Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 31.12.2020

இன்றைய ராசிப்பலன் – 31.12.2020

மேஷம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். கடன்கள் குறையும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும் அவை சுபசெலவுகளாகவே இருக்கும். உற்றார் உறவினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக பகை நீங்கும்.

கன்னி

இன்று சகோதர சகோதரி வழியில் அனுகூலம் உண்டாகும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவிகள் அறுதலை தரும்.

துலாம்

இன்று நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை. திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் பிற்பகலுக்கு பின் நற்பலன் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.38 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். தூர பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும் என்பதால் தவிர்ப்பது நல்லது.

மகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பணப் பிரச்சினை ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =

Most Popular