Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 16.09.2020

இன்றைய ராசிப்பலன் – 16.09.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு கறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் விலகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

மிதுனம்

இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும்.

கடகம்

இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

சிம்மம்

இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும். மன மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். எளிதில் முடியக்கூடிய வேலைகள் கூட தாமதமாக முடியும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் உதவியுடன் லாபம் அடைவீர்கள்.

துலாம்

இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவ உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கும்பம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் இனிய நிகழச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =

Most Popular