Sunday, October 15, 2023
HomeSlogamராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.....!!!

ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே…..!!!

யோ நித்யமச்சுத பதாம்புஜ
யுக்மருக்ம வ்யாமோஹ
ததிதராணி த்ருணாயமேனே

அஸ்மத் குரோர் பகவதோஸ்ய
தயைக ஸிந்தோ ராமானுஜஸ்ய
சரணௌ சரணம் ப்ரபத்யே
-கூரத்தாழ்வார்

யாரொருவர் எப்போதும் அழிவற்ற எம்பெருமானின் திருவடிகளாகிற பெரு நிதியின் மேலுள்ள அன்பினால் மற்ற விஷயங்களை துரும்பாக எண்ணினாரோ அப்படிப்பட்ட என்னுடைய குருவும் பகவானுமாகிய
கருணைக்கடலான ஸ்ரீ ராமானுஜருடைய திருவடிகளை சரணமடைகிறேன்.

உபவீதிநமூர்த்வ
புண்ட்ர வந்தம்
த்ரிஜகத் புண்யபலம்
த்ரிதண்ட ஹஸ்தம் |

சரணாகத
ஸார்த்தவாஹ மீடே
சிகயா சேகரிணம்
பதிம் யதீநாம் ||

ஸ்வாமி தேசிகன் ♦ யதிராஜஸப்ததி (11)

பகவத் அநுபவத்தைப்போல, பூர்வாசார்யர்களை அனுபவிப்பதும்,
சிஷ்யர்களுக்கு மிகவும் தேவையானது . இதற்கு உதவுவது ஆசார்யனின் திருமேனி ஸ்வரூபத்தை மனத்தில் க்ரஹிப்பது; பிறகு, அவர் ஆக்ஜாரூபமான கைங்கர்யங்களைச் செய்வது; ஆகமரீதிப்படி பகவானைத் த்யானித்து, ஆராதிப்பது.
ஸ்ரீ அப்புள்ளார் சொல்ல, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ உடையவரின்
திருமேனி சௌந்தர்யத்தை மனத்தில் தரித்தவர். அதனால், த்யாநித்ததை, அப்படியே வருணிக்கிறார்.

யதிராஜரின் சிவந்த திருமேனியில், திருமார்பில் பளிச்சென்று
வெண்மையாக விளங்கும் யஜ்ஞோபவீதம்; பிறகு, திருமுகமண்டலத்தில்
பளிச்சிடும் ஊர்த்வபுண்டரம் ( திருமண்ணும் ஸ்ரீசூர்ணமும் );
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானைத் தன்னுடைய த்ரிதண்டத்தில் ஆவாஹநம் செய்திருப்பதால், அந்தத்
த்ரிதண்ட ஹஸ்தம்; ஸ்ரீநம்மாழ்வாரைப் பின்பற்றி , பெரியபெருமாள் -பிராட்டி– திவ்யதம்பதியரிடம் , பங்குனிஉத்ர நந்நாளில் , சரணாகதியை அனுஷ்டித்தவர்; இவ்வளவு பெருமைபெற்ற , எதிராஜரைத் துதிப்போம்.

ஆசார்யன் திருவடிகளே சரணம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =

Most Popular