சகல செல்வம் சேர உச்சிஷ்ட கணபதி மந்திரம்

541

இத்துதியை எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கலாம். இந்த உச்சிஷ்ட கணபதி மந்திரத்தால் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.

சதுர்ப்புஜம் ரக்ததனும் த்ரிநேத்ரம்
பாசாங்குசௌ மோதபோத்ர தநிதௌ
கரைர் ததானாம் ஸர ஸீருஹஸ்தம்

உன்மத்தம் உச்சிஷ்ட கணேசமீடே
ஓம் கம் ஹஸ்தி பிசாசி லிகே ஸ்வாஹா:

– உச்சிஷ்ட கணபதி மந்திரம்

பொதுப் பொருள்: நான்கு கரங்கள் கொண்டவர், தன் கரங்களில் அங்குசம், பாசம், மோதக பாத்திரம், தந்தம் போன்றவற்றை தரித்திருப்பவர். முக்கண்ணர். தாமரை மலரில் அமர்ந்தருள்பவர். அதிக மதம் கொண்டவரான உச்சிஷ்ட கணபதியை சரணடைகிறேன்.

இத்துதியை தூங்கி எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்து ஜபம் செய்தால் சகல செல்வங்களும் சேரும். நியம நிஷ்டை ஏதும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இந்த ஜப மந்திரத்தால் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.