சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட வர பலத்தாலும், இயல்பான அரக்கத்தனத்தாலும் இந்திரன் மீது போர் தொடுத்து, தேவருலகத்தையே அடிமைப்படுத்தினர். தேவர்களின் பொறுப்புகளையெல்லாம் தாமே ஏற்று நடைமுறைப்படுத்தவும் முற்பட்டனர். தம் சுகபோகங்களையும், செல்வங்களையும் இழந்த தேவர்கள், தேவியைத் தஞ்சமடைந்தனர். தங்களை அரக்கர் பிடியினின்றும் காத்தருள வேண்டினர்.
யார் தம்மை அவர்களது ஆபத்து காலத்தில் துதிக்கிறார்களோ, அவர்களின் துயர் அனைத்தையும் அக்கணமே போக்குவேன் என தேவி அவர்களுக்கு ஏற்கெனவே வரமளித்திருந்தாள். அதனால் தேவர்கள் மலையரசாகிய இமயத்தை அடைந்து விஷ்ணுமாயாவான பராசக்தியை துதித்தார்கள்.
இத்துதி தேவி மஹாத்மியத்தில் இடம் பெற்றுள்ளது. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் இத்துதியை பாராயணம் செய்பவர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்கிறது தேவி மகாத்மியம்.
தேவா ஊசு: ||
நமோ தேவ்யை மஹா தேவ்யை சி’வாயை ஸததம் நம : |
நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதாஸ்மதாம் ||
தேவர்கள் கூறியது:-
தேவிக்கு நமஸ்காரம். மஹா தேவிக்கு நமஸ்காரம். மங்கள வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம். இயற்கை என்கின்ற வடிவானவளுக்கு நமஸ்காரம். மங்கள ஸ்வரூபிணியான அன்னையை அடக்க ஒடுக்கமாக நாங்கள் வழிபடுகின்றோம்.
ரௌத்ராயை நமோ நித்யாயை கௌர்யை தாத்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்நாயை சேந்துரூபிண்யை ஸுகாயை ஸததம் நம: ||
பயங்கர வடிவை உடைய தேவிக்கு நமஸ்காரம். நித்தியமானவளுக்கு நமஸ்காரம். கௌரிக்கு நமஸ்காரம். உலகையே தாங்குபவளுக்கு நமஸ்காரம். ஒளி வடிவானவளுக்கு நமஸ்காரம். சந்திரப்பிரபையை போன்ற தேவிக்கு நமஸ்காரம். இன்ப வடிவானவளுக்கு என்றென்றும் எங்கள் நமஸ்காரம்.
கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்த்யை ஸித்த்யை குர்மோ நமோ நம : |
நைர்ருத்யை பூப்ருதாம் லக்ஷ்ம்யை ச’ர்வாண்யை தே நமோ நம : ||
சரணமடைந்தோருக்கு எல்லா நலன்களுமாகத் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும், மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரம். புவியாளும் அரசருக்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவனின் பத்தினிக்கு மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரங்கள்.
துர்காயை துர்கபாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை |
க்யாத்யை ததைவ க்ருஷ்ணாயை தூம்ராயை ஸததம் நம: ||
கஷ்டங்களைக் கடக்க உதவும் துர்க்கை வடிவினளும், அனைத்தின் சாராம்சம் ஆனவளும், அனைத்தயுமே ஆக்குபவளும், கியாதி வடிவினளும், கரிய நிறத்தவளும், புகை வடிவினளும் ஆன தேவிக்கு என்றென்றும் நமஸ்காரம்.
அதிஸௌம்யாதி ரௌத்ராயை நாதாஸ் தஸ்யை நமோ நம : |
நமோ ஜகத்ப்ரதிஷ்ட்டாயை தேவ்யை க்ருத்யை நமோ நம : ||
இனிய வடிவினை உடையவளும், பயங்கர வடிவினை உடையவளும் ஆகிய தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். உலகின் ஆதாரமாகவும், உலகின் இயக்கமாகவும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
யாதேவி ஸர்வ பூதே ஷு விஷ்ணு மாயேதி ச’ப்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் விஷ்ணு மாயை என்று கூறப்படுகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு சேதநேத்யபிதீயதே |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சைதன்ய வடிவினள் என்று கூறப்படுகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு புத்திரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் புத்திவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு நித்ராரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நித்திரைவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு க்ஷுதாரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பசிவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு ச்சாயாரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பிரதி பிம்பவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு ச’க்தி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவில் உறை கின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு த்ருஷ்ணா ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் வேட்க்கையின் வடிவில் உறைகின்றாளோ , அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு க்ஷாந்தி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பொறுமையின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்
யாதேவி ஸர்வபூதே ஷு ஜாதி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜாதியின் வடிவில் உறைகின்றாளோ,அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு லஜ்ஜா ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நாணத்தின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு சா’ந்தி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சாந்தி வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு ச்’ரத்தா ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சிரத்தையின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு காந்தி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் காந்தியின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு லக்ஷ்மீ ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் செல்வத்தின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு வ்ருத்தி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜீவனோபாயம் என்னும் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு ஸ்ம்ருதி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஞாபக சக்தியின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு தயா ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் இரக்கத்தின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு துஷ்டி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் திருப்தியின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு மாத்ரு ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் தாயின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வபூதே ஷு ப்ராந்தி ரூபேணே ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் மயக்கத்தின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
இந்த்ரியாணாமதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலே ஷுயா |
பூதே ஷு ஸததம் தஸ்யை வ்யாப்திதேவ்யை நமோ நம: ||
எந்ததேவி இந்திரியங்களை ஆள்பவளாக, எல்லா உயிர்களிடத்தும், எல்லப் பொருட்களிடத்தும் வியாபித்து நிற்கின்றாளோ; அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
சிதிரூபேண யா க்ருத்ஸனமேதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத் |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை|| நமஸ்தஸ்யை நமோ நம: ||
எந்ததேவி இந்த உலகம் முழுவதிலும் சைதன்யவடிவினளாக வியாபித்து நிற்கின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
“அம்மே நாராயணா தேவி நாராயணா
லக்ஷ்மி நாராயணா பத்ரே நாராயணா
