Sunday, October 22, 2023
HomePurana Kathaigalபெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை போய் சேருமா? மகா பெரியவா விளக்கம்!

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை போய் சேருமா? மகா பெரியவா விளக்கம்!

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை போய் சேருமா? மகா பெரியவா விளக்கம்!

கணவன் மனைவி இருவரும் மகா பெரியவாவை பார்க்க சென்றுள்ளார்கள். ஒரு பெரியவர் கூறியதைக் கேட்டு இருவரும் மகா பெரியவா பார்ப்பதற்காக மடத்திற்கு சென்றுள்ளார்கள். ஒன்றாக வந்த இருவரும் மடத்திற்குள்ளாக தனித்தனியாக அமர்ந்து கொண்டனர். இதனை மகா பெரியவா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். தனது சீடனை அழைத்து மனைவியை மட்டும் உள்ளே அழைத்து வரச் சொல்லி சொன்னார்.

அந்த மனைவியும் உள்ளே வந்து மகா பெரியவா அவர்களை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, ஒருவித தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார். உடனே மகா பெரியவா அந்த பெண்ணை இருக்கையில் அமரச் சொன்னார். உன்னுடைய மகன் பித்து பிடித்தது போன்று இருப்பதற்கு உன்னுடைய கணவன் வழி சொந்த பந்தங்கள் காரணம் கிடையாது. உனது கணவர் வீட்டு சொந்த பந்தங்களை நீ திட்டிக்கொண்டே சாபம் கொடுத்து கொண்டே இருப்பதன் மூலம், மகனுக்கு நிச்சயமாக உடல்நிலை சரியாக போவது கிடையாது.

அடுத்தவர்களை திட்டிக் கொண்டே இருப்பவர்களை அம்பாள் கூட நிச்சயம் மன்னிக்கவே மாட்டாள். உனது மகனுக்கு தானாக சரியாகிவிடும் என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார். உடனே அந்த பெண்ணிற்கு ஒரே ஆச்சரியம் நாம் எதும் சொல்லாமல், மனதில் உள்ளவற்றை பெரியவா அப்படியே சொல்கிறாரே என்று நினைத்து பிரமித்து போய்விட்டாள்.

நாம் செய்த கர்ம வினையின் மூலமாகத்தான் கஷ்டமும் நஷ்டமும் வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு பிறக்கும் போதே நன்மை நடக்கும். சிலருக்கு காலம் கழித்த பிறகு நன்மை நடக்கும். அது அவரது கர்ம வினையால் நிர்ணயிக்கப்படுகின்றது. தினந்தோறும் வீட்டில் பூஜை செய்து வாசலில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றி வைப்பது நல்லது. வீடு சுத்தமாக இருந்து மனது அழுக்கோடு இருந்தால் கஷ்டங்கள் ஒரு போதும் தீராது, என்று பெரியவா சொல்லி முடித்தார்.

பிறகு அந்த பெண்ணை வெளியில் இருக்க வைத்துவிட்டு அவரது கணவரை அழைத்தார். அவரிடம் ஆசி பெற்று, அங்கேயே 10 நிமிடங்கள் இருந்தார். அதன் பிறகு அந்தப் பெண்ணையும் அழைத்தார். இருவரும் ஆசி வாங்கிக் கொண்டனர். நீங்கள் இருவரும் ஒரு மண்டலம் கழித்து உங்களது மகனோடு திரும்பவும் வந்து பார்ப்பீர்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இறுதியாக பெரியவா சொன்னபடி ஒரு மண்டலம் கழித்து வந்து கணவன் மனைவி இருவரும் மனநிலை சரியில்லாத மகனுடன் வந்து பெரியவாவிடம் எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்லி ஆசிர்வாதம் பெற்றனர். பிறக்கும்போதே அறிவாலியாக பிறந்தவன், படித்து முடித்து வேலைக்கும் சென்றான். ஆனால், வேலைக்கு சென்ற சில நாட்களில் அவனது சுபாவம் எல்லாமே பைத்தியம் பிடித்தவன் போன்று மாறிவிட்டது. எங்கெங்கோ சென்றுள்ளார்கள், ஒன்றும் சரியாகவில்லை. கடைசியாக பெரியவாவிடம் வந்து எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற்று சென்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + six =

Most Popular