நவக்கிரங்களின் அருளை அள்ளித் தரும் அருமந்திரம்

527

நவக்கிரங்களை சுற்றி வலம் வருகையில், ஒன்பது முறை இந்த ஸ்லோகத்தை கூறிக் கொண்டே வலம் வந்தால், கவனம் சிதறுவதை தடுப்பதுடன், நவக்கிரங்களுக்கும் ஒன்பது முறை வந்தனம் செய்த பலன் கிடைக்கும்.

சனிக்கிழமை தோறும் சிவன், பிள்ளையார் கோவிலுக்கு சென்று நவக்கிரகங்களை வலம் வருபவரா நீங்கள்? வெறும் வேண்டுதலோடு மட்டுமின்றி, நவக்கிரங்களை போற்றி துதிக்கும் ஸ்லோகத்துடன் வலம் வந்தால் மேலும் சிறப்பு.

ஆம்… ஒன்பது கிரங்களுக்கும் சேர்த்து ஒரே ஸ்லோகம். நவக்கிரங்களாகிய உங்களை துதித்து போற்றுகிறேன். என்னை காத்தருள்வீர்களாக என வேண்டும் இந்த ஸ்லோகத்தை, தினமும் காலை குளித்து முடித்த பின் சாமி படத்தின் முன் நின்று சொல்வதால், நவக்கிர தோஷம் விலகுவதோடு, அவர்களின் அருள் கடாக்ஷமும் கிடைக்கும் என்பது ஆன்மீக பெரியோர் வாக்கு.

ஆதித்யாச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமோ நமஹ:

ஆதித்யநாகிய சூரியன், சோமன் என அழைக்கப்படும் சந்திரன், மங்களன் என அழைக்கப்படும் செவ்வாய், புத பகவான், குரு பகவான், சுக்கிரன் ஆகியோருடன், சனி பகவான் மற்றும் நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகிய நவக்கிரங்களையும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்பதே இதன் பொருள்.

நவக்கிரங்களை சுற்றி வலம் வருகையில், ஒன்பது முறை இந்த ஸ்லோகத்தை கூறிக் கொண்டே வலம் வந்தால், கவனம் சிதறுவதை தடுப்பதுடன், நவக்கிரங்களுக்கும் ஒன்பது முறை வந்தனம் செய்த பலன் கிடைக்கும்.