பிள்ளையாரை வேண்டும் பொழுது என்ன சொல்லி குட்டி கொள்ள வேண்டும்

200

சுக்லாம்பரதரம் விஷ்ணும
சசிவர்ணம் சதுர்புஜம
ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
ஸர்வ .விக்நோப சாந்தய
விளக்கம்: இதில் கணேசரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
1. சுக்லாம் பரதர = வெள்ளை வஸ்த்ரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
2. விஷ்ணும் = எல்லா இடத்திலேயும் பரவி இருப்பவர்.
3. சசிவர்ணம் = நிலா மாதிரி பால்போன்ற நிறமுடையவர்.
4. சதுர்புஜ = நான்கு கைகள் உள்ளவர்.
5. ப்ரஸந்ந வதநம் = நல்ல மலர்ந்த முகம் உள்ளவர
இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடப்புறத்திலும், இடக் கையால் வலப்புறத்தி லும் மண்டையில் குட்டி கொள்வது முறை.
விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி…