மகரிஷி வியாசர் காயத்ரி மந்திரம்

310

சமஸ்கிருத புலமை யாரிடம் மேலோங்கியிருக்கிறதோ, யார் ஒருவர் ராமபிரான், கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரைத் துதிக்கிறார்களோ, அவர்கள் வியாசரின் அம்சம் என்பார்கள்.

மகரிஷி வியாசர் காயத்ரி மந்திரம்
மகரிஷி வியாசர்
‘கிருஷ்ண துவைபாயனர்’ என்ற இயற்பெயரைக் கொண்டவர் இவர். பராசர முனிவருக்கும், சத்தியவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் மகனாக பிறந்தார். படைப்புத் தொழிலின் கடவுளான பிரம்மாவின் ஆணைக்கிணங்க, வேதங்களைத் தொகுத்து அளித்தவர். இதனால் ‘வேத வியாசர்’ என்று அழைக்கப்பட்டார்.

மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசத்தை படைத்த ஞானி இவர். படைத்த இதிகாசத்தில் தானும் ஒரு பாத்திரமாக விளங்கினார். தன் தாயின் கட்டளையை ஏற்று, குரு வம்சத்தை தழைக்கச் செய்தவர். குருச்சேத்திர யுத்தத்தை ஞான திருஷ்டியால் கண்டு, அவற்றை திருதராட்டிரனுக்கு உரைக்க சஞ்சையனுக்கு அருள் புரிந்தார். இவர் கலியுகம் முடியும் வரை வாழ்வதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. 18 புராணங்களையும் இவர் எழுதியதாக கூறுவர்.

சமஸ்கிருத புலமை யாரிடம் மேலோங்கியிருக்கிறதோ, யார் ஒருவர் ராமபிரான், கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரைத் துதிக்கிறார்களோ, அவர்கள் வியாசரின் அம்சம் என்பார்கள்.

இவருக்கான காயத்ரி மந்திரம்..

“ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தந்நோ வ்யாச ப்ரசோதயாத்”