வாழ்வில் வளம் சேர்க்கும் 108 அம்மன் போற்றிகள்
1.ஓம் ஜெகத்ரட்சகியே போற்றி
2.தட்ச புத்ரியே போற்றி
3.விஷ்ணு சோதரியே போற்றி
4.சிவ பார்வதியே போற்றி
5.கணபதியின் அன்னையே போற்றி
6.செந்தில் வேலன் தாயே போற்றி
7.ஜ்வாலா கிரீடாதாரியே போற்றி
8.நாகக் குடையின் கீழ் அமர்ந்தவளே போற்றி
9.சிம்ம வாகினியே போற்றி
10.மஹிசாசுர மர்த்தினியே போற்றி
11.கரும்பு வில்லை வைத்திருப்பவளே போற்றி
12.திரிசூலியே போற்றி
13. பிறைசூடியே போற்றி
14.மலைக்கோட்டை மட்டுவார் குழலி அம்மனே போற்றி
15.நாகநாத சுவாமி ஆனந்த வல்லி அம்மனே போற்றி
16.திருவாணைக்கா அகிலாண்டேஷ்வரியே போற்றி
17.உறையூர் வெக்காளி அம்மனே போற்றி
18.புத்தூர் குழுமாயி அம்மனே போற்றி
19.புத்தூர் திரௌபதி அம்மனே போற்றி
20.சமயபுரம் மாரி அம்மனே போற்றி
21.கண்ணபுரம் மாரியம்மனே போற்றி
22. மாகாளிக்குடி உஜ்ஜயினி காளி அம்மனே போற்றி
23.திருப்பட்டூர் பிரம்ம சம்பத் கௌரி அம்மனே போற்றி
24.திருவரம்பூர் நறுங்குழல் அம்மனே போற்றி
25.திருநெடுங்குளம் ஒப்பில்லா அம்மனே போற்றி
26.தஞ்சை பெரியநாயகி அம்மனே போற்றி
27.புன்னை நல்லூர் மாரியம்மனே போற்றி
28.திருவாரூர் கமலாம்பிகை அம்மனே போற்றி
29.குடவாசல் பெரிய நாயகி அம்மனே போற்றி
30..நாகை நீலாயதாட்சி அம்மனே போற்றி
31.மாயூரம் அபயாம்பிகை அம்மனே போற்றி
32.பாபநாசம் உலகம்மையே போற்றி
33.தாராசுரம் தெய்வநாயகி அம்மனே போற்றி
34.திருவையாறு தரும சம்வர்த்தினி அம்மனே போற்றி
35.கும்பகோணம் ஆதிகும்பேஷ்வர மங்கள நாயகி அம்மனே போற்றி
36.திருபுவனம் தர்மசம்வர்த்தினி அம்மனே போற்றி
37.திங்களூர் பெரிய நாயகி அம்மனே போற்றி .
38.திருக்கடையூர் அபிராமி அம்மனே போற்றி
39.திருமணஞ்சேரி கோகிலாம்பாளே போற்றி
40.வேதாரண்யம் வேதநாயகி அம்மனே போற்றி
41.சூரியனார் கோயில் உஷாதேவி அம்மனே போற்றி
42.திருநாகேஸ்வரம் பிறையணி நுதலாள் போற்றி
43.திருவிசை நல்லூர் பெருநலமாமுலை அம்மனே போற்றி
44.திருவிடை மருதூர் சுந்தர குஜாம்பிகையே போற்றி
45.மயிலாடுதுறை அபயாம்பிகையே போற்றி
46.வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி அம்மனே போற்றி
47.திருப்பனந்தாள் தாலவனேஷ்வரி அம்மனே போற்றி
48.பட்டீஸ்வர துர்க்கையே போற்றி
49.திருக்கருகாவூர் கர்ப்ப ரஷாம்பிகை அம்மனே போற்றி
50.திருமங்கலக்குடி மங்களாம்பிகை அம்மனே போற்றி
51.பாபநாசம் உலகம்மை அம்மனே போற்றி
52.திருவாருர் நீலோத் பலாம்பாள் அம்மையே போற்றி
53.நாகை நீலாயதாட்சி அம்மனே போற்றி
54.நாகை நெல்லுக் கடை மாரி அம்மனே போற்றி
55.வலங்கைமான் பாடைகட்டி மாரி அம்மனே போற்றி
56.கொற்கை வெற்றி வேல் அம்மனே போற்றி
57.சீர்காழி திருநிலை நாயகி அம்மனே போற்றி
58.சிதம்பரம் உமையாம்பிகை அம்மனே போற்றி
59.காரைக்கால் புனிதவதி அம்மனே போற்றி
60.திருநள்ளாறு பிராணேஷ்வரி அம்மனே போற்றி
61.நார்த்தாமலை மாரி அம்மனே போற்றி
62.புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மனே போற்றி
63.திருக்கோகர்ணம் அரைக் காசு அம்மனே போற்றி
64.திருவெப்பூர் மாரியம்மனே போற்றி
65.திருமயம் வேணு வனேஷ்வரி அம்மனே போற்றி
66.காரைக்குடி கொப்புடை அம்மனே போற்றி
67.இளஞ்சி மாரி அம்மனே போற்றி
68.மதுரை மீனாட்சி அம்மனே போற்றி
69.மதுரை தெப்பக்குளம் மாரி அம்மனே போற்றி .
70.சிவகங்கை வீரமாகாளி அம்மனே போற்றி
71.மானா மதுரை ஆனந்தவல்லி அம்மனே போற்றி.
72.ராமநாதபுரம் வாராஹி அம்மனே போற்றி
73.கோவை தண்டு மாரி அம்மனே போற்றி
74.ஆனை மலை மாசாணி அம்மனே போற்றி
75 .ஈரோடு பவானி அம்மனே போற்றி
76. பண்ணாரி அம்மனே போற்றி
77.மணப்பாறை வேப்பிலை மாரியம்மனே போற்றி
78..திண்டுக்கல் கோட்டை மாரியம்மனே போற்றி
79.நெல்லை காந்திமதி அம்மனே போற்றி
80..ஸ்ரீவில்லி புத்தூர் சிவகாமி அம்மனே போற்றி
81.கன்னியாகுமரி கன்னிகா பரமேஸ்வரியே போற்றி
82.குற்றாலம் குழல் வாய் மொழி அம்மனே போற்றி.
83தென்காசி ஆதிபராசக்தி அம்மனே போற்றி
84.மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனே போற்றி
85.மயிலாப்பூர் கற்பகாம்பாளே போற்றி
86.திருவான்மியூர் திரிபுர சுந்தரி அம்மனே போற்றி
87.புட்லூர் பூங்காவனத்தம்மனே போற்றி
88.திருவேற்காடு கருமாரி அம்மனே போற்றி
89.மாங்காடு காமாட்சி அம்மனே போற்றி
90.காருக்குடி கருணாகர வல்லி அம்மனே போற்றி
91.காஞ்சி காமாட்சி அம்மனே போற்றி
92.காஞ்சி ஏலவார் குழுலி அம்மனே போற்றி
93.வேலூர் ஜலகண்டேஷ்வரியே போற்றி
94.திருவண்ணாமலை உண்ணாமலை அம்மனே போற்றி
95.காசி விசாலாட்சி அம்மனே போற்றி
96.மங்களூர் மங்களாதேவி அம்மனே போற்றி
97.கொல்லூர் மூகாம்பிகை அம்மனே போற்றி
98.சோட்டானிக்கரை பகவதி அம்மனே போற்றி
99.சிறுவாச்சூர் மதுர காளி அம்மனே போற்றி
100.வேப்பிலைக் காரியே போற்றி
101.எலுமிச்சை பழ மாலை அணிபவளே போற்றி
102.பச்சை பட்டினி விரதம் இருப்பவளே போற்றி
103.பூச்சொரியலில் மகிழ்பவளே போற்றி
104.மாவிளக்கில் ஒளிர்பவளே போற்றி
105.லலிதா சகஸ்ரநாமத்தில் உறைபவளே போற்றி
106.நவராத்திரி நாயகியே போற்றி
107.திருவிளக்கு பூஜையில் நிறைபவளே போற்றி.
108.குலம் காப்பவளே போற்றி
இப்போற்றியில் அம்மன் திரு நாமத்துடன், பிரசித்தி பெற்ற அக்கோயில் இருக்கும் ஊரின் பெயர்களும் உள்ளது. அவரவர் விருப்பப்படி, ஊரின் பெயர் தவிர்த்து அம்மன் திருநாமத்தை பாராயணம் செய்யலாம். அவரவர் ஊரில் குடி கொண்டு இருக்கும் அம்மன் திருநாமத்தையும் இத்துடன் இணைத்து கொள்ள 108 என்ற எண்ணிக்கையும் பல்கிப் பெருகும். நம் வாழ்வும் வளமாகும்.
