புரட்டாசி ஸ்பெஷல் ! திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்..

49

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் ”
கோசலை குமரா! ஸ்ரீராமா! பொழுது புலர்கிறதே… தெய்விகத் திருச் சடங்குகள் செய்ய எழுந்தருள்வாய் புருஷோத்தமா!
ஆஹா! இனிய மெட்டு, செம்மையான பொருள், ஆழ்ந்த கருத்து, அழகிய ராகத்துடன், திருப்பதி திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் தெய்விகப் பாடல் – ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.
இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேன் குரலில் நம் செவிக்குள் பாய்ந்து, நமக்குள் இருக்கும் இறை சிந்தையையும் பக்தியையும் தட்டியெழுப்பிச் சிலிர்ப்பூட்டும் தெய்வப் பிரவாகம் – ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.
இறைவனைத் துயிலெழுப்பவே சுப்ரபாதம். தமிழில் ‘திருப்பள்ளி யெழுச்சி’ என்பார்கள்.
பக்தியில் சிறந்த நிலை சரணாகதி. ‘எல்லாம் அவன் செயல்’ என்று முழுக்க முழுக்க தன்னை அவனிடத்தில் ஒப்படைப்பதே சரணாகதி தத்துவம்.
ஆழ்வார்களில் தொண்டர டிப் பொடியாழ்வாரும், சைவ சமயத்தில் மாணிக்கவாசகரும் திருப்பள்ளியெழுச்சி பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும்கூட சுப்ரபாதம் உண்டு.
இவை அனைத்துமே விசேஷமானவை. எனினும், ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி, விஸ்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது.
ஸ்ரீராமபிரானின் பால பருவம். அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர், தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும் அழிக்கவும் ஸ்ரீராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக் கொண்டார். தசரதரோ தயங்கினார். பின்னர், குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி ஸ்ரீராமனை அனுப்பச் சம்மதித்தார். கூடவே, லக்ஷ்மணனையும் அனுப்பி வைத்தார்.
விஸ்வாமித்திரர்
வழியில் அமைந்திருந்த பல புண்ணியத் தலங்களின் மகிமைகளையும், மகான்களின் சரிதைகளையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவு வேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் ஸ்ரீராமனும் லட்சுமணனும் விஸ்வாமித்ர மகரிஷியுடன் கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள்.
பொழுது புலர்ந்தது. அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு, நெகிழ்ந்தார் விஸ்வாமித்ர மகரிஷி. மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார்.
அடுத்தநாள் கார்த்தால,
“கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே. உத்திஷ்ட்ட நரஷார்தூலா, கர்த்தவ்யம் தெய்வமான்னிகம்”
அப்படின்னு சொல்லி, விஸ்வமித்ரர், இந்த மங்களாஸாஸனம் குழந்தைய எழுப்பறார்.
இந்த வரிக்கு அவவளவு மகிமை, ராமரை வந்து எழுப்பறார்,
கௌசல்யா சுப்ரஜா ராமா ன்னு எழுப்பறார்.
கௌசல்யையுடைய குழந்தையே அப்படின்னு. அதாவது இந்த ராமன் தூங்கற அழகை பார்த்து, தினம் இந்த மாதிரி தூங்கற அழகை பார்த்து, குழந்தைய எழுப்பற பாக்கியம் அந்த கௌசல்யைக்குதானே கிடைச்சதுன்னு, கௌசல்யா சுப்ரஜா ராமா ன்னு சொல்றார். பூர்வா கிழக்கு திக்குல, சந்த்யா ப்ரவர்த்ததே சந்த்யா காலம் வருது அப்படின்னு.
உத்திஷ்ட்ட நரஷார் தூலா, கர்த்தவ்யம் தெய்வமான்னிகம்,
காரியங்களெல்லாம் பண்ணனும், சந்த்யவந்தனங்கள் பண்ணனும்ன்னு எழுப்பறார். அதாவது, நீ கௌசல்யைக்கு பிள்ளையா, பூமில அவதாரம் பண்ணியிருக்க இல்லையா, அதனால நீ என்ன பண்ணறயோ, அதை பாத்துண்டு தான் எல்லாரும் பண்ணுவா, அதனால, நல்ல வழிய எல்லாருக்கும் காமின்னு சொல்லி எழுப்பறார். அப்புறம் எழுந்து சந்த்யவந்தனம் பண்றார்.
ஆக முதன்முதலில் இந்த வரியைக் கொண்டே துவங்குகிறது, இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்
திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்பவதாகவும், அடுத்து அவன் பெருமையை தெரிவிக்கும் விதமாகவும், அடுத்து அவனைச் சரணடைந்து, இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது.
அதிகாலைப் பொழுதில் தீப ஒளியில் சுடர்ஜோதியாய் அருளும் திருவேங்கடவனை, திருமகள் நாயகனைக் காணக் கண்கோடி வேண்டும்.
அனுதினமும் திருவேங்கடவனின் திருப்பள்ளியெழுச்சியை கேட்பதும் பாடுவதும் மிக்க புண்ணியம் !
ஓம் நமோ வேங்கடேசாய !
கோவிந்தா ஹரி கோவிந்தா !