காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் நினைத்த காரியம் கைகூடும்

233

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை காலையில் எழுந்தவுடன் பாதங்கள் தரையில் படுவதற்கு முன்பு கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடும்.

இந்த மந்திரத்தை சொன்னால் நினைத்த காரியம் கைகூடும்அந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும். இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்தவுடன் பாதங்கள் தரையில் படுவதற்கு முன்பு கூற வேண்டும்.

‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’

“ப்ராதஸ்மரனம்” என்று கூறப்படும் இந்த மந்திரத்தின் பொருள் யாதெனில் சமுத்திரத்தை ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது பாதங்களை உன் மீது வைத்து நான் இன்று எழுகிறேன். அதை தயைகூர்ந்து பொறுத்துக்கொண்டு எனக்கு அருள்புரியுங்கள் என்பதே இதன் பொருள்.