சந்திரன் 108 போற்றி!
- ஓம் அம்புலியே போற்றி!
- ஓம் அமுத கலையனே போற்றி!
- ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி!
- ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி!
- ஓம் அபய கரத்தனே போற்றி!
- ஓம் அமைதி உருவனே போற்றி!
- ஓம் அன்பனே போற்றி!
- ஓம் அஸ்த நாதனே போற்றி!
- ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி!
- ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி!
- ஓம் ஆரமுதே போற்றி!
- ஓம் ஆத்திரேய குலனே போற்றி!
- ஓம் இனிப்புப் பிரியனே போற்றி!
- ஓம் இரண்டாம் கிரகனே போற்றி!
- ஓம் இனியவனே போற்றி!
- ஓம் இணையிலானே போற்றி!
- ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி!
- ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி!
- ஓம் இரு கரனே போற்றி!
- ஓம் இரவு நாயகனே போற்றி!
- ஓம் ஈய உலோகனே போற்றி!
- ஓம் ஈரெண் கலையனே போற்றி!
- ஓம் ஈர்ப்பவனே போற்றி!
- ஓம் ஈசன் அணியே போற்றி!
- ஓம் உவகிப்பவனே போற்றி!
- ஓம் உலகாள்பவனே போற்றி!
- ஓம் எழில்முகனே போற்றி!
- ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி!
- ஓம் ஒணத்ததிபதியே போற்றி!
- ஓம் ஒளடதீசனே போற்றி!
- ஓம் கடகராசி அதிபதியே போற்றி!
- ஓம் கதாயுதனே போற்றி!
- ஓம் கலா நிதியே போற்றி!
- ஓம் காதற் தேவனே போற்றி!
- ஓம் குறு வடிவனே போற்றி!
- ஓம் குமுதப் பிரியனே போற்றி!
- ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி!
- ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி!
- ஓம் கௌரி குண்டத்தருள்பவனே போற்றி!
- ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி!
- ஓம் சந்திரனே போற்றி!
- ஓம் சஞ்சீவியே போற்றி!
- ஓம் சதுரப் பீடனே போற்றி!
- ஓம் சதுரக் கோலனே போற்றி!
- ஓம் சமீப கிரகனே போற்றி!
- ஓம் சமுத்திர நாயகனே போற்றி!
- ஓம் சாமப் பிரியனே போற்றி!
- ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி!
- ஓம் சிவபக்தனே போற்றி!
- ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி!
- ஓம் சிங்கக் கொடியனே போற்றி!
- ஓம் சித்ராங்கதனுக்கருளியவனே போற்றி!
- ஓம் தண்ணிலவே போற்றி!
- ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி!
- ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி!
- ஓம் தண்டாயுதனே போற்றி!
- ஓம் தட்சன் மருகனே போற்றி!
- ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி!
- ஓம் தாரைப் பிரியனே போற்றி!
- ஓம் திருமகள் சோதரனே போற்றி!
- ஓம் திங்களூர்த் தேவனே போற்றி!
- ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி!
- ஓம் திங்களே போற்றி!
- ஓம் திருஉருவனே போற்றி!
- ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி!
- ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி!
- ஓம் தென்கீழ் திசையனே போற்றி!
- ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி!
- ஓம் தூவெண்மையனே போற்றி!
- ஓம் தொழும் பிறையே போற்றி!
- ஓம் நரி வாகனனே போற்றி!
- ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி!
- ஓம் நெல் தானியனே போற்றி!
- ஓம் நீர் அதிதேவதையனே போற்றி!
- ஓம் பயறு விரும்பியே போற்றி!
- ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி!
- ஓம் பத்துபரித் தேரனே போற்றி!
- ஓம் பரிவாரத் தேவனே போற்றி!
- ஓம் பல்பெயரனே போற்றி!
- ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி!
- ஓம் பாண்டவர் தலைவனே போற்றி!
- ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி!
- ஓம் புதன் தந்தையே போற்றி!
- ஓம் போற்றாரிலானே போற்றி!
- ஓம் பெண் கிரகமே போற்றி!
- ஓம் பெருமையனே போற்றி!
- ஓம் மதியே போற்றி!
- ஓம் மனமே போற்றி!
- ஓம் மன்மதன் குடையே போற்றி!
- ஓம் மகிழ்விப்பவனே போற்றி!
- ஓம் மாத்ரு காரகனே போற்றி!
- ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி!
- ஓம் முத்துப் பிரியனே போற்றி!
- ஓம் முருக்கு சமித்தனே போற்றி!
- ஓம் முத்து விமானனே போற்றி!
- ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி!
- ஓம் மூலிகை நாதனே போற்றி!
- ஓம் மேற்கு நோக்கனே போற்றி!
- ஓம் ரோகிணித் தலைவனே போற்றி!
- ஓம் ரோகமழிப்பவனே போற்றி!
- ஓம் வைசியனே போற்றி!
- ஓம் வில்லேந்தியவனே போற்றி!
- ஓம் விண்ணோர் திலகமே போற்றி!
- ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி!
- ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி!
- ஓம் வெண்குடையனே போற்றி
- ஓம் வெள் அலரிப் பிரியனே போற்றி
- ஓம் வெண் திங்களே போற்றி
