எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ

344

ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் |
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

இந்த ஸ்லோகம் சொல்லும் பொருள் இதுதான்.

‘எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ,அந்த இடங்களில் எல்லாம் கண்களில் நீர் பெருக்கெடுக்க, பக்திப் பரவசத்துடன் அமர்ந்திருக்கும் நபர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்து கொள்.’

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !