மோஹாந்தகார நிவஹம் வினிஹன்துமீடே
மூகாத்மனாம் அபி மஹாகவிதாவதான்யான் |
ஸ்ரீகாஞ்சிதேஶ ஶிஶிரீக்ருதி ஜாகரூகான்
ஏகாம்ரநாத தருணீ கருணாவலோகான் ||
ஊமையாய் இருப்பவர்களுக்கும் உயர்ந்த கவித்வ
சக்தியைக் கொடுப்பதில் தாராளமான ஸ்வாபவத்தை உடையவைகளும், ஶ்ரீ காஞ்சிதேசத்தை குளிர்ச்சி செய்வதில்
சிரத்தையுள்ள ஏகாம்பரநாதருடைய பத்தினியான
ஶ்ரீ காமாக்ஷியின் கருணை நிறைந்த கடாக்ஷங்களை மோஹமாகிற இருள் கூட்டத்தை போக்கடிப்பதற்கு வேண்டி ஸ்தோத்திரம் செய்கிறேன்.
