டிசம்பர் 16 ! மார்கழி 1 மாத பிறப்பு … பாவை நோன்பு தொடக்கம்.

97

மார்கழியின் ஏற்றத்தை புரியவைத்தாள் வாழியே !
மார்கழியில் மாலவனை துயிலெழுப்பினாள் வாழியே !
மார்கழியில் திருப்பாவை தந்தவள் வாழியே !
கோதையே கொடியே கோவிந்தன் நங்கையே
சோதியே சுடரே சுடமரின் மணி விளக்கே
யாதவக் குலக் கொழுந்தாம் யசோதை மைந்தனாம்
மாதவனைக் கைப்பிடித்தாய் மாதவம் செய்திட்டே
ஆடிப்பூரத்துதித்தவளே ஆண்டாளென்பவளே
சூடிகொடுத்தவளே சுந்தரியே சௌந்தரியே
கோடிப்பொன் போன்றவளே கொஞ்சும் அழகுடையவளே
பாடிப்போற்றிடுவேன் நான் பங்கயச்செல்வியையே
பாவையாய் உதித்தவளே பட்டர்பிரான் பைங்கிளியே
பூவையர் நோன்பு செய்து புண்ணியம் பெற்றிடவே
கோவையாய் பாட்டிசைத்த கோலமா மணிவிளக்கே
சேவையே செய்தவளே செங்கமலச் செல்வியே
திருமகளே திரவியமே திருவில்லிபுத்தூராளே
கருநீல வண்ணனின் கருணை மிகப் பெற்றவளே
உரலில் கட்டுண்டோனை உளமாரத் தொழுதவளே
அரவின்மேல் துயில் கொள்ளும் அரங்கனின் ஆரணங்கே
கண்ணனது பூமாலை தனைச் சூடி மகிழ்ந்தவளே
எண்ணந்தனில் அவன் த்னையே ம்ணம் முடிக்க வரித்தவளே
திண்ணமுடன் நின்தந்தை திருமணத்தை முடித்துக் கார்
வண்ணனுடன் வாழந்திடவே வாயார வாழ்த்தினரே
பங்கயச் செல்வியே பரிமளமே பசும்பொன்னே
எங்கும் நிறைந்தவளே ஏற்றம் மிக வாழ்பவளே
மங்கையர் மணம்முடித்து மக்கட்பேறும் பெற்றிடவே
நங்கையே நப்பின்னையே நல்வரந்தான் நல்குவையே !
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !