ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம் ஸ்பெஷல் !

460

தோரணப் பந்தலிலே-பாண்டியன்
தோகை கயல்விழியின் கல்யாண வைபவாமாம்
பூரணமாகவே பல்வகை மணியாரம்
புதுமலர் மாலையுடன் புன்சிரிப்புடன்நின்றாள்
மறை ஓதிட நான்முகனும் அமர்ந்திட
பிறையணி இறைவனும் சிறப்புடன் வந்திட
தன்திருக்கரத்தாலே திருமகள் தொழும் மாலே
தங்கையின் மலர்கரத்தை சுந்தரனிடம் வைத்தான்
சந்தன குங்குமம் சேடிகள் தந்திட
வந்த விருந்தினர்சிந்தை மகிழ்ந்திட
விந்தை விந்தை என தேவபூதகணம்
வியந்து அறுசுவை உனவு உண்டிட
கண்டில்லாத பல சீர்வகை வந்திட
எண்ணில்லாத நவரத்னம் குவிந்திட
மண்டலம் புகழ்ந்திட
எங்கும்காணாத
மாபெரும் திருநாள்
மதுரை தலமதில்.