கிழமை : புதன்கிழமை
( ஆவணி 31 )
தர்ப்பண சங்கல்ப மந்தரம்.
முதலில்
ஆசமனம்….
அச்யுதாய நமஹ: அனந்தாய நமஹ: கோவிந்தாய நமஹ:
பவித்ரம் (மூன்று புல்) வலது கை பவித்ர விரலில் (மோதிர விரல்) போட்டு கொள்ளவும்…
இரண்டு கட்டை தர்பபைகளை காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். (ஜலத்தால் கை அலம்பவும்) மூன்று கட்டை தர்பபைகளை பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
*சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே* என்று கூறிக்கொண்டே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.
ப்ராணாயாமம்:
ஒம் பூஹு., ஓம் புவஹ., ஓகும் சுவஹ., ஓம் மஹஹ:., ஓம் ஜனஹ:., ஓம் தபஹ:., ஓகும் சத்யம்., ஓம் தத் ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ: ப்ரசோதயாத். ஓமாபோ ஜோதீ ரஸ: அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்ப்புவஸ்ஸுவரோம்.
*சங்கல்பம்*
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
( வைஷ்ணவர்கள் ஸ்ரீபகவதாக்ஞயா – ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்த்தம்., பகவத் ப்ரீத்யர்த்தம்., ஸ்ரீபகவத் கைங்கர்ய ரூபம் )
அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா., யஸ்மரேத் புண்டரீகாக்ஷம்., ஸபாஹ்ய, அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம்., பாபம்., கர்மணா ஸமுபார்ஜிதம்., ஸ்ரீராம., ஸ்மரணேனைவ., வ்யபோஹதி நஸம்ஸய: ஸ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம்., விஷ்ணுரேவச யோகஸ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்., ஸ்ரீ கோவிந்த., கோவிந்த., கோவிந்த., அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய., அத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத., வராஹகல்பே., வைவஸ்வத., மன்வந்த்ரே அஷ்டாவிம்ஸதி., தமே., கலியுகே., ப்ரதமேபாதே., ஜம்பூத்வீபே., பாரத வருஷே., பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஸகாப்தே., அஸ்மின் வர்த்தமாணே., வ்யாபஹாரிகே., ப்ரபவாதி., ஷஷ்டி., ஸம்வத்ஸராணாம்., மத்யே….. *சார்வரி நாம ஸம்வத்ஸரே தஷிணாயணே வருஷருதௌ ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே சதுற்தஸ்யாம் புண்யதிதெள ஸௌம்யவாஸர யுக்தாயாம்., மகா நக்ஷத்ர யுக்தாயாம்., சித்தி (உபரி) ஸாத்யநாம யோக., பத்ர (உபரி) சகுனி கரண ஏவங்குண விஸேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சதுற்தஸ்யாம் புண்யதிதௌ….. (ப்ராசீனா வீதி – பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்)* …………. கோத்ராணாம் (அப்பா வழி கோத்ரம்)
……………. (அப்பா., தாத்தா., கொள்ளு தாத்தா பெயர்) ஸர்மணாம்
வஸுமருத்ராதித்ய., (வஸு., ருத்ர., ஆதித்ய) ஸ்வரூபாணாம் அஸ்மத்., பித்ரு., பிதாமஹ., ப்ரபிதா மஹாணாம்.
(இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு., பிதாமஹீ., ப்ரபிதாமஹீனாம்…..
(பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்)
பிதாமஹீ., பிது: பிதாமஹீ., பிது: ப்ரபிதா மஹீணாம்
(தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்)
…………… கோத்ராணாம் ………. ஸர்மணாம் வஸுருத்ராதித்ய., ஸ்வரூபாணாம் அஸ்மத்., ஸபத்னீக., மாதாமஹ., மாது: பிதாமஹ., மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் தத் தத் கோத்ராணாம் தத் தத் ஸர்மணாம்
வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்க்கத்வய அவசிஷ்டாணாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ருணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்., ஸிம்மங்கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு *அத்யதின ப்ரயுக்த மஹாளயபக்ஷ ஸ்ராத்தம் திலதர்ப்பண ரூபேன அத்ய கரிஷ்யே……….*
(கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்ப்பைகளை மட்டும் கீழே போடவும். பூணுலை வலம் போட்டுக்கொண்டு கையை ஜலத்தால் துடைத்துக்கொண்டு மீண்டும் பூணலை இடமாக போட்டுக்கொண்டு……)
*ஆவாஹன மந்திரம்* (வேத., ஸுத்ரங்களுக்கு எற்ப மாறுபடும்)
“ஆயாத பிதர., ஸோம்யா., கம்பீரை., பதிபி., பூர்வ்யை., ப்ரஜாம் அஸ்மப்யம்., தததோ ரயிஞ்ச., தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே (ஆச்சார்யாதி) ஸகாருண்ய வர்க்கத்வய பித்ருன் ஆவாஹயாமி…”
என்று கூறி கட்டை தர்ப்பைகளை கூர்ச்சத்தின் மேல் வைக்கவும்.
*ஆஸன மந்திரம்* (வேத., ஸுத்ரங்களுக்கு எற்ப மாறுபடும்)
“ஸ்க்ருதாச்சின்னம் பர்ஹி., ஊர்ணாமிருது ஸ்யோநம் பித்ருப்யஸ்த்வா., பராம்யஹம்., அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதா மஹாச்ச அனுகைஸ்ஸஹ (ஆச்சார்யாதி) ஸகாருண்ய வர்க்கத்வய பித்ருணாம் இதமாஸனம்” என்று கூறி எள்ளை கூர்ச்சத்தில் மறித்து போடவும்.
“ஸகலாராதணை ஸ்வர்ச்சிதம்” என்று கூறி எள்ளை கூர்ச்சத்தில் மேல் போடவும்.
{பிறகு *அவரவர் வேத., ஸுத்ர வாக்யபடி ~ மந்திரங்களை கூறி* பித்ரு வர்க்கத்திற்கும்., மாத்ரு வர்க்கத்திற்கும்., தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளுடன்., ஜலத்தை (3 தடவை) மறித்து விடவும்}
தத்தத் கோத்ரான் தத்தத் ஸர்மண: வஸுவஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க்கத்வய அவசிஷ்டான் ஸர்வான்காருண்ய பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை எள்ளும்., ஜலமும்)
ஞாதாக்ஞாத., வர்க்கத்வய., பித்ரூன்., ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தடவை எள்ளும்., ஜலமும்)
கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்
*மந்த்ரம்*
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத., த்ருப்யத., த்ருப்யத…..
*உபவீதி* (பூணுலை வலமாக போட்டுக்கொள்ளவும்)
*ப்ரதக்ஷிண மந்த்ரம்*
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: ஏவச., நமஸ்வதாயை., ஸ்வாஹாயை., நித்யமேவ., நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச தானிதானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே
*ப்ராசீனாவீதி*(பூணுலை இடமாக போட்டுக்கொள்ளவும்)
*யதாஸ்தான மந்த்ரம்* (வேத ஸுத்ரங்களுக்கு எற்ப மாறுபடும்)
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம்., தததோரயிஞ்ச., தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச // அஸ்மாத்., கூர்ச்சாத்., (ஆச்சார்யாதி) ஸகாருண்ய வர்க்த்வய., பித்ரூன்., யதாஸ்தானம்., ப்ரதிஷ்டாபயாமி //
தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்
*மந்த்ரம்*
ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய., கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஸோதகை: த்ருப்யத., த்ருப்யத., த்ருப்யத…
*உபவீதி*
*மந்த்ரம்*
ஹிரண்ய கர்ப., கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஸாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர – ஸாத்குன்யம் காமயமான: யதாஸக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம
கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி முடிந்தவுடன் கீழே விடவும்
காயேநவாசா., மனஸேந்த்ரியைர்வா., புத்யாத்ம நாவா., ப்ருகிருதேஸ்வபாது., கரோமியத்யது., ஸகலம் பரஸ்மை., நாராயணாயேதி ஸமர்ப்பயாமி., திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து.
பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்.
