நரசிம்மர் பிரபத்தி ஸ்லோகம்!

273

பக்தர்களின் பிராத்தனைகளை நிறைவேற்றும் நரசிம்மர் பிரபத்தி ஸ்லோகம்!

தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் ஸ்ரீ நரசிம்மர் பகவான். நரசிம்மரின் படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள். தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது.

நரசிம்மர் ஸ்லோகத்தை சொல்லி வழிபடும் முறை:

இந்த நரசிம்மர் ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.
கைமேல் பலன் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.

பலன்கள்:

கடன் ப்ரசனை , நோய் வாய்படுதல், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் ஏற்படுதல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காக இருந்தாலும் சரி இந்த நரசிம்மர் பிரபத்தியைச் சொல்லலாம். பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்று பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

நரசிம்மர் ப்ரபத்தி ஸ்லோகம்:

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

இந்த ஸ்லோகம் முறைப்படி உச்சரிக்க முடியாதவர்கள், சொல்ல இயலாதவர்கள், கீழ்க்கண்ட வாக்கியங்களை தமிழில் சொல்லி வழிபடலாம்.

“நரசிம்ம பிரபத்தி”யின் தமிழாக்கம் இது:-

நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை. சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே! அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே! எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே! இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுல கத்திலும் நரசிம்மரே!எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே! நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.