உங்களுடைய பலவகையான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் மந்திரங்கள்

41

உங்களுடைய பலவகையான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை தரும், சில ஒருவரி மந்திரங்களையும் அந்த மந்திரத்தை எந்த இடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் பட்சத்தில், குறைந்தது 15 நாட்களில் பலனை அடைய முடியும் என்ற ஒரு சூட்சுமத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மந்திரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் குறிப்பிட்ட எந்த பிரச்சனைக்கு, எந்த மந்திரம் என்று தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. மன அமைதியான வாழ்க்கை தேவை என்றால், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை 108 முறை, 15 நாட்கள் உச்சரித்து வரவேண்டும். விரைவில் கடன் தீர ‘ஓம் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை, 15 நாட்கள் உச்சரிக்க வேண்டும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ‘ஓம் வித்யாசரஸ்வதியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

மன பயம் நீங்க ‘ஓம் நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வாருங்கள். நம்முடைய குடும்பம் ஒற்றுமையாக, சந்தோஷமாக, வளமாக இருக்க ‘ஓம் உமாமஹேஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். வண்டி, வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேர்வதற்கு ‘ஓம் வர லட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

தீராத துன்பங்கள் தீர்வதற்கும், உடலில் இருக்கும் பிணி நீங்குவதற்கும், ‘ஓம் ஆஞ்சநேயாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ஆனால் இந்த மந்திரங்களை எந்த இடத்தில் அமர்ந்து, உச்சரித்தால் 15 நாட்களில் பலனை அடையலாம்?