தார். தமஸ், மோகம், மகாமோகம், தமிஸ்ரம், அந்தத்தமிஸ்ரம் என ஐந்து பகுதிகள் தோன்றின. இது பிராகிருத சர்க்கம் ஆகும். அடுத்த படைப்பு நாகம் (கம் = போதர்; நா = எதிர்மறை) எனவே அசையாத மரங்கள், மலைகள் படைக்கப்பட்டன. இவை அசையாதன ஆனால் வளர்வன. இது முக்கிய சர்க்கம் ஆகும். அடுத்து வளைவாக எழுதலும், வீழ்தலுமான படைப்பு ஏற்பட்டது. பறவைகள் போன்றவை தோன்றின. இவை திரபதயோனி படைப்பு எனப்பட்டது.

மற்றும், பல சர்க்கங்களில் தேவர்களும், மனிதர்களும், அசுரர்களும் தோன்றினர். தேவர்கள் அன்பும், மகிழ்ச்சியும் கொண்டார்கள். மனிதர்கள் புறப்பொருள்கள் மீது பற்று கொண்டவர்கள், அடிக்கடி மகிழ்ச்சி இழப்பவர், சில சமயம் தீயவர்கள், ஆசைமிக்கவர், நல்லவை உடையவர், அசுரர்கள், அமைதியற்றவர், சண்டை போடுபவர்கள், கொள்ளை, கொலை புரிபவர்கள். இவ்வாறு ஆதியில் விஷ்ணு சிருஷ்டித்தது சர்க்கம் என்றும் பிரம்மாவின் மூலம் படைக்கப்பட்டது பிரதி சர்க்கம் என்றும் அறிய வேண்டும்.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!