எப்போதும், எந்த நேரமும் சொல்ல வேண்டிய மந்திரம்!
காலையில் எழுந்ததும் மட்டுமல்ல. எப்போதுமே. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓம் நமசிவாய மந்திரத்தைச் சொல்லலாம். எந்த மொழியிலும் ஒரு வார்த்தையில் உருவாகிற அதிர்வலைகள் தான்; அந்த வார்த்தைக்கு சக்தி அலைகளை தந்து; அந்த வார்த்தையை மந்திரமாக மாற்றுகிறது.
உதாரணமாக- சீ போ. என்ற வார்த்தைக்கும். நீ வாழ்க. என்கிற வார்த்தைக்கும். அர்த்தங்கள் மாறுவது போலவே; அந்த வார்த்தையில் உருவாகிற அதிர் வலைகளும் மாறுவதைக் காணலாம். முன்னது எதிர் மறையாகவும், பின்னது நேர்மறையாகவும், மாறுவதை உணரலாம். இப்படி நேர்மறை எண்ணங்களாகவே உருவாக்கக்கூடிய தன்மை வாய்ந்தது மந்திரங்கள்.
ஓம் மஹா கணாதி பதையேநமஹ.
ஓம் சரவணபவ. ஓம் சக்தி.
ராம் ராமாய நம ஹ.
ஓம் நமசிவாய. லாயில்லாஹா
இல்லல்லாஹா.
ஆமேன்.
(அவரவர் மதத்திற்கு ஏற்ப)
உச்சரித்துப் பார்க்கலாம்.
சொன்ன அதிர்வுகளை உணரலாம்.
இந்த சிறுகதையின் மூலம்
மந்திரத்தை உச்சரிப்பதின்
மூலம் அதன் பயன்களை
தெரிந்துக் கொள்ளலாம்.
சிவனுக்கு தங்கச்சி லட்சுமி. தன் தங்கச்சியைபெரிய இடத்தில் கல்யாணம் செய்து தர தன்னுடைய அனைத்து ஐஸ்வர்யங்களையும் செலவு செய்து கையிருப்பு எதுவுமின்றி வெறும் ஆளாய் சிவன் இருக்கிறார். அவருடைய பக்தர்கள் அண்ணனிடம் வந்து கேட்டால் கொடுப்பதற்குக் கூட அவரிடம் எதுவும் இல்லையே என்று மனம் வருந்தி.அண்ணனுடைய இந்த நிலைமையை கண்டு லட்சுமி வருத்த மிகுதியில். ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்கிறவர் எவரானாலும் அவருக்கு ஐஸ்வர்யத்தை வழங்குவேன் என்று சபதம் ஏற்கிறார்.
ஓம் நமசிவாய. மந்திரத்தை மனம் உருகி சொல்கிறவர் எவரானாலும் அவருக்கு ஒரு குறையும் வந்ததில்லை. வரவும் வராது. இதை வாய் விட்டு சொல்வதை விட மனசுக்குள் உச்சரிப்பதில் சக்தி அதிகம். இந்த மந்திரங்களின் அர்த்தம் தெரிந்து தான் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. குரு உபதேசம் பெற்று தான் சொல்ல வேண்டும் என்பதும் அவசியமில்லை. நந்தி தேவரையே குருவாக நினைத்து கொண்டால் போதும். பக்தியோடு சொன்னால் போதும். கை மேல் பலன் உண்டு.