Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 04.05.2020

இன்றைய ராசிப்பலன் – 04.05.2020

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிள்னைகளால் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்
இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுப்பாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல செய்தி கிடைக்கும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் ரீதியாக உள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வந்து மன மகிழ்ச்சி ஏற்படும். புதிய பொருட்கள் சேரும்.

சிம்மம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியாக வேலைபளு அலைச்சல் இருந்தாலும் அதற்கு ஏற்ப அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

கன்னி
இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

துலாம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

தனுசு
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்
இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாமல் கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது தவிர்ப்பது தற்சமயத்திற்கு நல்லது.

மீனம்
இன்று உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றேர்களின் ஆதரவு சிறப்பாக இருந்து மகிழ்ச்சி ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =

Most Popular