எத்துறையாயினும் புகழ் கிடைக்க சொல்லவேண்டிய ஸ்லோகம்

440

வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ – கும்பப்ரக்குதிபி:
ஸமாரப்தாம் முக்தா மணிபி-ரமலாம் ஹாரலதி காம்
குசாபோகோ பிம்பாதர – ருசிபி ரந்த: சபலிதகாம்
ப்ரதாப-வ்யாமிச்ராம் புரதமயிது: கீர்த்திமிவதே.

 

அம்மா! யானையின் தலையில் தோன்றும் முத்து கர்ப்பூர வர்ணம் உள்ளது. கஜாசுரனை வதைத்த பின் அவன் தலையில் உள்ள முத்துக்களை எடுத்து தேவிக்கு மாலையாகப் பரிசளித்தார், ஈசன். அதில் தேவியின் உதட்டு சிவப்பு பிரதிபலித்து மாலை ஒரு பக்கம் பார்த்தால் சிவப்பாகவும், மறுபக்கம் வெள்ளையாகவும் ஜொலிக்கிறது. சிவப்பு வீரத்திற்கும், வெள்ளை புகழுக்கும் அடையாளம். அந்த இரண்டையும் தேவி நீ எனக்கு அளவில்லாமல் தர வேண்டும்.