இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சனை தீரும்

39

திருமணத்தடையை போக்கும், கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும், அருணகிரிநாதர் அருளிய இந்த சக்திவாய்ந்த மந்திரத்தை மனமுருகி வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் கை மேல் பலன் உண்டு.

இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சனை தீரும்
முருகன்
திருமணம் ஆகாத தங்களுடைய குழந்தைகளுக்காக, பெற்றோர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்து, தங்களுடைய பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளலாம். திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை, சண்டை சச்சரவுகள் என்று குடும்பத்தில் வந்து கொண்டே இருந்தால், அவரவரே இந்த மந்திரத்தை, அவரவர் வாயினால் உச்சரித்து மனதார, மனமுருகி வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் கை மேல் பலன் உண்டு. பிரிந்த தம்பதியினர், மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, தாராளமாக இந்த மந்திரத்தை உச்சரிக்க, கைமேல் பலன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள், 6 முறை உச்சரிக்க வேண்டும். ஜாதக தோஷத்தின் மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு கூட, அந்த தோஷத்தினால், ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்க கூடிய சக்தி, இந்த மந்திரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்காக அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் இதோ!

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து …… வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் …… வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப …… மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து …… குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த …… மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த …… அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி
றைஞ்சு மடியாரி டைஞ்சல் …… களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல
மர்ந்து அலைவாயு கந்த …… பெருமாளே.

திருமணமாகாத ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், இந்த மந்திரத்தை உச்சரிப்பதோடு சேர்த்து, சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை, பாக்கு, பூ சேர்த்த தாம்பூலத்தை, தானமாக கொடுத்து, 11 சுமங்கலி பெண்களை ஒன்றாக நிற்க வைத்து, அவளுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது, எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தால், உங்கள் வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைத்து, உங்களால் முடிந்த உணவை பரிமாறி, தாம்பூலம் கொடுத்து, ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.