மகாலட்சுமி அஷ்டகம்

479

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித

திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா

செல்வ மகளான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்குரியஅஷ்டகம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் ஒரு முறை துதிப்பவர்களுக்கு இதுவரை செய்த பாப வினைகள் அனைத்தும் நீங்குகிறது. தினமும் காலை, மாலை என இரு முறை துதிப்பவர்களுக்கு வீட்டில் செல்வச் சேர்க்கையும், தானியங்கள் பெருக்கம் ஏற்படும். வறுமை நிலை அணுகாது காக்கும். தினந்தோறும் மூன்று முறை துதித்து வழிபடுபவர்களின் இதயத்திலும், வீட்டிலும் மங்களங்கள் அருளும் தெய்வமான மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறி வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் யோகத்தை அருள்வார்.