ஸ்ரீ கஜமுக பாத நமஸ்தே….
” மங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி !
சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி !
தேய்பிறை சதுர்த்தியில் தேவனைத் தொழுவதால்…
வளர்பிறை ஆகுமே வாழ்வில் என்றுமே !
சந்திரன் தவமிருந்து…
மங்கள கணபதியின்
வரங்களை தீர்க்கமாய் பெற்றதும் இந்நாளே !
அங்காரகன் அவனும்
கிரகப் பதவியோடு…
மங்கலன் எனும் பெயரும் பெற்றதும் இந்நாளே !
ஈஸ்வரன் சனிபகவான்
பார்வையால் வரும்தோஷம்
யாவையும் தீர்த்திடுமோர் புண்ணியத் திருநாளாம் !
நோய்நொடி தீர்த்துநல்
ஆயுளைக் கூட்டியே..
பாக்யமும் சேர்த்திடும் அற்புதப் பெருநாளாம் ….”
கணபதி சரணம்..
