இறைவனை வாழ்த்திப் பாடினால்…

75

இறைவனை வாழ்த்திப் பாடினால், நாமும் நன்றாக வாழ்வோம், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வார்கள். எனவே நாம் வாழ்வாங்கு வாழ, வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றி வணங்க வேண்டுமென்று மணிவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார்.

இறைவனை வாழ்த்திப் பாடினால்…
சிவன்
“திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால், அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கரிசனத்தோடு வந்து காட்சிகொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

‘நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என்நெஞ்சில்

நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!’

என்று இறைவனை வாழ்த்திப் பாடினால், நாமும் நன்றாக வாழ்வோம், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வார்கள். எனவே நாம் வாழ்வாங்கு வாழ, வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றி வணங்க வேண்டுமென்று மணிவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார். ஆனி உத்திரத்தன்று வழிபட்டால் தேனினும் இனிய வாழ்க்கை அமையும்.