Monday, October 23, 2023
HomeSlogamகள்ளழகர் வைகையில் இறங்குகிறார். அன்று உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்

கள்ளழகர் வைகையில் இறங்குகிறார். அன்று உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்

இதைப் பாடினால் கள்ளழகர் சகல வளமும் தருவார்.

1. ஓம் அழகர்மலை அழகனே போற்றி 2. ஓம் அன்பருக்கு அன்பனே போற்றி3. ஓம் அஞ்சிறைப் புள்ளரையனே போற்றி4. ஓம் அனந்தசயனப்பெருமாளே போற்றி5. ஓம் அறிதுயிலில் ஆழ்ந்தாய் போற்றி6. ஓம் அருள் ஈந்த அம்மானே போற்றி7. ஓம் அலங்காரப் பிரியனே போற்றி8. ஓம் ஆதிமூலம் ஆனவனே போற்றி9. ஓம் ஆலிலை துயின்றாய் போற்றி10. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி

11. ஓம் ஆயிரந்தலை சேஷசயனா போற்றி12. ஓம் ஆயிரம் பொன்சப்பரத்தாய் போற்றி 13. ஓம் ஆண்டாள் சூடிய அழகா போற்றி14. ஓம் ஆராவமுத பெருமானே போற்றி15. ஓம் ஆனை நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி16. ஓம் ஆழ்வார் தொழும் தேவா போற்றி17. ஓம் ஆபத்து நீக்கும் அண்ணலே போற்றி18. ஓம் இமையோர் தலைவா போற்றி19. ஓம் ஈகையின் இலக்கணமே போற்றி20. ஓம் ஈரம் மிக்க நெஞ்சினாய் போற்றி

21. ஓம் உலகளந்த உத்தமனே போற்றி22. ஓம் உள்ளங்கவர் கள்வனே போற்றி23. ஓம் உத்தமர் தொழும் தேவா போற்றி24. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 25. ஓம் ஊழிமுதல்வன் ஒருவனே போற்றி26. ஓம் எழில் தோள் அழகனே போற்றி27. ஓம் எழில் மேக வண்ணா போற்றி28. ஓம் ஏழு முனிவர்க்கருளினாய் போற்றி29. ஓம் ஏழுமலை நின்றாய் போற்றி30. ஓம் ஐவர்க்கு தூது வந்தாய் போற்றி

31. ஓம் ஒப்பிலி அப்பனே போற்றி32. ஓம் ஒளிமணிவண்ணனே போற்றி 33. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி34. ஓம் ஒளடதமாய் வந்தாய் போற்றி35. ஓம் கண் கண்ட தெய்வமே போற்றி36. ஓம் கஞ்சனைக் கொன்றாய் போற்றி37. ஓம் கருட வாகனப் பிரியா போற்றி38. ஓம் கார் மேக வண்ணனே போற்றி39. ஓம் கல்மாரி காத்து நின்றாய் போற்றி40.ஓம் கள்ளர்கோலத்தில் வந்தாய் போற்றி

41. ஓம் கண்ணபுரத்து அமுதே போற்றி42. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி43. ஓம் காஞ்சி வரதராஜனே போற்றி44. ஓம் காயாம்பூ மேனிவண்ணா போற்றி45. ஓம் குவலயம் காப்பாய் போற்றி46. ஓம் குளிர்மலை மாயவா போற்றி47. ஓம் கூர்மாவதார கொற்றவா போற்றி48. ஓம் கொற்றமலை உறை கோனே போற்றி49. ஓம் கோபாலா கோவிந்தா போற்றி50. ஓம் கோபியர் வாழ்வே போற்றி

51. ஓம் கோதண்டம் ஏந்தினாய் போற்றி52. ஓம் கோவர்த்தனம் தாங்கினாய் போற்றி53. ஓம் கோலமலை கோவிந்தா போற்றி54. ஓம் சங்கு சக்கரம் உடையாய் போற்றி55. ஓம் சர்வலோக நாயகனே போற்றி56. ஓம் சிந்தனைக்கினியானே போற்றி57. ஓம் சித்ராபவுர்ணமி நாயகனே போற்றி58. ஓம் சிலம்பாற்றுச் செல்வனே போற்றி 59. ஓம் சீக்கிரம் வந்தருள்வாய் போற்றி60. ஓம் சீனிவாசப் பெருமாளே போற்றி

61. ஓம் சுகவாழ்வு தரும் சுந்தரா போற்றி62. ஓம் சுந்தரவல்லி நாதனே போற்றி63. ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி 64. ஓம் சுந்தரராஜப் பெருமாளே போற்றி65. ஓம் தசரதன் செல்வமே போற்றி66. ஓம் தசாவதாரம் எடுத்தாய் போற்றி67. ஓம் தமிழ் பிரபந்தம் கேட்பாய் போற்றி68. ஓம் திருமாலிருஞ் சோலையனே போற்றி69. ஒம் திருமகள் கேள்வனே போற்றி70. ஓம் திருத்துழாய் முடியோனே போற்றி

71. ஓம் துருவன் போற்றும் தூயவா போற்றி72. ஓம் நந்தகோபன் குமரா போற்றி73. ஓம் நரசிங்க மூர்த்தியானாய் போற்றி74. ஒம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி75. ஓம் நாரதர் நாவில் நின்றாய் போற்றி76. ஓம் நாராயண மூர்த்தியே போற்றி77. ஓம் நல்லமனம் தருவாய் போற்றி78. ஓம் நிலமலை நின்றாய் போற்றி79. ஓம் நீண்டமலை நெடியானே போற்றி80. ஓம் நீலமேக நிறத்தினாய் போற்றி

81. ஓம் நூபுர கங்கையாடினாய் போற்றி82. ஒம் பக்தியில் நனைந்தாய் போற்றி83. ஓம் பக்தர்க்கு அருளும் பரமா போற்றி84. ஓம் பிரகலாதனை காத்தாய் போற்றி85. ஓம் பின்னை மணாளனே போற்றி86. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி87. ஓம் பூமாலை சூடினாய் போற்றி88. ஒம் பூவைப் பூ வண்ணனே போற்றி 89. ஓம் பையத்துயின்ற பரமனே போற்றி90. ஓம் பாற்கடல் பரந்தாமனே போற்றி

91. ஓம் மச்சாவதாரம் எடுத்தாய் போற்றி92. ஓம் மண்டூக மகரிஷி காத்தாய் போற்றி93. ஓம் மதில்சூழ் மலைக்கரசே போற்றி94. ஓம் மாலிருங்குன்று மணியே போற்றி95. ஓம் மாயோன் மணிவண்ணா போற்றி96. ஓம் யசோதையின் பிள்ளையே போற்றி97. ஓம் யதுகுலம் செய்த தவமே போற்றி98. ஓம் யமபயம் ஒழிப்பாய் போற்றி99. ஓம் ரகு குல ராகவனே போற்றி100. ஓம் வளமெல்லாம் தருவாய் போற்றி

101. ஓம் வராஹ மூர்த்தியே போற்றி102. ஓம் வாழ்வருளும் வள்ளலே போற்றி103. ஓம் வாமனனாய் வந்தாய் போற்றி 104. ஓம் விருஷபகிரியில் அமர்ந்தாய் போற்றி105. ஓம் வெண்ணெய் உண்ட வாயா போற்றி106. ஓம் வேணு கோபாலா போற்றி107. ஓம் வைகுண்ட வாசா போற்றி108. ஓம் வைகையில் எழுந்தருள்வாய் போற்றி! போற்றி!

ஓம் நமோ நாராயணாய !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 1 =

Most Popular