Saturday, October 28, 2023
HomePurana Kathaigalதிரு நாம கதை - யார் பெரியவர் கடவுளா அல்லது அவரது நாமமா

திரு நாம கதை – யார் பெரியவர் கடவுளா அல்லது அவரது நாமமா

ஒரு முறை ஸ்ரீ ராமன் தனது வனவாசம் முடிந்து நாடு திரும்பிய போது முனிவர்கள் எல்லாம் விவாதம் நடத்தினர் ராம நாம மகிமை பெரியதா அல்லது ஸ்ரீ ராமன் பெரியவரா என்று.

பல யோசனைகள் சொல்ல பட்ட போதும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை ஆகையால் அவர்கள் நாரத முனிவரை அணுகினார்கள்.

நாரத முனி இதற்கு பதிலளிக்க சில நாட்கள் அவகாசம் தரும் படி கேட்டுக்கொண்டார்

நாரத முனி இறுதியில் பக்த ஆஞ்சநேயனை அணுகி அவரது உதவியை நாட எண்ணினார். அவரை அணுகி தனக்கு இந்த விஷயத்தில் உதவுமாறு கேட்டுக்கொண்டார். அனுமனும் அதற்கு இசைந்தார்.

நாரதர் அனுமனிடம் “நீ சில சேட்டைகள் செய்வாயாக அது ஸ்ரீ ராமரின் குருவான விஸ்வாமித்ரரை கோபமடைய செய்ய வேண்டும் உடனே அவர் உன்னை தண்டிக்க ஸ்ரீ ராமரிடம் கூறுவார்” மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

அனுமனும் அதற்கிணங்க தனது சேட்டையை ஆரம்பித்தார்.  இதை கண்டு விஸ்வாமித்ரர் கோபமுற்று ஸ்ரீ ராமரிடம் “நாளை நீ இந்த அனுமனை தண்டிக்க வேண்டும்” என்று கூறினார். இங்கிருக்கும் முனிவர்கள் மற்றும் ஊர்மக்கள் முன்னிலையில் நீ அனுமன் மீது சரமாரியாக அம்பு எய்த வேண்டும் இது குருவை தொந்தரவு செய்பவர்க்கு ஓர் பாடமாக அமையட்டும் என்றார்.

முதலில் ஸ்ரீ ராமர் அனுமனின் சேட்டைகளை கண்டு ஆச்சர்யப்பட்டாலும் பின்னர் குருவின் ஆணையை தட்ட முடியாதாகையால் அதை ஏற்று மிகுந்த கனத்த இதயத்துடன் அரண்மனை திரும்பினார். இதனிடையில் நாரதர் அனுமனிடம் ராமர் அம்பு எய்தும் போது இடைவிடாது ராம நாமத்தை ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பொழுது புலர்ந்தது. முனிவர்களும் ஊர் மக்களும் அங்குள்ள ஆற்றங்கரையோரம் குழுமினர்.

ஸ்ரீ ராமர் கனத்த இதயத்துடன் அனுமனை நோக்கி அம்பை செலுத்தினார் அம்பு நேராக அனுமனை நோக்கி பாய்ந்தது ஆனால் கடைசி நொடியில் தனது திசையை மாற்றி தரையில் விழுந்தது.

அனுமன் கண்களை மூடி ராம நாமத்தை ஜெபித்த வண்ணம் இருந்தார் ஸ்ரீ ராமர் எய்திய அம்புகள் எல்லாம் திசை மாறி வெவ்வேறு இடங்களில் விழுந்தது.

அனைத்து அம்புகளும் தீர்ந்த உடன் விஸ்வாமித்ரர் ஸ்ரீ ராமனை நோக்கி மிகவும் பலம் வாய்ந்த ப்ரஹ்மஸ்தாரத்தை ப்ரயோகிக்க கூறினார். அவ்வமயம் நாரதர் குறுக்கிட்டு விஸ்வாமித்திரரை பின்வருமாறு சாந்த படுத்தினார் “மேன்மையான முனியே நீரே குருவுக்கெல்லாம் குரு அனுமனை மன்னிப்பதன் மூலம் தாங்கள் கருணை மிகுந்த குருவும் ஆகுவீர்கள்” என்றார். விஸ்வாமித்ரரும் நாரதரின் வேண்டுகோளுக்கிணங்க அனுமனை மன்னித்தார்.

பின்னர் அங்கிருந்த முனிவர்கள் இடத்தில் தற்போது “உங்களுடைய சந்தேகத்திற்கு விடை கிடைத்ததா?” என்று கேட்டார். முனிவர்களும் ஸ்ரீ ராம நாம மகிமையை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் அனுமனின் பக்தியையும் ஸ்ரீ ராம நாம மகிமையும் அறியலாம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =

Most Popular