மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் துர்க்கை அம்மன் ஸ்தோத்திரம்

763

இந்த ஸ்தோத்திரத்தை நாம் ராகுகாலத்தில் உச்சரித்து வந்தால் திருமணம் தடை, மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், நம் வீட்டில் செல்வச் செழிப்பு இவை அனைத்தும் கைகூடிவரும்.

துயரத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வேண்டி நெய்தீபம் ஏற்றி இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி வந்தால் போதும். உங்களுக்கான துர்க்கையம்மன் ஸ்தோத்திரம் இதோ.

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

உலகை ஈன்றவள் துர்க்கா உமையும் ஆனவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

செம்மையானவள் துர்க்கா ஜெபமும் ஆனவள்
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்
இம்மையானவள் துர்க்கா இன்பம் ஆனவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே தேவி
துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

உயிருமானவள் துர்க்கா உடலும் ஆனவள்
உலகமானவள் துர்க்கா எந்தன் உடமை ஆனவள்
பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

துன்பம் அற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

குருவும் ஆனவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே
திருவும் ஆனவள் துர்க்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே எனைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!
காவிரிப் பெண்ணே வாழ்க!

இந்த ஸ்தோத்திரத்தை நாம் ராகுகாலத்தில் உச்சரித்து வந்தால் திருமணம், மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், நம் வீட்டில் செல்வச் செழிப்பு இவை அனைத்தும் கைகூடிவரும்.