Monday, October 16, 2023
HomeSlogamதுன்பம் நீங்கி மோட்சம் பெற சொல்ல வேண்டிய காமாட்சி அம்மன் துதி!

துன்பம் நீங்கி மோட்சம் பெற சொல்ல வேண்டிய காமாட்சி அம்மன் துதி!

துன்பம் நீங்கி மோட்சம் பெற சொல்ல வேண்டிய காமாட்சி அம்மன் துதி!

காமாக்ஷி துதி:

காஞ்சி மாபுரியில் வாழும் காமகோடி வாவா!
வாஞ்சையுடன் எந்தனுக்கு வரம்ருள வாவா!
மாவடியின் கீழமர்ந்த மாமணியே வாவா!
சேவடி தந்திடும் சிவ சக்தியே வாவா!

பிருதியாகி வந்த பரிபூரணியெ நீ வா வா!
கதிவேறில்லை அம்மா என்னைக் காத்திடவே வா வா!
குஞ்சரனை ஈன்ற அம்ப கோதையே நீ வா வா!
சஞ்சிதமகற்றும் ஞானச் செல்வமே நீ வா வா!

பஞ்ச தசாட்சரி என்றன் நெஞ்சமதிலே வா வா!
தஞ்சமென்றுன் தாள்பணிந்தேன் தேவியே நீ வா வா!
அஞ்சலென்றுரைத் தென்னை ஆதரிக்க வா வா!
கஞ்சதள லோசனி காமாட்சியே நீ வா வா!

சர்வ சக்தியாய் விளங்கும் சாம்பவி நீ வா வா!
சங்கரி கிருபாகரி சடாட்சரி நீ வா வா!
கற்பகமளிக்கும் திவ்ய கற்பகமே நீ வா வா!
அற்புத நிலைதரும் அம்மையே நீ வா வா!

மாதவன் சகோதரி மங்களாம்பிகை நீ வா வா!
பூதலத்தோர் பணிந்து புகழும் பூவையே நீ வா வா!
கந்தனுகந்த அர்த்தநாரியே நீ வா வா!
நர்த்தனமிடும் உமையே நவமணியே வா வா!

அம்பா சிதம்பரி உன்னை நம்பினேன் வா வா!
அன்பே உருவாகி வந்த அம்பிகையே வா வா!
ராஜராஜேஸ்வரி அம்பா லலிதையே நீ வா வா!
தேஜோ மயமாகிய சௌபாக்யமே நீ வா வா!

திருமணி ஞானமணி சிந்தாமணியே வா வா!
மௌனமணி மோட்சமணி மும்மணியே நீ வா வா!
ஏகாட்சரி திரியாட்சரி ஷடாட்சரி நீ வா வா!
நவாட்சரி தசாட்சரி சோடாட்சரி நீ வா வா!
மேருவினில் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரி நீ வா வா!
ஸ்ரீசக்ர ஸ்வரூபி பிந்துவாசியே நீ வா வா!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

Most Popular