Monday, October 16, 2023
HomeArthamulla Aanmeegamநவக்கிரகத்தை எப்படி வழிபட வேண்டும்?

நவக்கிரகத்தை எப்படி வழிபட வேண்டும்?

நவக்கிரகத்தை எப்படி வழிபட வேண்டும்?

கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு கோயில் கோபுரத்தை எப்படி வழிபட வேண்டும், நுழை வாயிலை எப்படி வழிபட வேண்டும், கொடிமரம், பலிபீடம், பிரகாரம், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் என்று ஒவ்வொன்றையும் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து அறிந்திருப்பதில்லை.

நான் எல்லோரையும் சொல்லவில்லை. அறியாதவர்கள் பற்றி தான் சொல்கிறேன். நவகிரகங்களை வழிபடும் போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும் என்றும், ராகு கேதுவை வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்றும் பலரும் நினைக்கின்றனர். இப்படி சுற்றலாமா? என்பதில் சந்தேகமும் இருக்கிறது.

உண்மையில் நவக்கிரகத்தை எப்படி சுற்ற வேண்டும்? எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம் வாங்க…ஒருவரது பூர்வ புண்ணியத்தின்படி அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லோருக்குமே ஜாதகத்தில் நவக்கிரகங்கள் சாதகமாக அமைந்திருப்பதில்லை. கிரக நிலைகளின் சுழறிசி காரணமாக நவக்கிரகங்களின் தாக்கம் உண்டாகிறது.

அப்படி உண்டாகும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கோயிலுக்கு சென்று நவக்கிரகத்தை வழிபாடு செய்கிறோம். நவக்கிரகங்களை 9 முறை சுற்றினாலே போதுமானது. எல்லா தெய்வங்களை வணங்கிய பிறகு தான் கடைசியாக நவக்கிரகத்தை சுற்றி வர வேண்டும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்க கூடாது என்பது ஐதீகம்.

நவக்கிரக வழிபாடும், பலன்களும்:

  1. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் உண்டாகும்.
  2. சந்திரனை வழிபட புகழ் உண்டாகும்.
  3. புதன் பகவானை வழிபட நற்புத்தி கிடைக்கப் பெறுவீர்கள்.
  4. செவ்வாய் பகவானை வழிபட தைரியம் அதிகரிக்கும்.
  5. குருவை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் உண்டாகும்.
  6. சுக்கிர பகவானை வழிபட நல்ல மனைவி அமையப் பெறுவாள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
  7. சனி பகவானை வழிபட ஆயுள் பலம் அதிகரிக்கும்.
  8. ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.
  9. கேது பகவானை வழிபட ஞானம் பெருகும், மோட்சம் கிட்டும், ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்திற்கு உரிய கடவுளை வழிபட கூடுதல் பலன் கிட்டும்.

பலன் தரும் பாடல் – திருஞானசம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
இந்தப் பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =

Most Popular