கர்ம வினைகள் நீக்கும் கோயில்!
எத்தனையோ முறை திருப்பதி சென்று தரிசனம் செய்திருப்போம். ஆனால், இந்தக் கோயிலுக்கு மட்டும் சென்றிருப்போம். இனிமேல் திருப்பதி சென்றால் மறக்காமல் இந்தக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். அப்படி தரிசனம் செய்தால், கர்மவினை நீங்கும் என்பது ஐதீகம். அதோடு, வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும்.
அப்படி என்ன கோயில்? எங்கு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ரேணிகுண்டாவிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது குடுமல்லம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பரசு ராமேஸ்வர கோயிலில் கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.
லிங்கத்தில் உயரமோ 5 அடி, தடிமன் 1 அடி, லிங்கத்தின் தண்டுப்பகுதி 4 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
பழமையான சிவலிங்கம்:-
உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் ஹரப்பாவில் உள்ளது. அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. அது தான் குடிமல்லம் என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம். மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர்.
உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும். இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர். அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
குறிப்பு: பதிவுக்கு ஏற்ற புகைப்படம் இல்லை.
